'மகளிர்; தினம்' மார்ச் மாசம் 8ம் திகதி நினைவு கூரப்படுவது பலபேருக்கு ஏன் என்று தெரியாமல் இருக்கலாம், இது பெண்கள் இந்தச் சமுகத்தின் கண்கள், மதிப்புக்குரியவர்கள், சம உரித்துடையவர்கள், பெருமைக்குரியவர்கள் என்பது பற்றியெல்லாம் இந்தச் சமுகம், பெண்கள் எல்லாம் தெரிந்து கொள்வதற்க்காக கொண்டாடப் படுவதொரு தினம். உலகெங்கும் உள்ள பெண்கள் சாதி, நிறம், சமயம், தேசியம் இவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று எல்லோரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு தினமாகும். பெண்ணைத் தாயாக, தாரமாக, காதலியாக, சகோதரியாக, நண்பியாக இன்னும் எல்லா வகையிலும் மதித்து அவர்களை கௌரவிக்கின்ற நன்நாள் இத்தினமாகும்.
ஏன் இத்தினம் கொண்டாடப்படுகிறது? அப்படி என்று பார்த்தால், 1910 இல் டென்மார்க்கில் உள்ள கோப்பின்காம் நகரில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டிலேயே இந்த சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவதற்க்கான வேண்டுதல் வைக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1977 இல் பெண்களுக்கென ஒரு தினம் அவர்களது உரிமைகள், சமத்துவம் என்பனவற்றை நிiனைவு படுத்துவதாய் அமையும் வகையில் மார்ச் 8ம் திகதி கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டுக்கொண்டு வருவது சிறப்புக்குரியதே.
இத்தனை கொண்டாட்டங்கள் நடத்தினாலும் பெண்களுக்கான பாதுகாப்பு, உரிமைகள், போசாக்கு, உரித்துடமைகள் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. முன்னால் இந்தியப் பிரதமர் ஒருமுறை கூறினார் 'ஒரு நாட்டினுடைய நிலைமையை அங்கு வாழுகின்ற பெண்களின் வாழ்க்கை தரத்தினை வைத்துக் கொண்டு சொல்லி விடலாம்' என்றார். ஆகவே ஒர நாட்டின் எழுச்சியும் வீழ்சியும் பெண்களை சமத்துவமாகப் பேணுகின்ற நாடுகளிலேயே தங்கியுள்ளது.
பெண்களும் புறக்கணிப்பும்.
உலகின் கால் பங்கிற்கும் அதிகமான உணவினை உலகிற்கு உற்ப்பத்தி செய்து பஞ்சம் இல்லை எனும் அன்னக் கொடி பிடிக்கின்றனர். அவர்கள் உழுதிறார்கள், பயிரிடுகின்றனர் அவற்றை அறுவடை செய்கின்றனர். சகாரா, ஆபிரிக்கா மற்றும் கரிபியா போன்ற நாடுகளில் 80 விகிதமான உணவினை பென்கள் உற்ப்பத்தி செய்கின்றனர். ஆசியாவில் 50 விகிதமான உணவு உற்ப்பத்திக்கு வகை கூறுகின்றனர் பெண்கள். இலத்தின் அமெரிக்காவிர் பிரதியீட்டுப் பயிர்ச் செய்கை, மிருக வளர்ப்பு மற்றும் சிறய அளவான வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவர்கள் அதற்க்கான குறைந்தளவ அங்கிகாரத்தினையே பெற்றுள்ளனர். அநேகம் பேர் இதற்க்கான கூலியைப் பெறமலேயே இதனை செய்கின்றனர் இதனால் அவர்கள் தங்கள் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாமல் பாரம்பரிய முறைக்குள் முடங்கிக் கிடந்து அல்லலுறுவதனை இச்சமுகம் பாராமுகமாய் இருப்பது கவலைக்குரியதே.
யுனிசெவ்வின் 2007 அறிக்கைப்படி பெண்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் பாரபட்சம், வலுவூட்டலின்மை போன்றன அவர்களது குழந்தைகளை எதிர்காலத்தினைப் பாதிப்படைய வைக்கிறது. இது அவர்கள் வருமானப் பகிர்வினில் புறக்கணிக்க படுவதனால்தான் என்றால் உன்மையே.
கீழ் உள்ள தகவல் அவர்கள் மீதான பாரபட்சத்தினை காட்டுகின்றது.
இங்கு குறிப்பிட்ட நாடுகளின் உள்நாட்டு தலைக்குரிய வருமானம் அமெரிக்க டொலரில் கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான் கூலி வேறுபாட்டினைக் காட்டி நிற்கின்றது. இதற்க்குக் காரணம் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது வேலைக்கு குறைந்த வருவாயினை பெறுவதாகவும் அவர்களத தராதரத்துக்கு குறைவான வேலை வளங்குவதனையும் காணலாம். யுனிசெப்பின் அறிக்கைப்படி அதிகப்படியாக வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த அளவு வேலை நேரத்துக்கான கூலியே வளங்கப்படுகின்றது, ஊழியச் சந்தையில் பெண்கள் செல்லும் தகுதியிருந்தம் அநேகமான பெண்கள் வீட்டு வேலைக்காகவே அமர்த்தப்படுகின்றனர். பெண்கள் வெளிப்புறச் சூழலில் வேலை பார்க்கும்போது, ஆண்களை விடவும் ஒரு சராசரியான குறைந்த கூலியை மட்டுமே பெறுகின்றனர்.
அத்துடன் குறைந்த கூலியில் பாதுகாப்பற்ற ஒரு தொழிலுக்குள்ளயே குறைந்த கூலியில் சமுக மற்றும் நிதி ரீதியான குறைபாட்டுடன் வேலையில் அமர்த்தப்ப:கின்றனர். இது மட்டுமல்ல சொத்தடிப்படையிலும் ஆண்களுடன் ஒப்பிடும் போத மிகக்குறைவாகவே கொண்டுள்ளனர். பால் ரீதியான பாரபட்சம், சொத்து அவர்களின் நிதி கொள்ளவு ரீதியில் புறந்தள்ளுவதனால் அவர்கள் நலிவுறுந்தன்மைக்கு உட்ப்படடு இலகுவில் வறுமைப் பிடிக்குள் அகப்பட்டு விடுகின்றனர். ஆகவே வேலை செய்யும் பெண்கள் தங்களது கூலி, வேலை நேரம் என்பன போன்ற சிக்கல்களுக்குள் வருமானம் கணவனால் கட்டுப்படுத்துகின்ற நிலையில் பிள்ளைகளை, தனத நலத்தினை முன்னெடுத்துச் செல்ல சிரமப்படும் ஒரு நிலமையினையே இச்சமுகம் பெண்களுக்கு வழங்கிய பரிசாகும் என யுனிசெவ் தனத அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.
எனவே ஆரோக்கியமான அடிமைத்தனமில்லாத சம அந்தஸ்த்து படைத்த ஒரு சமுகத்தை கட்டியெழுப்ப பெண்களை தலைவர்களாக்கும் வலுவூட்டல் அவசியம். அத்துடன் பெண்கள் மீதான உரிமைகள், சமவாயங்கள் நாடுகளின் அரசினால் உரிய முறையில் நடைமுறைப்படுத்த தூண்டிவிட வேண்டும். இதுவே இந்த பெண்களுக்கு நாங்கள் இத்தினத்தினில் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும்.
2 comments:
நல்ல பதிவு. தெரியாத விஷயங்கள் அதிகம் உள்ளது இதில் தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி!!
நன்றி மைதீன்... எழுதுகிறேன்...தற்போது கொஞ்சம் வேலைப் பழு...
Post a Comment