
எமது மண்ணுக்கு அதிக மழைவீழ்ச்சி தரும் மாதம் கார்த்திகை.
அதனாலேயே, கார் என்ற மழையை சுட்டுகின்ற பெயரை இம்மாதத்தின் பெயராகச் சூட்டியுள்ளோம்.
மரங்களே எமது ஆதித் தெய்வங்கள். மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டு முறையைக்கொண்ட நாம் பிறப்பு இறப்புக்களுக்கு மரங்களை நடும் மாண்பைக் கொண்டிருக்கின்றோம். 'ஆகவே ஆழுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்' ஏன்பதையே மகுட வாசகமாக்கொண்டு எமக்கு முன்னோடியாக இருந்து தனது பொழுதுபோக்கே மண்ணுக்குரிய அரிய மரங்களை நடும் பணிiயாகச் செய்துவரும் இராசையா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரால் சேகரிக்கப்பட்ட சுமார் 5000 க்கும் மேற்பட்ட பழ விதைகள் 4.11.2017 அன்று தேத்தாத்தீவு கடற்கரை தோறும் நடப்பட்டன.
எமது மண்ணின் பசுமையையும், எமது வருங்காலத்தலைமுறையின் வளமான வாழ்வையும் பாதுகாக்கும் இந்தப் புனிதமான கைங்கரியத்தில் என்னுடன் ஆலய பரிபாலன சபையினர், விளையாட்டுக்கழகங்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது சொந்த மண்ணில் எம்மோடு சேர்ந்தே பரிணமித்து வளர்ந்த சொந்த மரங்கள் ஏராளம் உண்டு.
எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்கவைத்திருப்பவை இந்த உள்ழூர் மரங்கள்தான். அத்துடன் நின்று விடாமல் இங்குள்ள மக்களுக்கு அவற்றை பராமரிப்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கூடிய தொண்டர்களால் மற்றவர்களுக்கு வழிப்பூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment