'உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்பது என்னவோ மனிதனுக்கு மட்டுமல்ல, எமக்கெல்லாம் உதாரணமாகத் திகழும் கடினமாக முயற்சியுடன் ஓயாது உழைக்கும் எறும்புகள், தேனீக்கள் போன்ற ஜீவன்களுக்கும் சேர்த்துத்தான் என எண்ணத் தோணுகிறது.
முதியோர்கள் இனிக்கும் அடிக்கரும்பு, கடைந்தெடுத்த வெண்ணை, கனிந்து வந்த பழுத்த பழங்கள், காற்றும் மழையும் கடந்த வந்த அனுபவக்கப்பல்கள் அவர்கள் ஞானிகள், வழிகாட்டல்கள் இன்னும் எல்லாம் அவர்களே. ஆதனால்தான் அவர்கள் கனம் பண்ண வேண்டியவர்களாக உலகலாவிய ரீதியில் ஞாபகப் படுத்தப்படுவது பெருமைக்குரியது.
மனிதர்கள் ஒன்றும் புத்திஜீவிகளாக, கலைஞர்களாக, உழைப்பாளியாக பிறப்பவர்கள் அல்லர், மாறாக அவர்கள் அவ்வாறு உருவாகிக் கொள்கிறார்கள். நிறைய விடயஙந்கள் மனிதன் ஏனைய ஜீவாராசிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறான். இதனைத்தான் கவிஞ்ஞர் கண்ணதாசன் சொன்னார் 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்' என்று.
நாம் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு புதிய விடயம் என்ன தெரியுமா!