வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாகலாமா! எவ்வாறாயினும் அது தான் இன்று எம்மக்களின் நிலைப்பாடாகி விட்டது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளயே போராடிப் போராடி சலித்து விட்டனர். ஐந்து தசாப்த கால உரிமைப் போராட்டம், உடமையையும் உயிரையும் காக்கப் போராட்டம், உணவுக்காகப் போராட்டம், வறுமையோடு போராட்டம் இன்னும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து வருகின்ற இடர்களுக்கு(Risks) எதிராகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தினை மக்கள் சுயமாக நின்று வென்றுவிட முடியாது. அதற்க்கு மக்கள் சத்தியில் உருவாக்கப்பட்ட அரச இயந்திரத்தின் தேவைப்பாடு முக்கியமானதாகும். அதற்கு அப்பால் மக்களது ஒத்துழைப்பு மற்றும் அவர்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வுகள் மேலதிகமாக வலுச் சேர்ப்பவையாகத்தான் இருக்கும், ஆனாலும் இவை பொறுப்புள்ளவர்களின் அசண்டையீனங்களால் தான் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பறித்துச் செல்லும் துர்ப்பாக்கியமான நிலைக்குள் தள்ளியள்ளது.
26 November 2011
21 November 2011
இது உந்தன் நாடே

ஓன்று சேருவோம் இனி
இன்று மாற்றுவோம் விதி
இது உந்தன் நாடே
உந்தன் உரிமைகள் கிடைத்திட
தடைகளை உடை தமிழா
அன்று யுத்தத்தின் அடி
இன்று வறுமையின் பிடி
இதுதான் உந்தன் வாழ்வா
உந்தன் குருதியில் உறுதியை
ஊட்டிடடா தமிழா
வழி இன்று தெரிகின்ற போது
விழி மூடி தூங்குவதா நீ
எல்லோரும் மன்னர்கள் தானே
ஏன் இன்னும் சேவகம் உனக்கு
ஏரு பூட்டி மாற்றான் வாழ
சோறு கொடுத்த எம் தமிழா
தேர்தல் மட்டும் நமக்கோர் வழி
நினைவில் வையடா
02 November 2011
விடியலே விடியலே.....
விடியலே
நீயும் ஓர வஞ்சக்காரனா!
உனைக் கண்டு
மொட்டுக்கள் சிரிக்கினறது
சிட்டுகள் களிக்கின்றது
எனக்கு மட்டும் ஏன்- நீ
தூரத்தில்...
எரிமலைபோல் பொங்கி
உரிமை உரிமை என்று
ஊர் அதிர நடித்து
பொய் உரைத்து,
எம் தமிழர் முகத்தில்
கரி இறைக்கும்
அரசியல் இருளில் நானும்
விடியலே...
எனக்கு மட்டும் ஏன்- நீ
தூரத்தில்...
01 November 2011
காதல் ஒரு காட்டு மூங்கில்

ஆகாய மேகம்
நீலக் கடல்
மெல்லிசை
குழந்தையின் சிரிப்பு
மலை அருவி
இவைபோல்
காதலும் அழகானது.
இன்னும்>
மனம் நெகிழும்
கண்ணீர் சிந்தும்
இரண்டு ஒன்றாகும்
உயிர் விடும்.....
காட்டு மூங்கில்
கையில் பட்டால்
காற்றும் இசைக்கும்
வெய்யில் பட்டால்
காடும் எரியும்...
ஃ காதல் ஒரு புல்லாங்குழல்
எரிவதும் இசைப்பதும்
எம் கையில்....