ADS 468x60

06 January 2023

உள்ளுராட்சி சபைத்தேர்தல் இன்று தேவையா?

இன்று இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான முழு வேலைத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே தேர்தலை ரத்து செய்ய முடியும். திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலை நடத்துவதற்கு பத்து முதல் பன்னிரெண்டு பில்லியன் ரூபா வரை செலவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பணத்தை ஏழைகளுக்கு பொருளாதார நிவாரணம் வழங்க செலவிட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இலங்கையில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நடந்தன. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெற்றது. அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமை காரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தனியாக 2019 ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 4 வருடங்களாகும். அந்த வகையில், எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளின் பதவிக் காலமும் 2022 பெப்ரவரி மாதத்துடன் நிறைவுக்கு வந்தன. ஆயினும், உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அந்த சபைகளின் பதவிக் காலம் - ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது.

இதன்போது, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வகையிலும் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தி கட்சிக்கு வெற்றிகளை பெற்றுத் தருவதற்காக அல்ல, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து இரண்டு வருடங்களுக்குள் மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு.ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். மக்களின் கருத்தும் அரச தலைவரின் கருத்தும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதைக் காணலாம். உண்மையைச் சொல்வதென்றால் நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான பின்னணி இன்று இல்லை. வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், பொதுமக்களின் பங்கேற்பு வெகுவாகக் குறையலாம்.

எது எப்படியோ உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளமையானது, 'தேர்தலை ஒத்தி வைப்பதற்கான தந்திரம்' என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் பிபிசி தமிழிடம் கூறினார்.

தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் தினம் குறித்து, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கும் என்கிற பரவலான பேச்சுகள் அரசியலரங்கில் எழுந்துள்ளன. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சித் தேர்தலை   நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் மனுவொன்று செவ்வாய்கிழமை (03) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிறைந்துள்ள  தற்போதைய காலகட்டத்தில் - தேர்தலை நடத்துவது, பாரிய அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறி, ஓய்வுபெற்ற கேர்ணல் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இன்று பல அரசியல் அறிஞ்ஞர்கள்; இரண்டு முக்கியமான கருத்துக்களையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர் தேர்வில் 40 வீதம் புதிய படித்த முகங்களை அனுமதிப்பது மற்றும் அவர்களுக்கான அரசியல் வாய்ப்புக்கள் திறக்கப்பட வேண்டும் என்பதே. இரண்டாவது யோசனை என்னவென்றால், இந்த சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் நான்காயிரம் பேருக்கு மட்டுமே நிதி வசதிகளை வழங்க முடியும், மீதமுள்ளவர்கள் தானாக முன்வந்து பணியாற்ற வேண்டும். இந்த சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எட்டாயிரத்திற்கும் அதிகமாகும். இப்படியான உறுப்பினர்களைக் கொண்ட குழுவை பராமரிப்பது நமது பொருளாதாரத்திற்கு சுமை என்று அனைத்து தரப்பில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த தேர்தல் வாக்குக்கள்; மக்களின் விருப்பத்தை ஆராய ஒரு வாய்ப்பு என்றே பார்க்கலாம். உள்ளாட்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என சில கட்சிகள் கனவு காண்கின்றன. இந்தக் கனவின் காரணமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி சில வேளை மறந்துவிடலாம். ஆனால் மக்களின் அழுத்தம் மறந்து விட்டது. அதனால்தான் இரண்டு வருடங்களுக்கு தேர்தலை மறந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும் என ஆரம்பம் முதலே ஜனாதிபதி சுட்டிக்காட்டினாரோ தெரியவில்லை அதேபோல மக்களின் கருத்தும் வேறுபட்டதல்ல.

தேர்தல் தொடர்பான பல கருத்துக்கணிப்புகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. அதில் உள்ளாட்சி தேர்தலை யாரும் விரும்பி பேசுவதில்லை. தேர்தலுக்கு ஒதுக்கும் பணத்தை தேவையான பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, அந்தப் பணத்தைக் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கப் பயன்படுத்த வேண்டும் எனவும் மற்றவர்கள் பணத்தை வறியவர்களின் நிவாரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இது நடந்தாலும் உள்ளாட்சித் தேர்தல்கள் ஆட்சியை மாற்றாது. அதுபோல இத்தேர்தலால் பொருளாதாரத்திலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதனால் உண்மையில் அரசாங்கத்தின் பொருளாதாரச் சுமையும் அழுத்தமும் தான் மேலும் அதிகரிக்கும். 

எனவே இந்த வேளைகளில் ஒரு உண்மையான தலைவர் நாட்டையும் அதன் மக்களையும் பற்றிய ஆழமான பார்வையை கொண்டிருக்க வேண்டும். எரிபொருள் நெருக்கடி, உர நெருக்கடி மற்றும் எரிவாயு நெருக்கடியை தீர்க்க நாட்டின் இன்றய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று இவற்றுக்கான வரிசைகள் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நாட்டு மக்களை சுவாசிக்கக்கூடிய இடத்திற்கு கொண்டு வந்தது என்று கூறினால் அது பொய்யல்ல.


0 comments:

Post a Comment