ADS 468x60

17 February 2010

புதிரெடுத்தல்......


தமிழர்களின் வாழ்வு பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..

இன்று தைப்பூச திருநாளுங்க...உன்மையில் நம்ம தமிழர் பண்பாடு மற்றய இனத்தினரையும் விரும்பவைக்கும் வகையில் அதில காணப்படுகின்ற பண்பாடு, நாகரிகம் மற்றும் ஒழுக்க விழிமியங்கள் சிறப்பாக அமைந்திருக்கு..
தமிழர்களின் புதிய வருடமானது தை மகள் வருகையுடன் ஆரம்பமாகிறது, இதனால்தான் நம்மட முன்னோர்கள் 'தை பிறந்தால் வழிபிறக்கும்' என்றார்கள். இந்த மாசத்தில் வருகின்ற தைப்பூச திருநாளில் 'புதிரெடுத்தல்', 'புதிருண்ணுதல்' எனும் பாரம்பரிய மரபுகள் இருந்து வருதுங்க...

பாத்திங்கனா புதிரெடுத்தல் என்பது தைப்பூச நாளில் விளைந்த வயலில் கதிர் எடுத்து, வீட்டின் முன்வாசலில் வைத்து அதன் பின்னர் நல்லநேரம் பாத்து வீட்டினுள்ளே எடுப்பதனைக் குறிக்கின்றது. இதில விசேசம் என்னென்றால் முந்திய வருடத்தில் எடுத்த பழய கதிரை புதிய பெட்டியினுள் எடுத்து அத்துடன் பணம், பொன், தங்கம், பாக்கு, வெற்றிலை, பூ மற்றும் திருநீறு என்பனவற்றையும் வைத்து அதனை வெள்ளை பட்டினால் மூடி கடவுளை பிராத்தித்து பின் இந்த பெட்டியோடு சென்று வெளியிலே இருக்கும் புதிய கதிரை சந்தோசமாக எடுத்து உள்ளே சாமி இருக்கும் அறையினுள் கொண்டுவருவார்கள்.

கொண்டுவந்த புதிரை அரிசாக்கி புதிதாய்ப் பொங்குவார்கள் இதனை புதிருபொங்கல் என்றழைப்பாங்க. இந்த புதிரினைப் பொங்கியபின் விளக்குச்சோறு கூட்டி அதன் பின்னர் புதிய பொங்கலுடன் பால், பழம், சீனி இவையெல்லாம் போடடு குடும்பத்தலைவனால் பிசைந்து எல்லோரும் ஒன்றாக உண்ணுவர்..அத்தோடு அன்றைக்கு நல்ல கறிகூட்டி சந்தோசமாக உண்டு மகிழுவார்கள்... இவ்வாறான வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிமுறையினை தமிழ் பண்பாடு தவிர எதிலும் காணமுடியாதங்கோ...

0 comments:

Post a Comment