இந்த நாடு விவசாய நாடு. ஆனால் இந்த நாட்டில் 'விவசாயம்' தவிர வேறு எல்லாத் தொழிலும் வளர்ந்து வருகின்றது. அதாவது விவசாயம் ஒரு தொழிலாக வளரவில்லை. அது தானாக எடுத்துவரப்படுகின்றது. அதற்கு ஒரு மேம்பட்ட அறிவியல் திட்டம் தேவை. நவீன தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அது இல்லாதபோது, எமது விவசாய பூமி தரிசாக மாறி விவசாயமே அழிந்துவிடும்.
இன்று விவசாயம் மட்டுமின்றி எந்த வேலையிலும் வாழ முடியாத கடினமான யுகம் இங்கு உருவாகியுள்ளது. ஆனால் பலர் சட்டி பானைகளை கழுவவும், வடிகால்களை வெட்டவும் அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் மாற்று முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே கிராமங்களில் கூலி வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாகியுள்ளது, இந்த நிலையில் வாழ்வில் ஆயிரம் ஆசைகள் கொண்ட இளைஞர்களில் 20 சதவீதம் பேர் விவசாயத்தின் பக்கம் திரும்புவது ஒருபுறம் உற்சாகமான செய்தி.
இந்நாட்டு இளைஞர்கள் சோம்பேறிகள் அல்ல. அவர்கள் சுதந்திரமானவர்கள். கோவிட் தொற்றுநோய் வருவதற்கு முன்பு, இந்த நாட்டின் இளைஞர்கள், கட்சி நிற வேறுபாடின்றி, எதுவித ஊக்கமுமளிக்காமல் விவசாயத்தில் ஈடுபட்டனர். தரிசு நிலங்களை விளைவித்து அறுவடை செய்தனர். காய்கறிகள் பயிரிடப்பட்டன. கோவிட் தொற்றுநோயால் மேலும் இந்த நிலைமை துரிதப்படுத்தப்பட்டது. நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் கூட, இடம் கிடைக்கும் இடமெல்லாம் விவசாயம் செய்தார்கள். நாடு ஒரே விவசாயத் தோட்டமானது.
என்ன நடந்தது? சில்லாங்கொட்டடை சிதறியதுபோல மேலே சொன்ன சூழ்நிலை உடைந்து சிதறியது. இதற்கு இயற்கை உரத் திட்டம்தான் காரணம். நல்ல முடிவாக இருந்தாலும், அதைச் செயல்படுத்திய முட்டாள்தனத்தால், விவசாய நிலத்தில் புதிதாக சேர்ந்த இளம் விவசாய சமூகம் மட்டுமின்றி, பாரம்பரிய விவசாயியும் விவசாயத்தில் அலுத்துப் போனார்கள். 'சேற்றில் இறங்கும்; விவசாயி அரியணைக்கு தகுதியானவர்' என்று கூறப்பட்டது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விவசாயி அரியணைக்கு செல்லாமல் கல்லறைக்கு செல்ல வேண்டியிருக்கின்றது.
இதனால், விவசாயத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய தொழில் என்று இன்றைய இளைஞர்கள் நம்புவதில்லை அதனால் தான் விவசாயத்தை தவிர்த்து அரசு வேலை தேடும் போக்கு அவர்களுக்கு அதிகரித்து உள்ளது.
ஆகNவு, ஒரு நாட்டின் விவசாய அமைச்சரின் பொறுப்பு, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்குவது அல்ல, இளைஞர்களிடம் விவசாயத் தொழில் குறித்த நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவதுதான். அதற்காக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல். விவசாயத் துறையில் நிபுணர்களின் உதவியை நாடுதல்;. விவசாயத் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் என்பவைதான்.
0 comments:
Post a Comment