அன்று
காலங்கள் கரைந்தன -என்
கோலங்கள் மறைந்தன
வீட்டைக் காணோம்- என்
வீட்டாரைக் காணோம்- வளர்த்த
ஆட்டைக் காணோம்
என ஒவ்வொன்றாய்,
சோகங்கள் நிறைந்தன!
ஆலயங்களிலும்
ஆற்றங்கரைகளிலும்
கூடராத்துக்குள்ளும்
கூடாத சூழலிலும்
ஆநாதையாய் அலைந்து!
இன்று
ஆர்பாட்டங்களுக்கும்
ஆள்பாட்டுக்கும்
தேர்தல் களங்களுக்கும்
தெருவோர மறியலுக்கும் என
மிருகங்களைப் போல்
அடிமைக் குறிவைத்திருக்கும்
எம்மை எல்லோரும்
இலகுவில் அடையாளம் காண்பர்
நினைத்துப் பார்க்க
சுகமானவையா அவையெல்லாம்!
கூடி மகிழ
குதூகலமானதா இவையெல்லாம்!
ஒரே ஒரு மகிழ்ச்சி
எம்மை வைத்து
அரசியலிலும் வாழ்க்கையிலும்
பலர் நலமாய் உள்ளனர் என்பதை
நினைக்கும்போது அந்த வலிகள்
வழி மறந்துபோகின்றன....
உங்கள் S.T.சீலன்
0 comments:
Post a Comment