ADS 468x60

06 April 2014

வாழ்க்கையில் விடி வெள்ளி

நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு. கடலில் தவித்தேன் சிலநாள்- பெரும் இடரில் களைத்தேன் மறுநாள் எடுப்பார் கையில் பிள்ளை- அன்று எனக்கோர் துணையும் இல்லை காத்ததால் நீயொரு அன்னை களைப்புக்கு நீர்தரும் தென்னை ஏழைக்கும் இரங்கிடும் ஏழை ஏனக்குநீ மணம்தரும் சோலை கேட்டால் கிடைக்கும் உதவி- யாரும் போட்டால் வருமே பதவி பார்த்தால் அறியும் குணத்தால்- எனை பார்த்தாய் உயரும் மனத்தால் தமிழ்என்றால் நீயொரு சிங்கம் தருவதில் குறையாத தங்கம் இரக்கத்தில் நீதான் அரசி இரப்போர்க்கு பசிதீர்க்கும் அரிசி நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு.

04 April 2014

பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,

வறுமை ஒளிப்பதற்கு 
வாய்த்த வளம் இருந்தும்
திறமை உள்ளவர்கள்-வாய்
திறவாமல் உள்ளனரோ!

வாய்க்காலிலும் வயல்நிலத்திலும்
வள்ளம் ஓடும் வாவிகளிலும்
வானரங்கள் தாவும்
வனங்களிலும் மலையிலும்
வளர்ந்துவிட்ட நீங்கள்....

கறைபட்ட போரால்
கரையற்ற எம்மவரை
யாரோ என்பதுபோல்
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,?