உன்னை கண்டு பிடித்ததால்
நானும் ஒரு கொலம்பஸ் உலகில்!
சோடிக்க உன்னை வார்த்தைகள் இல்லை
வாடிக்கையாக பேசிறேன்....
கைமணக்கும் மண்டுர் பலாப்பழமே!
நெய் மணக்கும் எருவில் வத்தாளைக் கிழங்கே!
களுதாவளை கொழுந்து வெத்தலையே!
மட்டுநகர் வாவி உன் அழகான மேனி;
வாகரை கொம்புத்தேனோ -உன்
வாய் இனிக்கும் வார்த்தை!
பட்டிப்பளை பசும்பாலோ –உன்
பால் வழியும் முகம்தானும்
பக்கம் வந்து நீ சிரித்தால்
பாடுமீன் ஓசை வரும்!
அலையடிக்கும் கிழக்குக் கரை- எனை
அலையவைக்கும் உன்கொலுசு.
தாலாட்டு வசந்தன் அம்மானை எல்லாம்
ஓன்றாக கேட்குதடி- நீ
உதிர்தும்; வார்த்தையிலே...
படுவான் கரை சூரியன்போல் - நீ
கொடுத்து சிவந்த கைகள்
படுபாவி எனை அனைத்து
பாராமல் போகுதடி..ம்ம்ம்ம்
நான் புவியரசாய் இருந்திருந்தால்
உனக்கு அரியாசனம் தந்திருப்பேன்
வெறும்
கவியரசனாய் இருந்ததால்
கவியாரம் மட்டும் சூட்டுகிறேன்.
0 comments:
Post a Comment