ADS 468x60

05 July 2020

ஏன் இலங்கையினை நவீன வியட்நாமாக மாற்ற முடியாது?.

நாம் இன்று நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஜப்பானுக்கு அடுத்ததாக சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது பொருளாதாரம் இரண்டாவது சிறந்த நாடாக இருந்தது என்பதையும், லீ குவான் யூ சிங்கப்பூரை இலங்கையைப் போல உருவாக்க விரும்பினார் என்ற கதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கவில்லையா? அதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு திரிவது, அதன் பின் எத்தனை தசாப்தங்கள் கடந்தும் வேறு ன்றை சொல்ல வைக்க நாம் ஏன் முயற்சிக்கவில்லை என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆக நாம் பல தசாப்தங்களாக அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரால் உண்மையான இந்த ஆற்றலை ஒருபோதும் காணாத ஒரு புவியியலைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். அறிக்கைகள் வருகின்றன, புதிய புதிய தூர நோக்கு சிந்தனைகள், தேர்தல் விஞ்ஞாபனங்கள் வருகின்றன, கொள்கை ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன, மூலோபாயத் திட்டங்கள் வெளியிடப்படுகின்றன, ஊடக நிகழ்ச்சிகள் நாடகமாக்கப்படுகின்றன, ஆணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன, பின்னர் மக்கள் மூலமாக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அல்லது வழக்கம் போல் தங்களது அரசியல் வியாபாரத்தை நடத்துவதற்காக ஆடம்பரமான சொற்களைக் கொண்டு பயணம் செய்கிறார்கள். ஆகவே சொல்வதை செய்கின்றவர்களையோ செய்தவற்றை சொல்லும் தகமைவாய்ந்தவர்களோ நாம் அரிதாகவே காணக்கிடைக்கின்றது.

இவ்வாறான பின்னணியில் உற்பத்தி அல்லது தொடர்புடைய சேவைத் துறையின் முன்னேற்றம் பெற்ற எந்தவொரு மையமாகவும் தன்னை மாற்றிக்கொள்ள எமது இலங்கை நாடு பரிதாபமாக தவறிவிட்டது.

அதுபோலவே, வெறுமனே, சிங்கப்பூர் மற்றும் துபாயை விட மிக உயர்ந்த புவியியல் இருப்பிடத்தைக் கொண்ட ஒரு உலகளாவிய கடல் மையமாக மாறவும் நாடு தவறிவிட்டது, ஆனால் 40 வருட காலத்திற்கு பிராந்தியப் பொருட்களை பரிமாற்றம் செய்வதற்கான ஒரு பிராந்திய மையமாக மாத்திரமே எமது நாட்டினால் நிர்வகிக்க முடிந்தது, அதுபோல் இத்தனை தசாப்தங்களாக அயல் நாடான இந்தியாவை சார்ந்ததுதான் அதனது வர்த்தக நடவடிக்கைகள் இருந்தும் வருகின்றன, அதனால் பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தின் விரிவான பொருளாதார கூட்டாண்மைக்கு செல்ல அதனால் இயலாமற்போனது என்பது பொருளியலாளர்களின் கருத்து.
இலங்கையை உலகளாவிய விநியோக மையமாக மாற்ற 2013 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வணிக மையச் சட்டத்திலிருந்து (commercial hub act) எங்களால் நன்மைகளைப் பெற முடியவில்லை.

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலைக்காலத்தில் சமுகக்கல்வி பாடத்தை கற்றுக்கொண்ட மாணவனாக இருந்தபோது, பிரிட்டிஷ் சகாப்தம், தேயிலை;, ரப்பர் மற்றும் தென்னை ஆகியவற்றை உற்பத்திப்பொருட்களை நம் நாட்டின் ஏற்றுமதியின் பெருமை என்று பேசினோம். 25 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மூன்று முதன்மைத் தொழில்களைப் பற்றி நாம் இன்னும் பேசுகிறோம், ஆனால் இவற்றின் உற்பத்தியில் மற்றும் அவற்றிற்கான அதிக பெறுமதி  சேர்பதில் முன்னேற்றமடையாத நிலையில், அவற்றை முதநிலைப்படுத்தாத நிலையில் ஏற்றுமதி வருவாயில் இன்னும் அதிக பின்னடைந்தே காணப்படுகின்றது. இவை ஏனைய நாடுகளுடன் அதன் வணிக முன்னேற்றத்தில் போட்டிபோட முடியாத நிலையில் இவற்றின் மொத்த வர்த்தகத்தில், வணிகத்தில் பின்னடைந்துள்ளது.

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, எமது நாட்டை கைப்பற்றி ஆண்டுவந்த காலனித்துவவாதிகள் தேயிலை கொழுந்து, கோப்பிச் செடி, மற்றும் இறப்பர் கன்றுகளை இங்கு அறிமுகப்படுத்தாமல், தென்னை உற்பத்திக்கு பெறுமதியும் சேர்த்து பல பொருட்களை உற்பத்தி செய்யாமல், ரயில் பாதைகளையும் கொண்டு வரவில்லை என்றால், நமது பிந்தைய சுதந்திர குடியரசானது நாங்கள் ஏற்றுமதியாளர்கள் என பெருமை பேசும் நிலை இல்லாமல் போயிருக்கலாம் இல்லையா (ஒருவேளை பராக்ரமாபாகு மன்னர் எவ்வளவு பெரியவர் என்று நாங்கள் பேசியிருப்போம்!). 

'இந்து சமுத்திரத்தின் முத்து' என்று ஆசியப் பிராந்தியத்திலேயே தங்களை முத்திரை குத்துவதில் வெற்றிபெற்ற நாம் இங்கு விளையும் மாணிக்கக் கற்களையாவது உலகத்தரம்வாய்ந்த தொழிற்துறையாக மாற்றி அதன் வர்த்தக நாமத்துக்கு சொந்தக்காரராக தவறிவிட்டோம் நாம்.

உண்மையில் நம் புவியியல் இருப்பினை மிகைப்படுத்தி இருக்கின்றோம், அதாவது உலகமே எம்மை திரும்பிப்பார்கின்றது என நாம் கணக்குப்போடுகின்றோம். ஆனால் உண்மையில், உலகின் பல பகுதிகளிலும், மக்கள் தொகையில் பெரிய பிரிவுகளில் எமது நாடு அறியப்படவில்லை. குறைந்தது கூகிளில் கூட பிரபலமற்ற எமது நாடு 'ஈஸ்டர் தாக்குதல்களுக்குப்' பிறகு அதிகம் அறியப்பட்ட, தேடப்பட்ட இடமாகவு இலங்கை இருப்பதாக 2019 ல் செய்திகள் வெளியிட்டது.

இப்போது நாம் கொவிட்-19 வந்து பொருளாதாரத்தில் பாரிய அழிவினை ஏற்படுத்தி இருக்கின்ற ஒரு தருணத்தில் இந்த தசாப்தத்தில்; நுழைந்துள்ளோம். 1992 ஐ கற்பனை செய்து பாருங்கள். அன்று அரசியலில் இருந்த ஒருவர், சுருக்கமாக இந்த நாட்டின் ஒரு தலைவர், நாட்டை உலகளாவிய ஆடை உற்பத்தியின் ஆதார இடமாக மாற்றுவதற்கான வாய்ப்பைக் உருவாக்கி இருந்தார். இதற்கான மூலப்பொருட்கள் கிடைத்ததனால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக எங்கள் மொத்த ஏற்றுமதியில் 40 விகிதமும்;, மொத்த வேலைவாய்ப்பில் 15 விகிதமும், மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 விகிதமும் அதன் பங்களிப்பினை கணிசமாக வழங்கி வந்துள்ளது.

சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இந்த நாட்டில் இந்த ஆடைத் தொழிற்சாலைகள் உருவாக்கிய கிராமிய வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் பொருளாதார பங்களிப்பு, நாட்டை ஒரு நடுத்தர வருமான தேசமாக மாற்றுவதற்கான விதையை இட்டிருந்தது. அதுபோல் இச்செயற்திட்டத்தின் பெறுமதி எமது நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக் புரிந்திருக்கவில்லை. இவ்வளவுக்கும் மேல்;, ஆடைகளின் நிகர வருவாய் தேயிலை, ரப்பர் மற்றும் தென்னை போன்றவற்றின் ன்றுசேர்த்த உற்பத்தி வருமானத்துக்கு அதிகமாக உள்ளமைதான். ஆனாலும், சிலர் இத்தொழில்துறையைப் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் எல்லாம் உண்மையானவை, ஆனால் இத்தகைய அறியாமைதான் இந்த தேசத்தின் பொருளாதார தொற்றுநோய் என சொல்லலாம்.

இந்த கடுமையான பலவீனத்தை நாம் புதிய சிந்தனையாக மாற்ற முடியுமா? அல்லது பொருளாதார செழிப்பை நாடுவதில் பாதுகாப்புவாதத்தையும் பொருளாதார உள்நோக்கிய பார்வையையும் வளர்க்கப் போகிறோமா? 
உற்பத்தி அடிப்படையிலான புதிய முதலீடுகள், தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்கள் ஆகியவற்றை ஆதரிக்க எங்களுக்கு புதிய தூரநோக்குப் பார்வை தேவையில்லை. அவை தேயிலை, இரப்பர், தென்னை மற்றும் ஆடைகளுக்கு அப்பால், பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக எமது நாட்டுக்குள்ளே தேவையான மூலவளங்கள்;, அவற்றுக்கான களஞ்சியம், அவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு எங்கள் அருமையான இருப்பிடத்தைப் பயன்படுத்தலாம் என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லையா?. எனவே, இதுதான் நமது நாட்டின் தீராத கடன் மற்றும் பரிதாபகரமான உலகளாவிய பொருளாதார தரவரிசைகளை மேவி இந்திய துணைக் கண்டத்தின் நவீன வியட்நாமாக இருக்க முடியும்.

இதை அடைவதற்கு, அரசாங்கம் தனியார் துறையினருடன், கல்வி மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து, பலவீனமான புள்ளிகளை; கண்டறிய வேண்டும், கூட்டாண்மைகளின் உண்மை, சந்தை பயன்பாடு, அதன் தேவை என்பனபற்றிய தெழிவு மற்றும் எங்கள் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் உலகளாவிய முதலீட்டாளர்களுடனான ஒத்துழைப்பின் தேவை ஆகியவற்றினை மக்களுக்கு விளக்கவும் வேண்டும். 

இது நான் முன்வைக்கும் புதிய விடயங்கள் ஒன்றுமல்ல, ஆனால் சிங்கப்பூர், துபாய், இஸ்ரேல் மற்றும் வியட்நாம் போன்ற சிறிய பொருளாதாரங்களைப் பார்க்க மீண்டும் மீண்டும் எனக்கு எமது நாட்டின் போக்கை முறைப்பாடு செய்யத் தோணுகின்றது, ஏனெனில் கடந்த 25 ஆண்டுகளில் அவை உலகப் பொருளாதார அரங்கில் கடனாளிகளாக அல்லாமல் வெற்றியாளர்களாக வந்துள்ளனர். ஆனால் வெறும் 21 மில்லியன் சனத்தொகையினைக் கொண்ட எமது நாடு ஒரு வெற்றியாளர்களின் சந்தை அல்லாமல் இருக்கின்றது, இது மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவில் மும்பை நகரசயைவிட சிறியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்;.

எவ்வாறாயினும், பொருளாதார ரீதியாக நம்மை கீழ்நோக்கி அழைத்துச் சென்ற இந்த நாட்டின் பிளவுபட்ட அரசியலை நான் குறிப்பிடவில்லை என்றால் நான் தவறு செய்துள்ளேன் என்று பொருள்;. எமது நாட்டில் தேர்தலுக்குப் பிறகு தேர்தல்கள்;, அங்கெல்லாம் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு அன்றைய நாடகத்தின் ஒரு பகுதியாக மக்கள் மத்தியில் அரங்கேற்றப்படுகின்றது, சட்டங்கள், கொள்கைகள் மற்றும் வரி கட்டமைப்புகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை எதுவும் சொல்லக்கூடிய அளவுக்கு கிடையாது.

ஆனால்; அதிகாரம் கையில் இல்லையே, அதற்காக தேர்தல்கால பிரச்சாரமேடைகளில்;; சாத்தியமில்லாதவற்றால் மக்களை முட்டாளாக்குவதில் அநேக தலைவர்களின் நேரம் பயன்படுத்தப்படுகின்றது, ஆண்டுதோறும் தேர்தலில் வெற்றிகொண்டு அந்தவாய்ப்பைப்கொண்டு அவர்களுக்கு கல்வி கற்பிப்பதையும், தொழில் திறணை மேம்படுத்துவதினையும் வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள். அதனால் பல இளைஞர்கள் வேலையில்லாது குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றார்கள், வறுமைக்குட்படுகின்றார்கள். அதனால் இன்னும் அதிகம்பேர் வறுமக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகவே எனது அருமை நண்பர்களே! இந்த கட்டுரையைப் படிக்கும்போது, சிலர் 'அருமையானது' அல்லது 'ஒரு நல்ல கட்டுரை', 'நாம் ஏதாவது செய்ய வேண்டும்' என்று சொல்வார்கள், மற்றவர்கள் 'எழுத்தாளர் அவநம்பிக்கை கொண்டவர்' அல்லது 'குப்பை' என்று சொல்வார்கள், இன்னும் சிலர் 'எங்களுக்கு இப்போது சரியான நபர்கள் இருக்கிறார்கள், வரப்போகின்றார்கள்', 'ஆனால் உலகப் பொருளாதாரத்தில் இலங்கையை வணிகத்திற்கான ஒரு போட்டி இடமாக மாற்ற முயன்ற ஒரு நபர் என்ற முறையில், சுரங்கப்பாதையின் முடிவில் நான் எந்த வெளிச்சத்தையும் காணவில்லை. ஆக பல தசாப்தங்களாக எங்களை தோல்வியடைய வைத்தவர்களின் பார்வையில் நான் தவறாக இருக்கலாம்!

0 comments:

Post a Comment