
அத்துடன் இது ஒரு நல்ல பாரபட்சம் அற்ற மாதிரித்தெரிவு எனவும், இந்த ஆய்வின் முடிவு எல்ல மீடியாக்களிலும் வரவேண்டும், அவை மக்களைச் சென்றடைய வேண்டும் எனவும் அவர் வினயமாகக் கேட்டுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மற்றும் விரிவுரையாளர் சரண்யா ஆகியோருடன் எமது மேநிலை பேராசான் விக்ரம ஜோஜியா பல்கலைக்கழகம், போராசான் துளித்த ICBT ஆகியோருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அபிவிருத்தியாக இருக்கட்டும், இடர்களைவாக இருக்கட்டும், இல்லை சுகாதாரம் முன்னேற்றமாக இருக்கட்டும் மாற்றானின் வரவுக்காக காத்திராமல் நமது வீட்டு மல்லிகையினை நுகர முன்வரவேண்டும். எமது பல்கலைக்கழக சமுகம் அதில் இன்னும் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய முன்வராததன் காரணமாகவே குறைந்தது பல்கலைக்கழக சூழலைக்கூட கல்வியில் குன்றிய சமுகமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை பல்கலை சமுகம் ஆதரித்து அது சமுகத்துக்கு பயன்தரும் நல்ல வெளியீட்டை உண்டு பண்ணவேண்டும், அல்லாவிடின் பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.







0 comments:
Post a Comment