ADS 468x60

27 April 2019

வாருங்கோ இது வைகாசி மாதம்!

வாருங்கோ இது வைகாசி மாதம்
வந்துவிட்டால் மனம் மகிழ்சியில் மோதும்
சேருங்கோ கோலம் செய்திடக் கூடி
செல்லுங்கோ தோழில் காவடி ஆடி

வேப்பிலை மஞ்சள் மணங் கமழ
வெற்றிலை பாழை பழம் மணக்க
காப்பிட்டு கல்யானக் காலும் இட்டு
கூப்பிட வந்திடும் கோ மகளே!

அப்பனே எங்கள் ஆனை முகா
ஆறுமுகன் அண்ணன் வேழ முகா
தொப்பனே சிவன் மூத்தவனே- முன்னே
தோன்றிட பாட்டினில் வாரும் ஐயா!

பாண்டியன் நாட்டினில் பார் மகிழ
பண்புடன் பூம்புகார் மண்ணதிலே
வேண்டிய மானாக்கன் கையினிலே
வெள்ளிச் சரம் என வந்துதித்தாள்

ஆடுங்கோ தேவி வாசலில் நின்று 
அன்னை விரும்பும் வசந்தன் கரகம்
பாடுங்கோ ஒரு காவியப் பாட்டு
பள்ளொடு குரவை தாளங்கள் போட்டு

ஊரெல்லாம் ஒன்றாகக் கூடி நின்று
உன்னை வணங்கிடத் தோரணங்கள்
ஓசை எழுந்திட உடுக்கை பறை
ஓடியே வந்தருள் கண்ணகையே

கோடையில் கொடும் சூடும் பரவுது
கொள்ளை நோயும் குளிரும் விரவுது
வாடி நின்றோம் உனை நாடுகின்றோம்
வாழை பலா மாவும் தேடி வந்தோம்

அம்மாவின் பேரினால் மடியில் பிச்சை
ஆலய வாசலில் நேர்த்திக் கடன்
சும்மா நினைத்திட சுகம் பெருகும்
சூட்சுமம் காத்திடும் கண்ணகையே!

மன்னவா குலக் கோவலனைக் கொண்ட
தென்னவா அறம் இல்லாமலே ஆண்ட
பாண்டிய மன்னவன் நாடெரிய
பத்தினியாள் உரை மெய்த்ததம்மா

அந்த நாள் அன்னை குளிர்ந்திடவே
ஆறு கடந்து கடல் கடந்து
சொந்தமாய் எங்களின் ஊரினிலே வந்து
சூடு தணித்திட்ட கண்ணகையே!

தாமரை வண்ணப் பூக்கள் மணக்கிது
தளிரொடு மரம் ஆடிக் களிக்குது
கோடையும் சென்று வாடை அடிக்கிது
குளிர்ந்தொரு பாட்டம் மழையும் புடிக்குது

பூரணைத் திங்களில் பூசையுடன்
பூரண கும்பத்தில் ஓசை எழும்
பாடலுடன் வரும் உடுக்கையிலே
பாவம் அகற்றிடும் பத்தினியே

0 comments:

Post a Comment