கூய் போட்டாலும் கேட்காத அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளுக்கிடையே அந்த இடத்தின் வழியை மறந்து தடுமாற்றத்துடன் நகர்ந்தோம் காடுவழியே, ஈரளக்குளத்தில் இருந்து குரு அண்ணாமடு வெட்டையை புடிச்சி மறுகா தரவைக்குள்ளாள கிறுகி புலிபாய்ந்த கல்லுக்குள்ளால விட்டு கிரான் சந்திய புடிச்சு ஒரு மாதிரியா வந்து சேர்தோம்...
"சாரு மழைக்கு நம்மட புத்தகங்களை எல்லாம் இவங்க தந்திருக்கிற உறைக்குள்ள போட்டெடுத்தா ஒரு துளியும் படாது டி என" என்று வாஞ்சயோடு தங்களுக்குள்ளே பேசிக் கொண்ட சிறுவர்களின் முகத்தைப் பார்க்கும் போது நமது சிறுவர்கள் எந்த நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது புரிந்து கொண்டது.
"மிகவும் பின்தங்கிய கிராமம், ஆரம்பத்தில் கூலி வேலைக்காக வாடிகளில் வந்து குடியமந்தவர்கள், பின்னர் குடும்பங்களாகி அதன் பின் யுத்தத்தில் இடம் பெயர்ந்து அனைத்தையும் இழந்து இன்று உயிரை மாத்திரம் காப்பாற்றியவர்களின் கல்வி எவ்வாறு வளர்ச்சியடையும், இங்கு 60 விகிதமான மாணவர்களின் வருகைதான் பதிவுசெய்யப்படுகிறது. இதற்க்காகத் தான் எதவித ஊக்குவிப்புமில்லாமல் நான் இந்த டீச்சர் எல்லாம் வார இறுதி நாட்களிலும் வந்து கல்வி கற்ப்பிக்கிறோம், இந்த தொலைவிலுள்ள எங்களை எப்படி நீங்கள் கண்டு பிடிச்சி வந்தீங்க" என்று வியப்பாக இருக்கிறது' என அக்கறை உள்ள ஆசிரியர் டினேசுரன் கூறினார்.
உங்கள் அனைவருக்கும் தெரியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் குடியேற்றத்துக்கு உட்பட்ட பிரதேசப் பகுதிக்குள் கிரான் பிரதேச செயலகப் பிரிவு கல்வி, பொருளாதாரம், குடி நீர் போன்ற இன்னோரன்ன தேவைகளில் மிகவும் பின்தங்கிய இடமாகும். கிரான் இருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள எல்லைக் கிராமத்தில் ஈரலைக் குளமும் ஒன்று. அங்கு நாங்கள் 14.10.2012 ஆம் திகதி அன்று சென்று நாங்கள் அந்த பாடசாலையில் பயிலும் மாணவச் செல்வங்களோடு ஒரு நாளை செலவிட்டு உறவாடி, பொருட்களை வழங்கி மகிழ வைத்தோம். அது எங்களை மகிழ்வித்தது.
உன்மைதான் எமது மாவட்டத்தின் கட்டுமான வளர்ச்சியைக் கண்டு பிரமிப்பவர்கள் மக்களின் வளர்ச்சி எவ்வாறு அமைந்திருக்கிறது? என்பதை காணத்தவறி விடுகின்றனர்.
'இஞ்ச பாருங்க தம்பி இஞ்ச புடிச்சி கண்ணுக்கெட்டாத தொலை வரையும் காடும் வயலும்தான், ஆனா ஒண்டு கஸ்ட்டப்பட்டு செய்யிறது எல்லாம் எவனோ கொண்டுபோயிடுறான், அத மாதிரி ஒங்கள போல ஆரும் வாற இல்லயே புத்தி சொல்ல. இதுகளும் ஒண்ட ரெண்ட படிச்சா அதுக்கங்கால அப்படியே படிப்ப விட்டுப்போடுங்கள். பிறகென்ன ஆடு மாட்ட மேச்சித்து கிடக்கிறான், மேற்கொண்டு படிக்க அதுகளுக்கு வசதியும் உற்சாகத்தையும் குடுக்கிறத்துக்கு உங்களப்போல அக்கறயா வரணும் தம்பி' என்று இந்த மக்களின் நலனில் அக்கறையுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், விவசாய சங்கத் தலைவருமாகிய மகேந்திரன் எடுத்துக் கூறினார்.
குறிப்பாக எமது மக்களின் ஒரே ஒரு சொத்தாக இறுதி வரைக்கும் கையில் பிடித்துக்கொண்டு இருந்த ஒன்று கல்வி மாத்திரம்தான் ஆனால் அது கூட யுத்தம், பாராமுகம், பாரபட்ச்சம், கொடிய வறுமை, வசதியின்மை போன்றவற்றினால் இன்று கைநழுவிய நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் விளங்க நீ வளங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உளக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இந்த கவி வரிகளுக்கு ஏற்பவே நாங்கள் பொருத்தமான உதவியை செய்து வருகின்றோம் "இத்தனை தொலைவில் இருந்து நீல் ஆநந்தராஜா அண்ணா மற்றும் தமது மண்ணில் மதிப்பு வைத்திருக்கும் சர்மிளா(சர்மி) அக்கா, வைத்திய கலாநிதி அண்ணன் சுகுணன் இவர்கள் எல்லாம் உங்கள் கல்வியில் அக்கறை கொண்டு இங்கு கூடியிருக்கும் 50 க்கும் மேற்ப்பட்ட உங்களுக்கு கல்வி கற்ப்பதற்க்கான உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள், பேனைகள், பென்சில்கள், அழிறவர்கள், அடுத்தடி, கலர் பெட்டிகள், உறைகள், கொம்பாஸ், பென்சில்கள் இன்னும் அதிகமான தேவையான பொருட் பொதிகளும், மற்றும் உங்களுக்கான உணவுப் பொதியினையும் உவந்து வழங்குகின்றமையையிட்டு உங்களின் சார்பில் நான் நன்றி கூறுகிறேன. இவர்கள் இது போன்று நிறையவே உதவிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது"
வைத்திய கலாநிதி அண்ணன் சுகுணன் கூறுகையில் இங்கு வந்துள்ளவர்கள் அனைவரும் வெவ்வேறு துறையில், வேறு நாட்டில், பிரதேசத்தில் இருந்தாலும் எமது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவளவு தொலைவில் இந்த உதவி கரங்கள் நீழ்வது போல் எமது மக்களை நோக்கி இன்னும் பல உதவிக்கரங்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என எடுத்துரைத்தார்.
"அம்மம்மா சித்தர வருசத்துக்கு உடுப்பெடுக்க போனப்ப எனக்கு இது மாதிரி ஒரு அப்பிள் மற்றது கண்டோஸ் எல்லாம் வேண்டித்தந்தா" என்று கூறினாள் சிறுமி, அதுபோல் அனேக சிறுவர்கள் இவற்றையெல்லாம் காணாத குழந்தைகளாக இருந்தமையால் இவற்றைப் பெற்றதும் மிகுந்த ஆநந்தத்தில் இருந்தமை எம்மையும் ஆநந்தப்படுத்த தவறவில்லை. "இச் செயற்பாடுகள் நிச்சயம் 65 விகிதமாக உள்ள மாணவர்களின் வரவில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்பதலில் ஐயமில்லை" என்று உறுதி சொன்னார் ஆசிரியர் சிரிப்புடன்.
வாஞ்சயோடு பொருட்களை வாங்கிச் செல்லும் சிறுவர்கள்..
குழந்தைளளோடு ஒன்றாக இருந்து அளவலாவும் எமது சகோதரங்கள்
0 comments:
Post a Comment