ADS 468x60

28 April 2019

அசம்பாவிதங்கள் தமிழ் வாடிக்கையாளர்களை அடுத்தபக்கம் திருப்பியுள்ளது.

இன்றய நிலை
இன்று எதிர்பார்க்கப்படாத, துரதிஸ்ட்டவசமான பல மாறுதல்கள் மட்டக்களப்பில் ஏற்பட்;டு இருக்கின்றது. எமது மக்கள் வெளிப்படையாகச் சொல்லப்போனால் தற்பொழுது உள்ள சூழலில் எமது மக்கள் முஸ்லிம் ககோதரர்களின் பகுதிகளிலுள்ள கடைகளுக்கு செல்ல பயப்படுகின்றார்கள். இதனால் தமிழ் கடைகளை தற்காலிகமாக நாடிவருகின்றனர். ஆனால் பல முறைப்பாடுகள் எழுகின்றன, அவர்கள் கண்ணைப்பொத்தி இந்த மக்களை கறக்கப்பார்கிறார்கள் என கடிந்துகொள்ளுகின்றனர் எல்லோருமல்ல. நமது மக்கள் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற இந்த நிலையில் அவர்களுக்கு சேவை மனப்பாங்கில் உதவ முன்வர வேணடியது அனைவரது கடமையுமாகும்.


இது எம்மவரிடையே வாடிக்கையாளர்களை பெருக்கிக்கொள்வதற்கான நல்ல தருணமாகவும் இதனைக் கருதுகின்றேன். நாம் பல தசாப்த காலம் பின்னோக்கி சென்றுள்ளோம். எமது உடமைகள், உயிர்கள் அனைத்தையும் இழந்து பல நிலையிலும் நலிவுற்று சிறிய சிறிய சம்பவங்களுக்கும் பாதிக்கப்படும் ஒரு துர்பாக்கிய நிலையில் உள்ள எம்மக்களை, நுகர்வு ரீதியாகவும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவேண்டியது வர்த்தகர்களின் பொறுப்பு. 


இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் வருகின்றனரே, இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அதிக இலாபம் பெறலாம் என நினைத்து இந்த வாடிக்கையாளரின் நன்மதிப்பினை இழந்துவிடாதீர்கள். எமது வியாபாரம் பல்கிப் பெருகவேண்டுமெனில் வாடிக்கையாளர் பாதுகாப்பு (கஷ்டமர்கெயா) மிக அவசியமானதாகும். வருகின்ற வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்கள் கேட்கின்ற பொருட்கள் உங்களிடம் இல்லாவிடினும் இருப்பவரிடம் அவர்களை அனுப்பி பெற்றுக்கொடுங்கள். அல்லது இருக்கின்ற எமது சகோதரக் கடையினை காட்டுங்கள்.

அதுபோல் விவசாயம், மீன்பிடி போன்றவற்றின் மொத்த வியாபாரிகள் மிகக் குறைவாக உள்ளனர். அதனால் அடாத விலைக்கு பொருட்களைவ விற்கும் அளவுக்கு இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகள் சுரண்டியதுபோக உண்மையான உழைப்பாழிக்கு ஒன்றுமில்லாது போகின்றன. ஆகவே நாள் பூராவும் உழைப்பவர்களை எடுத்தேத்த புதிய முதலீட்டாளர்கள் முன்வந்து எமது விவசாய சமுகத்தினை மீட்டேடுக்க நியாயமான விலையில் அவற்றைக் கொள்வனவு செய்ய முன்வாருங்கள். விலைத்தளம்பலை உருவாக்காமல் அவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகவேண்டும்.

அதிக விவசாயிகள் கடன் சுமையில் உள்ளனர் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை முதலாளிமார் முன்னின்று கொடுத்துதவி, அவர்களது உழைப்பால் முன்னேற பாதை வகுத்துவிடுங்கள்.


வியாபாரிகள் கடைப்பிடிக்கவேண்டியவை.

நாமும் இனி வியாபாரத்தில் உயரவேண்டுமா? சில பாதகமில்லாத தந்திரோபாயங்களை சொல்லுகின்றேன்.

விலை மற்றும் தள்ளுபடி
விலை என்பது வாடிக்கையாளர்களை இழுக்க உதவும் ஒரு காரணி. தரத்தை முதன்மையாக கொண்டு வாங்கும் வாடிக்கையாளர்களும் விலை என்ற விஷயத்தில் அடிபட்டுப்போவார்கள். எனவே விலையில் தள்ளுபடி (னளைஉழரவெ), விலை கழிவு, சலுகைகள் (னளைஉழரவெ) என்று குறைக்கும்போது வாடிக்கையாளர்களை அதிகமாக வாங்க வைக்க முடியும்.

கடன் திட்டம்
மாத தவணை, கடன் திட்டம் போன்ற வசதிகள் இருக்கும் பட்சத்தில் மற்ற கடைகள், நிறுவனங்களில் வாங்குவதை விட உங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு வாங்குவார்கள்.

அக்கறை காட்டுங்கள்
இன்றய நிலையில் வாடிக்கையாளர்கள் மீது மிகவும் அக்கறை காட்டவேண்டும். வாடிக்கையாளர்கள் பொருட்கள் அல்லது சேவையை வாங்க வரும்போது, இதனால் உங்களுக்கு அந்ததந்த பயன் இருக்கும் என்பது போன்ற அக்கறைகளை அவர்களிடம் காட்டவேண்டும்.

பொருட்களை தேர்ந்தெடுக்க உதவுங்கள்
நமக்கு இருக்கும் ஒரு கெட்ட குணம் வாடிக்கையாளரை ஒருபோதும் எமது வியாபாரத்தினை அணுகவிடாமல் மறுத்தல். ஆவர்களது விருப்பத்துக்கு மாறாக நமது விருப்பமான பொருட்களையே திணிப்பது. பல பிராண்டுகள், பல மாடல்கள், பல பொருட்கள் இருக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைகளுக்கு தகுந்தாற்போல் சரியான பொருட்களை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். விலை உள்ள பொருட்களை எப்படியாவது அவர்கள் தலையில் கட்டிவிட வேண்டும் என்று நினைத்து விற்பனை செய்ய கூடாது.
விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களே எதை வாங்கலாம் என்ற யோசனையை விற்பவர்களிடம் கேட்பார்கள்.

விற்பனையை தாண்டிய விஷயங்களை பேசுங்கள்
விற்பனையை தாண்டி நிறைய விஷயங்களை பேசவேண்டும். கதை பேசுவது என்று சொல்வார்களே அதை போல வியாபார விஷயங்களை தாண்டி பலவற்றை பேசவேண்டும். இன்னமும் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மளிகை கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் குடும்பம், கிராமம், அரசியல் போன்ற பல உரையாடல்கள் நடைபெறுவதை 
பார்க்கலாம்.

நல்ல உறவை பேணுங்கள்
வாடிக்கையாளர்களிடம் பொருட்களை வாங்குபவர் என்ற ஒரு பிணைப்பை தாண்டி நண்பன் என்ற உறவை பேணுங்கள். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து உங்களிடமே வாங்குவார்கள்.
வாடிக்கையாளரை பரிந்துரைப்பவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் நம்மில் பல பேருக்கு அந்த கடைக்காரர் எனக்கு நன்றாக தெரியும், அந்த கடையில் நான் சொன்னால் குறைத்து கொடுப்பார்கள், அந்த கடைக்காரருக்கு என் பெயர் சொன்னால் நன்றாக தெரியும் என்று மற்றவர்களிடம் சொல்வது வழக்கம். இது போன்ற நபர்களை அடையாளம் கண்டு உறவை பேண வேண்டும்.

அவர்கள் மற்ற வாடிக்கையாளர்களை கடைக்கு அழைத்து வரும்பொழுது அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பேசவேண்டும். இது பல வாடிக்கையாளர்களிடம் உங்கள் கடையை பரிந்துரைக்க அவர்களை தூண்டும். வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்
வாடிக்கையாளர்களின் சந்திப்புகளில் அவர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள், இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு மாறும் தொடர்பு ஏற்படுகிறது. 

அதே போன்று உரையாடலின் தொடக்கத்திலேயே உங்கள் பெயரையும் தெரியப்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமில்லாமல் அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின்போது மற்ற அவசியமான, தேவையான விபரங்களை அறிந்து அதற்கேற்றவாறு அவர்களை திருப்பதிபடுத்தலாம். 

சிந்தித்து செயலாற்றினால் எமது பொருளாதாரம் எமக்குள் அடக்கம். பல தசாப்தகால பின்னடைவை கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் நெறிதவறாத உழைப்பாளிகளாக வாழவேண்டும். அப்போது எமது மக்களும் எமது வர்த்தகமும் நன்மையடைவது திண்ணம்.

உஷாத்துணை.

0 comments:

Post a Comment