நீதானே
வாழ்க்கையில் விடி வெள்ளி
வாழ்த்திடும் ஒரு பள்ளி
வானவில் கோலங்கள் போல்
வசந்தங்கள் தரும் உறவு.
கடலில் தவித்தேன் சிலநாள்- பெரும்
இடரில் களைத்தேன் மறுநாள்
எடுப்பார் கையில் பிள்ளை- அன்று
எனக்கோர் துணையும் இல்லை
காத்ததால் நீயொரு அன்னை
களைப்புக்கு நீர்தரும் தென்னை
ஏழைக்கும் இரங்கிடும் ஏழை
ஏனக்குநீ மணம்தரும் சோலை
கேட்டால் கிடைக்கும் உதவி- யாரும்
போட்டால் வருமே பதவி
பார்த்தால் அறியும் குணத்தால்- எனை
பார்த்தாய் உயரும் மனத்தால்
தமிழ்என்றால் நீயொரு சிங்கம்
தருவதில் குறையாத தங்கம்
இரக்கத்தில் நீதான் அரசி
இரப்போர்க்கு பசிதீர்க்கும் அரிசி
நீதானே
வாழ்க்கையில் விடி வெள்ளி
வாழ்த்திடும் ஒரு பள்ளி
வானவில் கோலங்கள் போல்
வசந்தங்கள் தரும் உறவு.
0 comments:
Post a Comment