ADS 468x60

11 August 2017

பட்டிருப்பு தொகுதியில் ஒருங்கிணைப்பின் தேவைப்பாடு


ஒவ்வொரு நாடும், பிரதேசங்களும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமே பல வெற்றிகளையும் சாதனைகளையும் இலக்கினையும் அடைந்துள்ளன. ஆனால் இந்த ஒருங்கிணைப்பு இல்லாத அனைத்துச் செயற்பாடுகளும் பல பின்னடைவுகளையும், தோல்விகளையுமே சாதித்துள்ளன.


இங்கு தலைமைத்துவங்களே அவர்களைச் சார்ந்துள்ளவர்ளை இணைத்துக்கொண்டு இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். மாறாக மக்களை பிழையாக வழிநடத்தக்கூடாது. அதற்காக தொடர்புகளைப் பேணுவதுடன் ஒவ்வொரு செயற்பாட்டுடனும் ஏனையோரையும் இணைத்துக்கொண்டு பெறும் ஒரு அபிவிருத்தியே நிலையானதாக இருக்கும். இன்று பிராந்தியங்கள் கூட போட்டித்தன்மையான நன்மைகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த நன்மைகளையே வரவேற்க்கின்றன. ஆனால் நாம் இன்னும் போட்டித்தன்மையால் பல இழப்புகளையே சந்தித்து வருகின்றோம். அது பொருளியல், அரசியல், கல்வி எதுவாகவும் இருக்கலாம்.


இன்று நாட்டின் வளர்ச்சிக்கு மாத்திரமல்ல ஒரு பிராந்திய வளர்ச்சிக்கும் தனியார் மற்றும் அரசாங்கங்களின் ஒருங்கிணைப்பு அவசியமாகும். ஆனால் இவற்றையெல்லாம் யாரும் கணக்கெடுப்பதில்லை அதனால்தான் ஒரு வளர்ச்சியில்லாத நிலையில் எமது பிரதேசங்கள் இன்னும் இருந்து வருகின்றன.

ஆகவே ஒரு பலமான ஒருங்கிணைப்பு எமது பிரதேச வளர்ச்சியில் அவசியம் தேவையாக இருக்கின்றது. ஆனால் அவை உணர்ந்துகொள்ளப்படவில்லை இன்னும்.

நான் சென்ற மாதம் எமது பட்டிருப்பு தொகுதியில நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு; அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குள்ள அக்கறைக்கு பொருத்தமான இரு அதிகாாிகளை சந்திக்க கிடைத்தது. 
கல்வியை முன்னெடுத்துச் செல்வதில் இப்பகுதியில் எதிர்நோக்கும் வால்கள், அதை தாண்டிய வளர்ச்சி அவற்றை முறியடிப்பதற்க்கான பொறிமுறை ற்றி நீண்ட நேரம் சுவாரசியமாகவும் காரசாரமாகவும் விவாதிக்க கிடைத்தது.
மாவட்ட தகவலின்படி பட்டிருப்பு வலய மாணவர்கள் தொகை ஒப்பீட்டளவில் அதி குறைவாக இருந்தபோதும் (17 ச.வீ) விளையாட்டு, கல்வி பெறுபேறுகள் மற்றும் ஏனைய பாடசாலை மட்ட போட்டிகளில் முதன்மைபெற்றுவருவது எமக்கு பெருமையளிக்கும் விடயம்.
அதற்குமேலாக கூடியளவு வறிய மாணவர்களைக் கொண்ட பட்டிருப்பு தொகுதியில், அதிகூடிய பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் நல் ஆசிரியர்கள், பணிப்பாளர்கள், பெற்றோர்கள் சிரத்தையுள்ள மாணவச் செல்வங்கள் இவர்களை எல்லாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. மட்டக்களப்பில் உள்ள 5 கல்வி வலயங்களில் பட்டிருப்பு வலயத்தில் மாத்திரம் தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் தோற்றி தேறிவயர்களின் விகிதம் 27% ஆக இருக்க ஏனைய வலயங்களான முறையே, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா வலயங்கள் 19%, 7%, 21%, 9% என்ற அடிப்படையிலேயே தேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வலயத்தின் 2015 இன் மாவட்ட புள்ளிவிபரப்படி ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை கற்ப்பிபதற்க்கான ஆசிரியர் தேவை 1234 இருக்க கடைமையாற்றும் ஆசிரியர்கள் 1169 அதைவிடக்குறைவாகவே இருக்கின்றமை அடுத்துள்ள சவாலாகும்;.
இது இவ்வாறு இருக்க கல்குடா தொகுதியில் தேவையாக இருக்கும் 1193 ஆசிரியர்களும் நிரப்பப்பட்டும் அதுபோல் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ள ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகவும் இருப்பது புள்ளிவிபரம் காட்டும் உன்மை.
அதுவும் கல்குடா மற்றும் மட் மேற்கு வலயத்தில் நிறைவான ஆசிரியர்கள் இருந்தும் மிகக் குறைவான பெறுபேறுகளை காட்டியுள்ளமை ஒப்பீட்டளவில் எமது வலயத்தின் திறமையான, அர்ப்பணிப்பான, பொறுப்புணர்வுள்ள அதிகாரிகளை அடையாளம் காட்டுகின்றதென்று கூறலாம். 

இவர்களது இந்த பெறுபேறுகளை இன்னும் கூட்டிக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி நாங்கள் இன்னும் சிந்திக்க வேண்டும் அதற்கு வேறு அனைத்து துறைசார்ந்தவர்களும் இணைந்த வகையில் செயலாற்ற முன்வரணும் என நாங்கள் விவாதித்துக்கொண்டோம். ஆனால் அவற்றை நடைமுறையில் கொண்டுவருவது சிரமமாக இருப்பதாக உணரக்கூடியதாக இருக்கிறது. ஓன்றுபடுவோம் முன்னேற்றுவோம்.

0 comments:

Post a Comment