
ஞாபகம் வருதா- அந்த
சாம்பல் குளைத்த அப்பம்
சிரட்டை பானை
செம்பருத்தம் பூ எண்ணை
மண்ணில் ஆக்கிய சோறு
மணலில் கட்டிய வீடு
பூமுத்தன்காய் கறி
கடதாசியில் வெட்டிய காசி
சிரட்டையில் செய்த திராசு
சில்லறைக்கு கிழவலங்கட்டி
ஆமணக்கங் காய் பம்பரம்
அல்லித்தண்டில் தன்னிக்குழாய்
கோமணம் கட்டி குளிக்கிறது
கோடைகாலத்து கச்சான் காத்து
கெட்டபோளில் குருவி அடிக்க
கிரவல் கல் பொறுக்கிறது
உத்திக்கம்பு விளையாடி
பாட்டம் அடிப்பது
மாங்காய் களவெடுத்து
மண்ணுக்குள் தாட்டு வைப்பது
குண்டடித்து பள்ளிக்குள்ள
கம்படி வேண்டுவது
இன்னும் நிறைய வந்திச்சி
இந்த சில்லறை கடையை
பார்க்கும்போது.................
0 comments:
Post a Comment