எத்தனையோ விதமான வளர்ச்சிகள் முன்னெடுத்துச் செல்லவேண்டி இருக்கிறகு இன்னும் எமது மட்டு மாநிலத்தில்! இன்று உலகத்தில் சனத்தொகை அதிகரித்துவிட்டது, அதனால் நிலம் குறுகி ஜீவராசிகளுக்குகூட மேய்ச்சல் தரை இல்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலுக்கான நியாயமான விலை தளர்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பன காரணமாக பசுக்களைக்கூட விற்று தங்கள் புளைப்பை நடத்தவேண்டியவர்களாக மாறிவிட்டனர் மட்டக்களப்பு வாள் விவசாயிகள்.
பசுவை தெய்வமாகப் போற்றும் தமிழர்கள் பசுக்கொலையை எதிர்க்கும் ஜீவகாருண்யத்துக்கே சொந்தக்காரர்கள். இந்த நிலை மாறிவந்தாலும் இதை தடை செய்ய முன்னெடுக்கும் நல்ல முயற்ச்சிகளை பாராட்டாமல் இருக்க முடிவதில்லை. நண்பர் ஒருவர் மட்டக்களப்புக்கு வந்திருந்தபோது, சில எமது கிராமப்பகதிகளை சுற்றிப்பார்வையிட்டார். அதன்பின் இம்மக்களுக்கு ஏதாவது செய்யவேணும் அது ஒரு நல்ல விடயமாக இருக்கவேணும் என்று வேண்டிக்கொண்டார்.
தேத்தாத்தீவில் வசித்து வரும் இளந்திரயன் துடிப்புமிக்க ஒருவன்,;. 14 வருடங்களாக சிறுவயதுதொட்டு நடக்கமுடியாமல் இருந்தும், தனது தாயின் விடாமுயற்ச்சியால் இன்று கதிர்காமத்துக்கு நடந்து செல்லும் அளவுக்கு அவன் நடை பழகிவிட்டான், இருப்பினும் அவனுக்கு என பெரிய தொழில் செய்யும் அளவுக்கு முடியாத நிலை, இதைப்பார்த்த நண்பர் ஏதாவது உதவவேணும் என்று கேட்டுக்கொண்டார், இதற்க்கு முதலே இன்னொரு நபர் தனது சகோதரனின் நினைவாக இந்த பசுக்களைக் காப்பாற்றி மற்றவர்களுக்கு கொடுத்து உதவி முன்னோடியாக இருந்தார். இதே உதவியை அவரும் செய்ய விரும்பியதுக்கு அமைவாக, அவர் வெட்டுவதற்க்காக மடுவத்துக்கு கொண்டுசெல்லும் பசுவை வேண்டி இவருக்கு கொடுத்துதவி பசுவும் உயிர் பிளைக்க வைத்து அந்த பிள்ளைக்கும் தொழில் கிடைக்கும் வகைசெய்துள்ளார்.
கொலைப் பயத்தில் மிரண்டுபோய் இருந்த அந்த அழகான பசுவும் கண்டையும் மிகச்சிரமத்தின் மத்தியில் கொண்டு அவனிடம் ஒப்படைத்து ஒரு நல்லகாரியத்தினை செய்துள்ளார், ஒரு பசுவின் உயிரைக்காப்பது மகா மகா புண்ணியம் இதனை செய்த எமது குழுமத்தில் இருக்கும் இந்த அன்பருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். பசுவைப்பற்றி ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது,
வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்..
நீங்களும் இப்படியான நல்ல சிந்தனைகளை, செயற்ப்பாடுகளை செய்யத்தொடங்கினால் தீய சிந்தனைக்கு இடமிருக்காது அத்துடன் எமது மக்களின் மேம்பாட்டுக்கு உதவிய பெருமைக்குரியவர்களாக இருப்பீர்கள், அதனால் நல்ல இதயங்களினதும் கடவுளினதும் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.
0 comments:
Post a Comment