
"அங்கு கூகுள் சேர்ச், திறந்த புத்தக பரீட்சை, பல்தேர்வு விடைகொண்ட பரீட்சை என மனனம் செய்யும் புத்திசாதுரியம் அற்ற ஒரு குருகுல முறையில் இருந்து வேறுபட்டு சுகந்திரமான கற்றல் பரப்பில் மாணவர்கள் வளர்த்து விடப்படுகின்றனர்".

இங்கு எமது மாணவர்கள் ஏதாவது சுதந்திரமாக எழுதினால் இது எந்தப்புத்தகத்தில் எவர் சொன்னது எனக் கேட்டு சொந்தப்புத்திக்கு வளராத ஒரு ஆட்டுமந்தைகளாக எமது மாணவர் சமுகம் வளருகிறதா என்ற மறைமுக கேள்வி தொக்கு நிக்கிறது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை அவர்களுக்கு கற்பிப்பவர்கள்கள் அந்த பரந்த மனதுக்கு சொந்தக்காரராக வளர்க்கப்பட்டிருக்கவேண்டும் அவர்களும் அவ்வழியே வந்தவர்கள். அதனால்தான் 4% விகிதத்தில் எமது பொருளாதார வளர்ச்சி நின்று நாறுகின்றது.
நீ எதை நினைக்கிறாயோ அதை உனது சொந்த கருத்தாய் வெளிப்படுத்தலாம், சொந்த மாக சிந்தித்து எழுதலாம், புத்தகத்தில் உள்ளவை அது இன்னொருவர் கருத்து சரியோ பிழையே எனது கருத்தை நான் வெளிப்படுத்தும் களமாக நான் அமெரிக்காவில் படித்தகாலத்தில் கற்றுக்கொண்டவைதான் இன்று இந்த இடத்தில் என்னை நிற்க வைத்திருக்கின்றது என்றார்.
நம்ம எப்பப்பா எங்கள் இளைஞர் படையை இப்படி ஒரு ஆற்றலுள்ள, திறமை வாய்ந்த, சாதுரியமான, துணிச்சலான, கூர்மையுள்ள, உற்பத்திதிறனுள்ள, தூரநோக்கம் கொண்ட ஒரு ஊழியப்படையை குறிப்பாக எமது தமிழ் மக்களிடையே உருவாக்குவது?
20 விகித வறுமை, 25,000 கணவன் அற்ற குடும்பங்கள், வேலையற்ற இளைஞர்கள், அதிகம் தங்கிவாழுகின்ற குடும்பங்கள், அதிக குறைவருமானமுள்ள குடும்பங்கள், நலிவுறும் தன்மையில் விழிம்பில் நிற்கும் சமுகம் அத்துடன் அரசியலில் அநாதைகள் என எல்லா வகையிலும் குட்டிச்சுவராக இருக்கும் எமது மக்களை எடுத்தேத்த பாடசாலை பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் சென்று, எமது நாட்டில் இருந்து அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு சென்று பல திறமைகளை அறிவாற்றலை, நுட்பங்களை அறிந்தவர்கள் இங்கு பருவகால விடுமுறையில் வரும்போது உங்களது அனுபவங்களை, வெற்றியின் இரகசியத்தை, வழிவகைகளை இந்த இளஞ்ஞர்களிடையே இலவசமாக சொல்லி வழிகாட்டுங்கள் உறவுகளே அதற்கு நான் வழி செய்து தருகிறேன்.
அதுபோல் முக்கிய தொழில் முயற்சியாளர்கள் இளைஞர்களை சந்தித்து அவர்களை ஆற்றுப்படுத்துங்கள், ஓய்வுபெற்ற பெரிய அதிகாரிகள் கொண்ட ஒரு பூழை அமைத்து அவர்களது பல அனுபவங்களை அப்பப்போ பெற்று எமது குறைகளுக்கான ஆக்கபூர்வமான தந்திரோபாயங்களை வகுத்து அதை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துங்கள் அப்போ நாமும் தலைசிறந்த மாவட்டத்துக்கு சொந்தக்காரராகலாம்.
ஒரு முயற்சியாண்மை சமுகத்தை உருவாக்க சிந்திக்காவிடின் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி வரும்.
1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை
2. வளப்பயன்பாடு குறைவடையும்
3. வணிக விருத்தி குறைவடையும்
4. தேசிய உற்பத்தி குறைவடையும்
5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும்
7. வருமான சமமின்மை ஏற்படும்
8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும்

0 comments:
Post a Comment