தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஒரு ஸ்லாமியப் பெருநாள், கிறிஸ்மஸ் பண்டிகை என்றால் மாசக்கணக்கில் தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என்பன போட்டி போட்டுக்கொண்டு விஷேட சிகழ்வுகள், பல பல நேர்காணல்கள் நற்சிந்தனைகள் என அந்த பண்டிகையை அவர்களது கலாசாரத்துடன் தொடர்புபடுத்தி மீட்டெடுக்க செய்யும் சேவையில் எத்தனை பங்கினை எமது தமிழ் பண்டிகையான தைப்பொங்கலினை நாம் பெருமைப்படும் வண்ணம், சந்தோசப்படும் வண்ணம் அதனை அதன் வரலாற்றினை பெருமையினை எடுத்துச் சொல்லி மற்றவரும் விளங்கும் வண்ணம், அறிந்துகொள்ளும் வண்ணம் அவற்றை பறைசாற்றுகின்றார்கள் என்றால் அது பூச்சியம்.
இதனை பிற இன விழாக்களை செய்யக்கூடாது எனச் சொல்லவில்லை எங்களது தமிழர்களுக்காக என இயங்கும் அல்லது தமிழர்களின் பெயரைச்சொல்லி நடாத்திக்கொண்டிருக்கும் பலர் அவர்களது விழாக்களை அன்று மாத்திரம் சினிமாக் காட்சிகளை காட்டிக் கொச்சைப்படுத்துவது, வெறுமனே தொலைபேசியில் வாழ்த்துச் சொல்லுவது என வரையறுத்திருப்பது வேதனை வெட்கம்.
ஏன் இவர்களுக்கு இவற்றால் வருமானம் இல்லையா அல்லது இவற்றை ஊக்குவிப்பதற்கான தமிழர்கள் அவற்றில் கடமை புரியவில்லையா? அல்லது அவற்றை எல்லாம் ஒரு கேவலமாக நினைக்கின்றார்களா? என தெரியவில்லை.
எமது சிறுவர் சிறுமியர்களுக்கே இவை பற்றி தெரியவில்லை. ஏனைய இனமக்களுக்கு ஒன்றுமே தெரியப்படுத்தப்படவில்லை.
சிங்கள நண்பர்கள் என்னிடம் கேட்டனர், இந்தவிழாவினை எதுக்காக செய்கின்றனர். எப்படி கொண்டாடுகின்றனர்? என. ஏனெனின் அது அவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
ஆகவே ஊடகங்களுக்கு இவற்றில் முதல் பங்கு இருக்கின்றது. இதற்கு என பிரத்தியேக முயற்சி எடுக்காவிட்டாலும் உங்கள் தொலைக்காட்சி மூலையிலாவது ஒரு மூன்று நாட்களுக்காவது அவற்றினை பிரதிபலிக்கும் அடையாளச் சின்னங்களையாவது போடுவீர்களா?
எல்லாம் இழந்த எமக்கு எம்மை அடையாளப்படுத்திக்கொள்ள என சாட்சிகளாக இருக்கும் எமது மரபுகளையும் விழாக்களையும் பாரம்பரியங்களையும் விட எதுவும் கிடையாது.
ஆகவே உங்களை நான் தயவு கூர்ந்து வேண்டிக்கொள்வது என்னவெனில் இவற்றை கருத்தில்கொண்டு எமது தமிழை அதன் விழாக்களைக் கொச்சைப்படுத்த சினிமாக்களைக் காட்டி அவர்களது மனோநிலைகளை அந்த விழாக்களுக்குள் இருந்து திசைதிருப்பி எமது இனத்தினை இல்லாமல் செய்துவிடாதீர்கள்.
மாவட்ட கிராம மட்டங்களில் நடாத்தப்படும் விழாக்களை எமது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், அவற்றை குறைந்தது தைப்பொங்கல் விழாவின் ஒரு கிழமைக்கு முன்னாவது ஒலி ஒளிபரப்புங்கள். அவை சார்ந்த கருத்தாடல்களை நிகழ்வுகளாக தாருங்கள். அப்போது கொஞ்சமாவது எமது தடயங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஊடகங்கள் பங்கெடுக்கலாம் என்பது எனது கருத்து.
அனைவருக்கும் எனது இனிய பொங்கல்தின முற்கூட்டிய வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment