'கடந்த காலத்தில் எந்தச் சாதனையும் நிகழ்த்தப்படவில்லை நிகழ்ந்ததெல்லாம் இந்த விநாடியில்தான். வருங்காலத்தில் எதுவும் நிகழப்போவதில்லை. நிகழ்வதெல்லாம் இந்த விநாடியில்தான்!' என்கிறார் எக்ஹர்ட் டோல். பல பேர் நாம் சென்றவற்றை நினைத்தே இருக்கின்ற விநாடியை, சந்தோசத்தினை நான் உட்ப்பட இழந்து விடுகிறோம் அல்லவா!. என எக்ஹர்ட் டோல் குறிப்பிடுவதனை அவர் அவரது “The Power of Now” எனும் நூலில் குறிப்பிடும் விடயத்தினை புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நமது வாழ்க்கைக்கு பொருத்தி பார்க்கவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
'தோல்வி என்று எதைச் சொல்வீர்கள்? எதிராளியுடன் போராட்டத்தில் நம்மால் வெற்றி பெற முடியாத புள்ளி, தோல்வி. ஆந்த விநாடியில் அதை நாம் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? வேற்றிக்காகத்தான் திட்டமிடுகிறோம், போராடுகிறோம். ஆனால் அதையும் மீறி நம் கணக்கு தப்பும்போது எதுவாயினும் எதிர்கொள்வதுதானே சமயோகித நிதர்சனம்! தோல்விகளிடம் மட்டுமே நாம் சரணாகதி அடையத் தேவையில்லை. வெற்றி, வேதனை, சாதனை, சோதனை போன்ற அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாம் சரணாகதி அடையப் பழக வேண்டும். என்கிறார் எக்ஹர்ட் டோல்.