ADS 468x60

08 July 2023

ஏன் நாடு வங்குரோத்தானது?

பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு தகுதியற்ற அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டதால் இலங்கை பொருளாதாரப் படுகுழியில் விழுந்தது. ஆசியாவின் அனைத்து சமமான நாடுகளும் பொருளாதார ரீதியில்; சாதித்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. பொருளாதாரத்தை கையாளும் அதே அரசியல்வாதிகளை நாங்கள் மீண்டும் மீண்டும் நம்பியுள்ளோம். பல வருடங்களாக திரும்பத் திரும்ப கடைப்பிடித்து வரும் அந்த நடைமுறைக்கு முட்டாள்தனம், தந்திரம், சாணக்யம் போன்ற பல சொற்கள் எமது மொழியில் உள்ளன.

உங்களுக்குத் தெரியும் இரவு விழுந்த குழியில் பகலில்; விழக்கூடாது என்பது பழமொழி. இலங்கையர்கள் இரவில் விழுந்த குழியில் நடு பகலில் கண் திறந்து விழும் தேசமாக இருப்பதனைக் காண்கின்றோம். இல்லையேல் 75 வருடங்களாக ஒரே கூட்டத்தினரிடம் நாடு ஒப்படைக்கபட்டிருக்குமா?. இப்போதும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தீர்வுகள் அதே குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.

நாடு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் கொடூரமான பாதாளத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. காஸ், மின்சாரம், வரிசைகள் இல்லை என்றால் போதாதா என்று கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தலை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் தியாகம் செய்ய மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. தேர்தலை நடத்தும் அளவுக்கு அரசாங்கம் முட்டாள்தனமாக இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்வதாக இலங்கையில் உள்ள அரச அதிகாரிகளோ அல்லது வர்த்தக சமூகமோ எந்தக் கட்டத்திலும் எச்சரிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது ஆளும் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர்கள் இவ்வருட வரவு செலவுத் திட்ட ஆவணம் மேன்மையானது எனக் கூறியதை நாம் அறிவோம். கவனம் செலுத்தப்படாத ஒரு பக்கமும் உள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட வர்த்தகர்களைக் கொண்ட இலங்கை வர்த்தக சம்மேளனம், இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு வரவு செலவுத் திட்டமும் அழகாக இருப்பதாகப் பாராட்டியுள்ளது.

இப்போது பார்க்கும்போது இவர்கள் அனைவரின் உதவியால்தான் நாடு வங்குரோத்தானது என்று தோன்றுகிறது. நாடு வங்குரோத்தாகிப் போனாலும் அந்தக் குழுக்களின் ஊழல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவில்லை. 


0 comments:

Post a Comment