ADS 468x60

06 June 2011

கவலைக்கிடமாகி வரும் மனித வாழ்க்கை.....

மனிதர்கள் என்ன புல்பூண்டு, பூச்சுகள் கூட அழிந்து விடக்கூடாது என்று சட்டம் இயற்றி அவற்றை எல்லாம் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இன்று மனித அவலத்தில் மிகமோசமாக இருப்பது வீதி விபத்துக்கள்தான். யுத்தம் போன்று மனித சமுகத்தினையே அச்சுறுத்தும் ஒரு இடர் எனவும், அதனால் வீதி சமிக்ஞைகளை கையாழ்வதில் ஒருமித்த அர்ப்பணிப்பு சாரதிகளுக்கு தேவை எனவும் அண்மையில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு மாநாட்டில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.


இலங்கையில் அனைத்துப் பாகத்திலும் சுமார் 150 வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருவதுடன், இங்கு கணக்கெடுப்பின்படி 2000 ஆண்டு தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் மட்டும் 21,000 உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளதோடு, 180,000 பேர் காயமுற்றதுள்ளதுடன், 46,000 பேர் மிகமோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளமை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக உயிர் இழந்த 65 விகிதமானவர்கள் 16 தொடக்கம் 55 வயதுக்குட்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர், குடும்பத்தினை வழிநடத்துபவர்கள், அதுபோல் இவர்கள் இலங்கையின் உற்பத்திக்கு பங்குசெலுத்தும் துடிப்புள்ள மனிதவளங்கள் அல்லவா. அதுபோல் இந்த உயிர் இழப்புகள், காயமடைதல் சம்மந்தமாக அரசு வருடாவரும் அநேகமான பணத்தினை மருத்துவச் செலவாக மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கையில் 23 விகிதமான வீதி விபத்துகள் சாரதி அனுமதிபத்திரம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துபவர்களினால் ஏற்ப்படுகின்றது எனவும், அதிலும் மோட்டார் சைக்கிள் மூலமான விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதுடன் அதற்க்கு அடுத்து லொறி, தனியார் பஸ் வண்டிகள் என்பன் முன்னிலையில் இருக்கின்றது எனவும் கண்டயப்பட்டுள்ளது. இவை வேகமாக வாகனத்தினை செலுத்துதல், வாகனத்தினை பிழையான முறையில் முந்திச் செல்லுதல் மற்றும் திருப்பி எடுத்தல் போன்ற சந்தர்ப்பங்களில்தான் இவை அநேகமாக இடம்பெறுகின்றன. 

இவை எல்லாம் எமக்கு உணர்த்துவது என்னவெனில், நடைமுறையில் இருக்கும் நிலையான பொருளாதார வளர்சியை நோக்கிய பாதையில், முட்டுக்கட்டையாக இருப்பதனைத்தான் காட்டுகின்றது. இவற்றுக்கு சரியான நடவடிக்கை எடப்பதற்க்கான செயல்முறை தேவை, அவை மூலம் அந்தச் சமுகத்துக்கான பாதுகாப்பு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர் புத்திஜீவிகள்.

இந்தியாவின் முதல் மரியாதை..
எது எவ்வாறு இருப்பினும் அண்மையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயிர்களுக்கு முதல் மரியாதை கொடுக்கும் சட்டமூலம் இந்தியாவில் சுப்ரீம் கோட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவெனில் யார் வீதியில் ஒரு விபத்தை கண்டாலும் அந்த நிமிடமே பொலிசின் விசாரனை இல்லாமல் உடனடியாக பக்கத்தில் இருக்கும் வைத்திய சாலையில் எதுவித பொலிஸ் அறிக்கையும் சமர்ப்பிக்காமல், விசாரணையும் கொடுக்காமல் அந்த உயிரை பாதுகாக்க உதவி செய்யலாம், என்றும் அதுபோன்று வைத்தியர்களும் எதுவித அறிக்கையும் எடுக்காமல் உயிரைக்காக்கும் பணியை முதலில் செய்ய வேண்டும் என்றும் அந்தச் சட்டம் 2011இல் இயற்றப்பட்டு அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இதன் பிரதிபலனை நல்லமுறையில் அந்நாடு அடைந்து வருவதாகவும் செய்தி கூறுகின்றது.

இலங்கையும் சட்டமும்.
ஆனால் 3ம் திகதி என் கண்முன் நடந்த ஒரு வீதி விபத்து கண்கலங்க வைத்தது. காலை தூக்கம்விட்டு எழுமுன் திடீர் என்று ஒரு பேரிடி சத்தம் கேட்டது, சிறிது நேரத்தில் ஓலம் கேட்டது...நான் அங்கு செல்லும் முன்...தலையால் குடம் குடமாய் இரத்தம் வழிந்த வண்ணம் இருப்பதாக கூறினார்கள், சுற்றி நின்றவர்கள் வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக கைபோட்டும் யாரும் நிற்க்கவில்லை, எல்லோருக்கும் பயம்.... செக்கன்கள் நிமிடங்களாகி, நிமிசம் மணித்தியாலங்களாக கூட போயிற்று.

அந்த இடத்தில் பிரதேச செயலாளர் வருவதைக்கண்டு எல்லோரும் சந்தோசத்தில் இருந்தனர்.... ஆனால் அவர் வண்டியை விட்டு இறங்காமல் பார்த்துவிட்டு அவரும் சென்றுவிட்டார். நான் பொலிஸில் அறிவிக்கிறேன் என்று சொல்லி அவருக்கு கடமை செய்வதற்க்காக கொடுத்த வாகனத்தில் இருந்து கீழ் இறங்காமல் எட்டிப் பார்த்து விட்டு ஏனோ தானோ என்று சென்றார்....

போலிஸ், ஆஸ்பத்திரி என்று எல்லோரும் தொலைபேசியில் அழைத்தும் ஒரு மணித்தியாலங்களின் பின் வந்து ஏதோ எல்லாம் கோடு கீறி அவரை அனுப்பும் போது ஒரு அருமையான உயிரை அந்தக்குடும்பம், இந்தப் பிரதேசம் இழந்து விட்டது.

பிரதேச செயலாளர் அவர்களுக்கு இல்லாத செல்வாக்கு சாதாரண பொது மக்களுக்கு இருக்கிறதா? இவரை தூக்கி காப்பாற்றினாலோ, இல்லாது இறந்தாலோ மாசக்கணக்கில் கோடு, கொத்தலம் என்று பதில் சொல்ல வேண்டும்... சில நேரங்களில் சிறையும் செல்லவேண்டும்.. ஆகவே தான் இந்த உயிரை நாய்க்கும் மோசமாக அநாதையாக அந்த மனிதன் மனிதம் செத்த சட்டத்தின் முன் உயிர்பிழைக்க முடியாமல் இறந்து போனது ஐயோ பரிதாபம்........

இந்தியா உனக்கு இந்த இடத்தில் நான் தலை வணங்குகிறேன்... எப்போது எமது சட்டங்கள் இந்தியாவின் சட்டம்போல் உயிர்கு முன்னுரிமை கொடுக்குமோ !அன்றைக்கு பெறுமதிமிக்க உயிர்களைக் காப்பாற்ற முடியும்... உங்கள் கருத்துக்கள், சட்ட விளக்கங்கள் மேலதிக விளக்கத்துக்காக வரவேற்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment