ADS 468x60

21 January 2013

மட்டக்களப்பு கிராமத்து மக்கள் எமது எல்லைத் தெய்வங்கள்!

மதுரன்குளம் , மாவடிச்சேனை, கட்டுமுறிவு, கதிரவெளி, வாகரை, வெருகல், ஓமடியாமடு, பனிச்சங்கேணி இத்தனை கிராமங்களில் இழையோடி கிடக்கும் வறுமை கல்வியை விளங்கச் செய்யாமல் போய்விட்டது. துடிப்புள்ள எந்த இன்னமும் சோத்துக்கு கஸ்ட்டப்படுவதில்லை. ஒரு இணையத்தளத்தில் பார்த்தேன், 'மட்டக்களப்பார் நீர், நிலம், காடு என்ற அனைத்து வளமும் நிறைந்த காணப்படுவதனால் உழைத்து உண்ண வேறு வழியை தேடவோ சிந்திக்கவோ இல்லையாம், ஆனால் யாழ் மக்கள் வரண்ட, நீர் நிலைகள் குறைந்த நில அமைப்பினைக் கொண்டிருப்பதனால் அவர்கள் விவசாயத்தினை நம்பி வாழ்பதனை விட, கல்வியை நம்பி முன்னேறத் தொடங்கினராம்'. ஆனால் கடந்து சென்ற கசப்பான வருடங்கள் மண்ணையும் வளப்படுத்தவில்லை, மக்களயும் வளப்படுத்தவில்லை என்பதுதான் மட்டக்களப்பினைப் பொறுத்தமட்டில் உன்மை.
'மேலே குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து 24 சிறுமியர்கள் வாகரை கதிரவெளி திலகவதியார் இல்லத்தில் கல்வி கற்ப்பதற்க்காக அடையாளம் கண்டு சேர்த்துவிட்டிருகக்கிறோம். இந்த சிறுமியர்கள் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் அடையளங் காணப்பட்டு பிரதேச செயலாளரின் சிபார்சில் இங்க கல்வி கற்று வருகின்றனர். தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாகி வாழ்ந்து வந்த இந்தச் சிநுமியருக்கு கல்வியையாவது நாங்கள் வழங்க வேண்டும் என இந்த முயற்சியை எடுத்துள்ளோம்' என இல்லத்தின் பொறுப்பாளர் ஆசிரியர் ஜீவனேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ' இந்குள்ள மாணவிகளுக்கு உணவுக்கு குறைவில்லை ஆனால் உடைகள், சில மாணவர்களுக்கு சப்பாத்துகள், வெற்சிற்று, துவாய்கள் அத்துடன் விளையாட்டுப் பொருட்கள் என்பன இன்னும் தேவையாக இருக்கிறது. அத்துடன் பிரத்தியேக வகுப்புக்களை வைக்கவேண்டிய தேவையும் இருக்கிறது என' கூறினார்.

//இல்ல மாணவிகளுடன் நாங்கள்//
'பரந்த இந்த உலகத்தில், கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கு நன்மை செய்வதை கடமையாகக் கொள்ளுங்கள். மற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குக் கூடச் செல்ல தயாராகுங்கள்' என்ற விவேகாநந்தரின் முழக்கத்திற்க்கு எள்ளளவும் பிசகாமல் பிறநாடுகளில் உடல் இருந்தாலும் எமது தமிழ் மக்களின் நலனிலே உயிராய் இருக்கும் பா.கமலநாதனின் பேருதவியில் இங்கு உள்ள மாணவர்களுக்கு அவர்களது பொருட்கள், உடுப்புக்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கான 'றங்குப் பெட்டிகள்' இல்லப் பொறுப்பாளர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க 20.01.2013 அன்று எங்கள் குழும உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

உதவி ஆணையாளர் சிவலிங்கம் 'எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.' இதை நன்குணர்ந்து எமது உறவுகள் என்ற ஈர உணர்வுடன் உதவி புரியும் கமலநாதனைப்போல் நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். எமது தமிழ் உறவுகளின் காவல் தெய்வங்கள் இந்தக் கிராமத்து மக்கள்தான், இவர்களால்தான் இன்னும் நாங்கள் உயிரோடு வாழ்கிறோம். இன்று அவர்களுக்கு விசுவாசமாக இருந்து உதவவேண்டியது எமது கடமை. அதுதான் நாம் பெற்ற கல்வியாலும், பதவியாலும் பெறும் முழுப்பயனுமாகும் என எங்களுடன் இந்தப் புனிதச் சேவையில் தோழோடு தோழ் நின்று உதவும் எமது மாவட்ட விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு ந.சிவலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
'எங்கட அம்மா இறந்து போய்டா, கட்டுமுறிவில இருக்கிறதால படிக்கிற நிலையில இருக்கல்ல, இங்க வாறத்துக்கு எனக்கு உடுப்போ, சப்பாத்தோ, பாடசாலை உபகரணங்களோ இருக்கவில்லை.அத்துடன் இருக்கின்ற பொருட்களை பாது காப்பாக வைப்பதற்கான உடுப்புப் பெட்டியோ என்னிடம் இல்லாத நிலையில் அண்ணா நீங்கள் தந்துதவிய இந்த பெட்டி எனக்கு நல்ல சந்தோசம்' என மாணவி என்னிடம் விநயமாக கூறினார்.
ஆசிரியர் ஜீவரெட்ணம் இத்துடன் தேசிய சேமிப்பு வங்கியின் உத்தியோகத்தர் திரு தயாபரன் மற்றும் ஆசிரியர் ஜீவரெட்னம் ஆகியோரும் இந்த உதவிப் பயணத்தில் கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்களிலேயே மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. எஞ்சியிருக்கும் எமது சொத்து கல்வி மாத்திரம்தான் அதனால் அதையும் எமது சமுகத்துக்கு பெற்றுக் கொடுக்க தவறிவிட்டோம் என்ற அவமானச் சின்னத்துடன் வாழ்ந்து மடியக்கூடாது என்பதே எமது பேரவாவாகும்.

0 comments:

Post a Comment