இன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.