ADS 468x60

04 October 2023

நீதித்துறை குற்றவாளிகளால் ஆளப்படுமா?

இன்று நாடு முழுவதும் கொஞ்ச நாளாக இடம்பெறும் வாதம், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி  டி. சரவணராஜா கடந்த வாரம் பதவி விலகினார் என்பதுதான்.

இந்த நேரத்தில், மக்களாகிய நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து, பாதாள உலக அல்லது வன்முறை சக்திகளுக்கு பயந்து நாட்டின் வழக்கறிஞர்கள் பதவி விலகுவது மிகவும் மோசமான முன்னுதாரணமாகும் என்று பிரசாபிக்கின்றோம் இல்லையா!. 

இங்கு மேலும் கூறும்போது, குற்றவாளிகளுக்கு பயந்து நீதிபதிகள் பதவி விலகினால், குற்றவாளிகள்தான் ஒரு நாள் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க நேரிடும். 

நமது நாட்டில் மாத்திரமல்ல, இந்தியா, கொலம்பியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் வன்முறை மற்றும் பாதாள உலகத்திற்கு பயந்து வழக்குரைஞர்கள் ராஜினாமா செய்வது மிகவும் பொதுவானது.

கொலம்பியா போன்ற நாடுகள் பொதுவாக போதைப்பொருள் பிரபுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள். இந்த போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தனியான கொள்கைகள் மற்றும் தனி நீதிமன்றங்களும் உள்ளன. அதுபோல தனிப்படைகள் உள்ளன. 

தமக்கு எதிராகச் செல்லும் அரச அதிகாரிகளை கைது செய்து தமது பாதாள உலக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி மரண தண்டனை வழங்கி சுட்டுக் கொல்வதுதான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனப்படுவோரின் வழக்கம். 

மேலும், நீதிமன்றம் தங்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கினால், கொலம்பியாவில் வன்முறை கும்பல்கள் நீதிபதிகளை சுட்டுக்கொல்லுவது வழக்கமாகிவிட்டது.

இப்போது மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி. சரவணராஜாவின் கேள்விக்கு வருவோம்.

சரவணராஜா தற்போது இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார் என்பது தெரிந்ததே. ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு மரண அச்சுறுத்தல் இருந்தால் அவர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சரவணராஜா அதைச் செய்யவில்லை.  அப்பாவி சிறு குழந்தையைப் போல் நடந்து கொண்ட அவர், தான் சேவையிலிருந்து விலகுவதாகக் கடிதம் ஒன்றை நீதிச் சேவை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார் எனக்கூறுகின்றனர்.

நம் அனைவருக்கும் தெரிந்தபடி, 1988-89 கால ஆட்சியில்தான்;, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு ஓடுவது, கடத்தல் தொழிலாகவே மாறியது. உண்மையில் இதன்போது தயக்கமின்றி கொல்லப்பட்டதால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். தப்பியோடியவர்களில் கடத்தல்காரர்கள், கற்பழிப்பாளர்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகள் தங்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர் அதுவேறுகதை. 

இந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. சில உயரடுக்கு குழுக்கள் வாடகைக்கு துப்பாக்கி ஏந்தியவர்களை நியமித்து, அவர்களது வீடுகளின் வாயில்களில் சுட்டு, தங்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மேற்குத் தூதுவர்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேறினர். 

தன் நாட்டில் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக எந்த நீதிபதி சொன்னாலும், அது மிகவும் மோசமான நிலைமைதான். ஒரு நாடு நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையால் ஆளப்படுகிறது. இங்கு பாதாள உலக குண்டர்கள் அல்லது பிற வன்முறையாளர்களிடமிருந்து நீதித்துறையை அச்சுறுத்துவதன் மூலம், ஜனநாயகத்தினை ஆதரிக்கும் ஒரு கோபுரம் முற்றிலும் தரையில் விழும் அபாயம் உள்ளது. 

வெறும் இரண்டு தூண்கள் கூரையைத் தாங்க முடியாது. அப்போது மேற்கூரை இடிந்து விழும் நிலையில் மீதமுள்ள இரண்டு கோபுரங்களும் இடிந்து விழுகின்றன. மறுபுறம் சரவணராஜாவின் சம்பவம் சர்வதேச ரீதியான பார்வையில் எமக்கு பெரும் அடியை கொடுத்துள்ளது. இந்தப் பேராபத்தில்; இருந்து வெளிவர, முறையான பக்கச்சார்பற்ற   விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று  பரிந்துரைக்கிறோம். 


0 comments:

Post a Comment