
"மனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூட்டுவதன் ஊடகவும் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களின் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்ற ஒன்றாகும்.
மாற்றுத் திறனாளி கள், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோர், வீடற்று சாலையில் வசிக்கும் மனிதர்கள் போன்றவர்களை பணிக்கு தயார் செய்து அமர்த்துதல் நமது சமுதாயக் கடமை. அதை நிறுவனங்களின் சமூக பொறுப்பு ஆக சுட்டிக் காட்டுவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனா்.
பணி செய்யத்தக்க வயதில் உள்ளோர் எண்ணிக்கையில் இளை ஞர்கள் அதிகம் உள்ள நாட்டில் இலங்கையும் ஒன்று. ஆனால் இதில் 15% க்கும் குறை வானவர்கள்தான் தொழில் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். மீதி 85% இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி செய்வது தான் எமது முக்கியமான சவால். ஆனால் அரசு மற்றும் தனியார் தரப்பு இரண்டிலும் மிகுந்த சுணக்கம் காணப்படுகின்றது. மனித வள மேம்பாடு என்பது நிறுவனத்துக்குள் முடங்கி விடாமல் நாடு பூரா அளவில் செயல்பட வேண்டும் என்பது தெளிவாகியது.
மனித வளத் துறையில் தொழில் முனைவோர் பெருக வேண்டும். இன்றைய நவீன தொழில் நுட்பத்துக்கு பழக வேண்டும். பல இளைஞர்கள் புதிய சிந்தனையுடன் பெரும் வெற்றி கொள்கிறார்கள் என்றெல்லாம் பட்டியல் போட்டுச் சொன்னார் பாண்டியராஜன். SMAC (Social Media Analytics Cloud ) போக்குகள் பற்றிச் சொன்னவர் புது வியாபார சிந்தனைக்கு இன்றெல்லாம் நிறைய நிதியும் முதலீடும் கிடைக்கிறது என்று நம்பிக்கை அளித்தார்.
0 comments:
Post a Comment