ஆசை இன்று மனிதனை ஆட்டுது
ஆளம் அறிந்தா காலை நீ விட்டது
காசை உயிரை பணயமாய் இட்டது
காரியம் ஒன்றுமே இல்லாது வாட்டுது
பேரலை மீதொரு படகினை ஓட்டி
பேரெடுப்பேன் என்று ஊருக்கு காட்டி
பேதைபோல் பாதையில் இடையினில் மாட்டி
பட்டதெல்லாம் துன்பம் மொத்தமாய் கூட்டி.
என்னதான் வளம் இங்கு இல்லை
ஏன்தான் படுகிறாய் அயல்நாட்டில் தொல்லை
கத்துக்குட்டி மாலுமிக்கு தெரிவதில்லை எல்லை
கடல்நடுவில் நடக்காது காட்டுவதால் பல்லை
விட்டு வா நினைப்பெல்லாம் தம்பி
தொழில் எல்லாம் கிடக்குது தேம்பி
ஏன்தான் அலைகிறாய் எவன்பின்னோ ஊம்பி
போனால் வருமா உன்உயிர் திரும்பி..
2 comments:
அருமையான வரிகள்! என் தோழி ஷ்ய்லினி அவர்கள் அறிமுகம் செய்தார்கள்.. உங்களை என் வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன், "விடை தேடும் காதல்" என் காதல் கவிதையை படித்து உங்களின் கருத்தை பதியவும். அன்புடன் ஆயிஷாபாரூக்..
நன்றி ஆயிஷாபாரூக் நான் சென்று பார்த்தேன் மிச்சம் அருமையான வரிகள்
Post a Comment