ADS 468x60

15 October 2011

நல்லொரு கூத்து

உலகத்தின் செம்மொழி அந்தஸ்த்து பெற ஒரு மொழிக்கு எத்தனையோ தகுதிகள் வேண்டும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு நாம் வாழும் போதே தழிழனாய் பிறந்தேன், என்ற பெருமை கொள்ள வைக்கும் எங்கள் அழகு தமிழுக்கு அழகு சேர்க்கும் தழிழ் இலக்கிய விழா கிழக்கு மண்ணின் முக வெத்திலையாக இருக்கும் மீன்பாடும் தேன்நாட்டில், கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் ஏற்ப்பாட்டில் நடாத்தப்படுவது பாராட்டபட வேண்டியது' என கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி பிறேம்குமார் நிகழ்வுகளின் இடையே நிறுவிக்காட்டினார்.

ஒரு இனம் நீண்டிலங்க அதன் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி இந்த நான்கு சக்கரங்களும் தேவை. மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோரப்பிடியில் கை நழுவிய எமது இனத்துவ அடையாளங்கள், இன்று மின்னல் போல் ஆங்காங்கு பளிச்சிட்டு மறைந்தாலும,; அவை மின்னத் தொடங்கி இருக்கிறதை நினைத்து பெருமை தான்.

மட்டக்களப்பின் மகஜன கல்லூரி அரங்கில் எல்லோரும் கண்குளிர, செவிக்கினிமையாக கலாசாரச் சாறு பிளிந்த நிலாச்சோறு உண்ட பெருமை. அப்படி ஒரு மீளெழுச்சி, புத்தாக்கம், புரட்சி, விழிப்பூட்டல் அத்தனையும் கலந்து தமிழ் இலக்கிய விழாவாக பரிநமித்தது. இந்நிகழ்வு முத்தழிழை முடிச்சவிழ்க்க மூன்று நாள் (ஐப்பசி 14,15,16) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

எனக்கொரு பெருமை, ஆனந்தம், மயிர்க்கூச்செறிவு தழிழ் வளர்த கலைகள் இப்படிப்பட்டவையா? ஏன்று பிரமிக்க வைத்தது அங்கு நடந்தேறிய நிகழ்வுகள். நான் செங்கலடி மாணவர்களின் பரதம் குழு நடனம் பார்த்து முடிந்ததும் தலையையுரையை கலாநிதி பிறேம்குமார் நிகழ்தி முடிக்க அறிவிக்கப்பட்டது அகலிகை எனும் நாட்டுக்கூத்து.
(உப வேந்தர் கலாநிதி பிறேம்குமார் நிகழ்வுகளின் இடையே பேசுகிறார்.)
அந்தக் காலத்தில் எமது மண்ணின் வாசைன பரப்பிய இலக்கிய வடிவங்களில், இலகுவாக மக்களிடையே புராணக்கதைளின் ஊடே ஒழுக்கம், நடைமுறைகள், இறைக் கொள்கை, மறுபிறப்பு, பாவ புண்ணியம் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகம், மக்கள் ரசித்து உருசித்த நாடகம் அது தமிழர்களின் பாரம்பரிய கலைப் பெட்டகம் என்று சொல்லலாம்.

மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் எதிலும் விட்டு வைத்தவர்கள் அல்ல என்பதை இந்த கூத்தை ஆடி நிருபித்துள்ளனர். வடமோடிக் கூத்தை அதற்கே உரிய பாணியில் துடினமான நுணுக்கமான ஆட்டத்துடன் ஒரு அழகான அரங்களிக்கை செய்துள்ளமை பாராட்டுதற்குரியது. பல்கலைக்கழகங்கள் செய்யத் தவறும் பணியினை பாடசாலைகள் செய்வதையிட்டு வெட்க்கப்பட வேண்டியவர்கள் அநேகம் அநேகம். அனைவரும் அந்தக்கூத்தை பார்த்து இரசிக்கும் போது ஒருவர் சொன்னார், 'எமது பெறுமதி வாய்ந்த கலைகள் எத்தனை எம் தமிழ் உறவுகளுக்கு தெரியாமல் மக்கி மறைந்து இருக்கிறது, அவர்கள் அநாகரிகத்தினை கற்றுக் கொள்ள வாய்ப்பாய் இருக்கும் தொலைக்காட்சிக்குள் சொருகப்பட்டு கிடக்கிறார்களே' என்று ஆதங்கப்பட்டார்.
(செங்கலடி மாணவிகளின் நடன அரங்கேற்றத்தின் போது)
இருப்பினும் எனக்குள் ஒரு மனக்குறை கிழக்குப் பல்கலைக் கழகம் துவக்கம் எந்த உயர் கல்வி கலாசார பீடங்களிலும் ஒரு நல்ல வசதியுடன் கூடிய கலை நிகழ்வுகளை செவ்வனே அளிக்கை செய்யக்கூடிய அரங்கு மட்டக்களப்பில் இல்லாமல் இருப்பது, மீன்பாடும் தேநாடு என்று சொல்வதற்கு வெட்க்கப்பட வைக்கிறது. 

வெறுமனே உட்கட்டுமானங்களை துரிதப்படுத்தி அபிவிருத்திக்கு அர்த்தம் புகட்ட முடியாது. மக்களின், அவர்கள் இனம் சார்ந்த கலை கலாசாரம் வலுவாகக் கட்டியெழுப்பப் படுதல் வேண்டும். அது தான் நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு வித்தாக அமையும். யப்பான், சைனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இவற்றுக்கு கொடுக்கும் வலுவான முக்கியத்துவம்தான் அவர்களை ஒட்டுமொத்த அபிவிருத்திப் பாதையில் முன்னிற்க்க உதவுகிறது.

எது எவ்வாறு இருப்பினும் பல நாட்களுக்குப் பின் இவ்வாறான கலை நிகழ்வுகள் அரங்களிக்கை செய்யப்படுவது பாராட்டதக்க விடயமாகும். இது போன்று இன்னும் நல்ல நிகழ்வுகளை தழிழ் தலைவர்கள் ஒழுங்கு செய்ய முன்வந்து எம் இனத்தையும், தமிழையும் வளர்க்கா விட்டாலும் காப்பாற்ற வேண்டும் என நாம் விரும்புகிறோம். மக்கள் அனைவரும் இலவசமாக பெரும் செலவில் மூன்று மாவட்ட அனைத்து இன கலாசார நிகழ்வுகளின் சங்கமம் எமது காலடியில் கொண்டு வந்து நடாத்துவது எமக்கெல்லாம் கிடைத்த வரம் என நினைத்து இந்த கலைகளை ஊக்குவிக்க உங்களை வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment