
வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாாியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாள் நிகழ்வின் போது (25) வெல்லாவெளி சக்தி கலாமன்றத்தினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின்போது 2017ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தொிவான ஐந்து மாணவா்களையும் 5ம் ஆண்டு புலமை பாிட்சையில் சித்திபெற்ற மாணவனுக்கும் அறநெறியில் ஆக்கத்திறன் போட்டியில் பிரதேச மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் தொிவுசெய்யப்பட்ட மாணவிக்கும் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளர் மு.கணேசராசா அவர்களுடன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்த சந்தர்ப்பம்.
'ஈதல் அறம்' எனும் தலைப்பில் என்னுரையினை ஆற்றக் கிடைத்தது. ஈதல் இன்பம், ஈதல் அறம், ஈந்துவத்தல் போன்ற சொல்லாட்சிகளினால் வள்ளுவர் ஈந்துவக்கும் அறம்பற்றி சொல்லியவற்றை கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு ஈந்துதவும் அனைவரினையும் உட்படுத்தி பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் கிடைத்த சந்தர்ப்பத்தை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றினை தெரிவித்து. எமது பிள்ளைகளின் கல்வியை எல்லா வகையிலும் ஊக்குவிக்கும் செயற்பாட்டுக்கு துணைநிற்க்க சங்கற்ப்பம் பூணுவோம்.






0 comments:
Post a Comment