
இந்தக் குளங்களை பாதுகாக்க என அன்று மரங்களை குளக்கட்டுகளில் நட்டு பராமரித்திருந்தனர். அவை கட்டுகளை மண்ணரிப்பில் இருந்து பாதுகாக்கவும் ஊருக்கு அழகினைத் தருவதோடு நல்ல குளிர்சிசியையும் நிழலையும் தந்து மக்களை பயனடைய வைத்து வந்தது. விவசாயக்குழுக்கள், சங்கங்கள் கழகங்கள் ஆலய பரிபாலனங்கள் என்கின்ற பெயரில் அதிகாரிகளின் ஆதரவுடன் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். இவர்கள் சமுதாய உணர்வோடு வாழாது சுயநல நோக்கத்துக்காக வாழுகின்றவர்கள். எக்கினாலும் விக்கினாலும் ஏசும் இந்த உலகம் இந்தக் கண்மூடித்தனமான அழிச்சாட்டியங்களை கைகட்டிப்பார்க்கும் பழக்கம் எமது நாட்டை என்றோ ஒரு நாள் பாலை வனமாக்கும்.
இந்த நிலையில் எமது ஊரில் சிறியதாயினும் அதை பெரியதாக மதித்து பெருமைப்படும் எங்களுக்கு, மரநடுகைக் கைங்கரியத்தினை திருவாளர் கமலநாதன் Kamalanathan Pakkiyaraja அவர்களின் பண உதவியுடன் செய்துள்ளமை பாலைகளையெல்லாம் சோலையாக்கும் ஒரு நாளுக்கான அடித்தளமாக நான் நோக்குகின்றேன். அத்துடன் இந்த கைங்கரியத்துக்கு தோழொடு தோழ் நின்ற திரு சாணக்கியன்Shanakiyan Rajaputhiran Rasamanickamஅவர்களுக்கும் எமது உதயன் விளையாட்டுக் கழகத்தினருக்கும் Uthayam Thettativu எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
எமது எதிர்கால பொருளாதாரம் சுயமுயற்சியாளர்களை வைத்து நகர்த்தப்படுவதை இன்றே கருத்தில் கொண்டு அவற்றை உருவாக்கி வேலையின்மை என்கின்ற சொல்லை எமது மாவட்ட மக்களிடையே இருந்து நீக்க இதுபோன்ற செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்ப்பட அனைவரையும் அழைக்கிறேன். அதற்கு எனது தொண்டாண்மையுடனான ஆதரவு என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இன்றய நல்லாட்சிக்கான அரசில் பல தொழில் வாய்ப்பிக்களை உருவாக்கும் வியூகங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பனை பொருட்களுக்கான உள்ளூா் மற்றும் வௌியூா் சந்தைவாய்ப்புக்கள் பெருகி வரவேற்க்கப்படுகின்ற நிலையில், அவற்றை முன்கூட்டியே நாங்கள் ஆயத்தப்படுத்துவதுடன் மரங்களை இந்த மாவட்டம் பூராகவும் உருவாக்கும் நல்லெண்ணத்துடன் அனைவரும் இணைந்து கொள்வோம்.
'படித்தவன் புத்திசாலியாகிறான் என்று சொன்னால் மட்டும் போதாது. தன்னை வாழவைத்துக் கொள்கிற தகுதியுள்ளவனாக வெளியே வருகிறான்; தொழில் பயின்றவனாக வருகிறான் என்கிற உரிமை – தகுதி இருக்க வேண்டும்'
0 comments:
Post a Comment