
இத்தனையுமா எமக்குண்டு
எடுத்துச் சொன்னால்
நம்புவீரோ!
எடுத்துச் சொன்னால்
நம்புவீரோ!
சுற்றிவர வாவி
வற்றாத கடல்
சின்னச் சின்னதாய்
பூக்கள் செய்து
சிருஸ்டித்த காடு
வற்றாத கடல்
சின்னச் சின்னதாய்
பூக்கள் செய்து
சிருஸ்டித்த காடு
பொன்னைக் கலந்து
பூசிவைத்த மணல் மேடு
தென்னை மரத்தடியில்
தேனூறும் குளக்கரைகள்..
பூசிவைத்த மணல் மேடு
தென்னை மரத்தடியில்
தேனூறும் குளக்கரைகள்..
கெண்டை மீன்கள் துள்ள
கொடிவழைந்து கூத்தாட
அண்டையில் ஒரு குடில்
அதனருகே அடம்பன் பூக்கள்
மண்டை குளிர மரநிழல்
மறுகா என்னவேணும் நமக்கு!!
இத்தனையுமா எமக்குண்டு
கொடிவழைந்து கூத்தாட
அண்டையில் ஒரு குடில்
அதனருகே அடம்பன் பூக்கள்
மண்டை குளிர மரநிழல்
மறுகா என்னவேணும் நமக்கு!!
இத்தனையுமா எமக்குண்டு
ஏர்பட்ட பூமியெல்லாம்
போர்பட்டு போனதனால்
கூறுகெட்டு நிக்கிறோம்
கொடியறுந்து கிடக்கிறோம்
மீண்டும் எழவைப்கபோம்
இம்மேதினியை தொழவைப்போம்!
போர்பட்டு போனதனால்
கூறுகெட்டு நிக்கிறோம்
கொடியறுந்து கிடக்கிறோம்
மீண்டும் எழவைப்கபோம்
இம்மேதினியை தொழவைப்போம்!
0 comments:
Post a Comment