ADS 468x60

30 May 2016

தேடித் தேடி திறனை வளர்!!

வா! மகனே வா!!
பாரு பார் போகுது தூரர
ஒத்த மனிசனுக்கு அங்கு
ஓராயிரம் டொலரு - இங்கு
ஓராயிரம் மனிசங்களுக்கு
ஒத்த டொலரு!

கிடைக்கிற தொழிலுக்கு
படிக்கிறான் அங்க
படிக்கிற படிப்புக்கு தொழில்
தேடுறான் இங்க!!

அவனத் தேடி வேல வருது
மேல் நாட்டில்
வேலய தேடி நம்மபோறம்
கீழ்நாட்டில்!!

ஆடு ஒட்டகம் மேய்கவும்
வீட்டுப் பணிசெய்யவுமா
உன்னால் ஒண்ணுது!

வா! இங்க வா!!
தொழில் நுட்பக் கல்லூரிகள்>
தொழில் பயிற்சி நிலையங்கள்>
உயர் பயிற்சி நிலையங்கள்>
ஊரெல்லாம் உண்டு இங்கு!!
தேடித் தேடி திறனை வளர்!!
கோடி Nவைலை நாடி வரும்!!

28 May 2016

குமரிக்குள் இருக்குது காதல்!

காலை கொஞ்சும் நேரம் கடற் கரையின் ஓரம் கன்னியின் இதழின் ஈரம் கன்னங்கள் பெற்ற வரம் அலை வந்து தொடும் அரை வெட்கம் விடும் உன் மேனி படும் ஊன் உறக்கம் கெடும் நீ எனக்கு வள்ளி தீயை மூட்டும் கொள்ளி நினைவு உறங்கும் பள்ளி நெஞ்சில் மணக்கும் மல்லி குடும்பத்தில் இருக்குது மோதல் குமரிக்குள் இருக்குது காதல் விடும்பகை எண்ணியே சாதல் வேதமாய் உன்பெயர் ஓதல்!

20 May 2016

'மட்டக்களப்பில் பாரம்பரியத்தை கட்டியிழுக்கும் சடங்கு முறை' ஒரு பார்வை.



இலங்கையில் இரண்டு தசாப்தகால யுத்தம் உயிர்களை மட்டும் காவு கொள்ளவில்லை அந்த இனத்துவ அடையாளங்கள், வழிபாட்டு வழக்காறுகள், பாரம்பரியம், நடைமுறைகள், உறவுமுறைகள் என்று எல்லாவற்றையும் இழந்து, ஏதோ! எச்ச சொச்சமாக மிஞ்சிய தழிழ் இனம் பார்க்க ஏதோ மீண்டு வருவது போல் ஒரு உணர்வு இப்போது இருந்தாலும், முன்னைய காலங்களுடன் ஒப்பிடும் போது,  இப்போது அதில் இருந்தான சிறிய விடுதலை எமக்கு பெரிதாகத் தெரிகின்றது அவளவுதான். யுத்தவடு இன்னும் ஒரு பரம்பரை அலகை கடத்தும் வரை அது எம்மில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

01 May 2016

ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது!


முயற்சியாளர்களும், நிறைந்த வளமும் மட்டக்களப்புக்கு ஒன்றும் குறைவில்லை. இங்குள்ள வளங்களை மரபுரீதியாக உற்ப்பத்தி செய்வதில் இவர்கள் கில்லாடிகள், நல்ல கைவினைஞ்ஞர்கள். குறிப்பாக கணவன் மார்களை இழந்த அநேகம் பெண் முயற்ச்சியாளர்கள், இவர்கள் எதிர்நோக்கும் நேரடிப்பிரச்சினை தங்களது உற்ப்பத்திக்கு தகுந்த சந்தைவாய்ப்பு இன்மையும் முதலாளிகளின் சுரண்டலும்தான். 

வளங்கள் தொடங்கி உழைப்புகளும் இவர்களது நலிவுறு நிலையை சாட்டாக வைத்து சுரண்டப்பட்டுவருவது பொது. காரணங்களாக, இன்னும் மரபுரீதியான உற்ப்பத்திகளிலும் தொழில்நுட்பத்திலும் தங்கி இருத்தல், தகுந்த பயிற்ச்சி இன்மை, எதிர்மறையான மனப்பாங்கு, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி போன்ற இன்னோரன்ன காரணங்கள் இந்தப் பிரச்சினைக்கான நேரடியான காரணங்களாக இருக்கின்றன.

இப்படியே இருக்கும் இந்தக் குடும்பங்களின் நிலைமைதான் என்ன?? வறுமை, சந்தையில் போட்டியிட முடியாத நிலை, குறைந்த தரநிர்ணயனம், குறைந்த கேள்வி, ஏமாற்றம் என பல பிரதிபலன்களை ஏற்படுத்திவிடும் நிலையில் எம்மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். உன்மையில் இவற்றுக்கு பல மட்டங்களில் பரிந்துரைகளை காண முயலவேண்டும், குறிப்பாக முதலீட்டாளர்களை இந்த முயற்ச்சியாளர்களை பயன்படுத்தி தரம்வாய்ந்த பொருட்களை அதிலும் குறிப்பாக உல்லாசப்பயணத்துறையுடன் ஒருங்கிணைந்தவாறு உற்பத்தியாகும் பொருட்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பினையும், நம்பகத்தன்மையினையும் ஏற்படுத்தும் முயற்ச்சிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். 

அத்துடன் நீண்டகாலத்துக்கு இவர்களை கண்காணித்து உற்பத்தியில் தொய்வினை ஏற்படுத்தாத ஒரு நீண்டு நிலைக்கும் பொறிமுறையை ஏற்ப்படுத்த வேண்டும் இவை மூலம் நிச்சயம் ஒரு நலிவுறுநிலையில் உள்ள சமுகத்தின் வாழ்க்கைத்தரத்தினை கட்டியெழுப்பமுடியும்.

"ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது? சில கோழை கும்பல் தான் வாழவேண்டி பேதங்கள் கொண்டாடுது!