நாகரிகங்கள் மக்களது வாழ்விடங்கள் சார்ந்து அந்த அந்த இடத்துக்கு ஏற்ப்ப தோற்றம் பெற்ற ஒரு விடயமாகும். மக்களது சமுக வளர்ச்சி அந்த நாகரிக பரிநாமத்தில் பூத்துக் குலுங்கும் ஒன்றாகும். உலகில் தலை சிறந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நாகரிகங்களுள் சிந்து நாகரிகம் போற்றுதற்க்கு உரியதாகும். இவர்கள் இயற்க்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர், இயற்க்கையை நேசித்தனர், இயற்க்கைக்கு பயந்து இயற்கையை வணங்கினர். சிந்து நதி வறட்சி நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரு காட்டாறு. வெள்ளம் பெருகி வரும் போது படுகைளில் வண்டல் படியும். செடி, கொடி, புதர்களை வெட்டிப் போட்டுத் தீ மூட்டுவார்கள். பின்பு ஆடு மாடு, ஒட்டகங்களை படுக்கப் போடுவார்கள். அவை படுத்து எமுந்த பகுதிகளில் விதைகளைத் தூவி விளைந்த வற்றைச் சேமித்துக் கொள்வார்கள். உலகில் சிந்து நதி தீரத்தில் மட்டுமல்ல பாரசீகப் பகுதிகளில், இன்றய ஈரான், ஈராக் நீல நதிக்கரை(எகிப்து) இல் கூட இப்படித்தான் நாகரிகம் வளர்ச்சி கண்டது.
நாகரிகம் வளர்ச்சி கண்ட போது வாணிபம் பிறந்தது. வாணிபம் வளர்ச்சி கண்ட போது ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப பயிர் செய்ய வேண்டி வந்தது. இதனால் வண்டல் மண்ணை இழந்த நிலம் பாலையானது. ஆக மொத்தம் இந்த நாகரிகங்கள் எல்லாம் 'சோலையாக இருந்த இடங்களை பாலையாக மாற்றியது' தான் மிச்சம். ஆனால் எமது கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பயங்கர யுத்தம், இயற்க்கை அனர்த்தங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்சியின் உச்சக்கட்டத்திலும் மதி நுட்பமான அறிவாற்றலையும், மனம் நிறைந்த விருந்தோம்பலையும் கொண்டு பாலைகளை சோலையாக்கும் நாகரிகத்தினை கொண்டு விளங்கும் அதி சிறந்த மக்கள் குலாம் என்பது நாம் எல்லாம் மார் தட்டும் ஒன்றுதான்.
கடந்த 500 ஆண்டுகளாக வாணிபம் வளர்ச்சி அடைந்த போது இயற்க்கையை அழிப்பதே மனிதரின் முக்கிய வேலையாக அமைந்து விட்டது. ஆனால் கிழக்கு மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் பண்புடைய பெருமக்கள். அதனால் அவர்கள் இயற்க்கையைப் போலவே மற்ற மக்களையும் நேசிக்கும் பண்புடைய நாகரிகத்தை தனதாக்கிக் கொண்டனர். கிழக்கு மண் முல்லை(காடு), குறிஞ்சி(மலை), நெய்தல்(கடல்), மருதம்(வயல்) போன்றவற்றை வளமாகக் கொண்டு அவற்றை முறையாகப் பயனடபடுத்தும் ஒரு சமுகமாக இருப்பதனால்தான் இன்னும் பசுமை பூக்கும் நீர் வளமும் நில வளமும் நிறைந்த நாடாக இருக்கிறது. ஆனால் சிந்து வெளி நாகரிகம் வளர்ந்த இந்திய மற்றும் பாரசீக நாகரிகம் வளர்ந்த நாடுகள் எல்லாம் 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரியின் பாலை என்னும் படிமம் கொள்ளும்' என்பதற்க்கு இணங்க அவை பாலை வனமாகி விட்டது.
ஆனால் எம் தமிழ் மக்கள் நாகரிகத்தினை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு எடுத்துக் காட்டானவர்ள். குறிப்பாக மாரி காலம் வந்து விட்டால் கட்டாந்தரையாகக் கிடக்கும் நிலங்கலெல்லாவற்றயும் மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயற்க்காட்டை உழுது தானியங்களைக் விதைத்து அல்லும் பகலும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி அறுவடை செய்து சந்தோசப்படுவர். இயற்க்கைகளான மரம் (வேம்பு, வில்வம்), விலங்குகள் (பாம்பு, யானை, காகம்) நிலம், மலை, காற்று, மழை, மின்னல் போன்றவற்றை இறைவனாகக் காணுகின்றனர். அதனால் இயற்கைக்கு நோகமல் நடந்து கொள்ளுகின்றனர். இயற்க்கை உணவுகளான காய், பழ வகைகள், பூக்கள், பால் என்பனவற்றை சுத்தமாக உண்ணுகின்றனர். இப்போதும் படுவான் கரையின் பல பாகங்களிலும் நாட்டு வைத்தியம் மூலிகைகளைக் கொண்டு செய்து பலன் கண்டு வருகின்றனர். இயற்க்கையாகக் கிடைக்கும் தோல் மரம், கயிறு என்பனவற்றை வைத்து வாத்தியங்களை இசைத்து, ஒழுக்கம் மிக்க புராண இதிகாசக் கதைகளை கூத்தாக, கும்மியாக பாடி ஆடி தூய்மையான நாட்டுப் புறக் கலையில் பொழுதுகளைக் களித்து வந்துள்ளனர். அதுபோலவே சோதிடக்கலை தற்க்காப்புக் கலை போன்றவற்றையும் பயின்று வந்துள்ளனர். ஆகவே இவர்கள் சிறந்த நாகரிகத்தினை பேணி வந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. இருந்தும் தேன் கூடுபோல் இருந்த இவையனைத்தையும் பயங்கர யுத்தம், உலகமயமாதல் கொள்கை, சினிமாவின் தாக்கம் என்பன ஒன்றாகச் சேந்து அடியோடு அழித்து விட்டதுதான் மிச்சம்.
நிலமை இவ்வாறு இருந்தும், இன்றும் இம்மக்கள் சுத்தமாக இரசாயனப் பயன்பாடு இல்லாமல் கஸ்ட்டப்பட்டு உற்ப்பத்தி செய்யப்படும் எத்தனையோ உணவு உற்ப்பத்திகள், மிக மிகக் குறைந்த விலையில் இம்மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் இடைத்தரகர்கள் அம்மக்களின் நாகரிகத்துக்கும் உழைப்புக்கும் சுத்தமான உற்ப்பத்திகளுக்கும் மரியாதை கொடுக்காத அநாகரிகப் போக்கு கவலைக்குரியதே. ஏன்னைப் பொறுத்த மட்டில் அரக்கத்தனமான யுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட்ட மக்கள் இன்னும் ஏமாற்றுகின்ற பேர்வளிகளின் யுத்தத்தில் இருந்து விடுபடாத நிலையே காணப்படுகிறது. அவர்களுக்கு கல்வி;, சுகாதாரம் வீடு போன்று அவர்களது பாரம்பரியம், கலாசாரம் என்பனவற்றை காப்பாற்ற அரசியல் பிரதி நிதிகள் முன்வர வேண்டும் இல்லாவிடின் எமக்கென்று சொல்லிக் கொள்ள நாகரிகம் இல்லாது சிந்து வெளி நாகரிகம் சிதைவடைந்த பாலையானது போல் எமக்கும் நேர்ந்து விடலாம்.
முற்றொரு விடயம், பசுக்களையும் தழிழர்களையும் பிரிக்க முடியாத அளவுக்கு அவர்களது நாகரிகம், வாணிபம் எல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கின்றது. அந்த பசுக்களை எருக்கட்டி அந்த இடங்களில் மழையை நம்மி விதைத்து அவற்றை அறுவடை செய்து. மற்றவர்க்கு எல்லாம் உணவளிக்கும் நற்பண்புடைய நாகரிகம் சிந்து நாகரிகத்தினை விஞ்சியது தானே. இதனால் தான் 'வந்தோர் எல்லாம் வாழ வைக்கும் செந்தேன் சிந்தும் சொர்க்கா புரி' என்று விழிக்கப்படுகின்றது.
குறிப்பாக வளர்ந்து வரும் உலகில் 700 பில்லியனைத் தொட்டு விட்ட சனத்தொகை வளர்ச்சி இம் மக்களது நாகரிகத்தினையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. மக்களது நிலங்கள் ஒடுங்கத் தொடங்கியுள்ளது. பசுக்களுக்கான மேச்சல் தரைகள் குறுகி விட்டன அதிகரித்த மக்களின் புதிய கண்டுபிடிப்புகள், அவற்றின் முறையற்ற பயன்பாடுகள் இவற்றால் உலகில் ஏற்பட்டிருக்கும் கால நிலை மாற்றம் பாரிய அனர்த்தங்களை முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவற்றால் பசுக்களை வளர்த்து அதனால் நிறையுணவான பால் உற்பத்தியை நுகர்ந்து வாழ்து வந்த மக்கள் அவற்றை அனர்த்தங்களினாலும், மேச்சல் தரைகளில் பயிச் செய்கை அத்து மீறிய குடியேற்றங்கள், நில அபகிப்பு என்பனபோன்ற இன்னோரன்ன காரணங்களினால் பசுக்களை வளர்க்க முடியாமல் இங்குள்ள விவசாயிகள் சிரமங்களையும் அவற்றை பராமரிப்பதனில் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பசுக்களை இறைச்சிக்காகவோ அல்லது வேறு வகையிலோ விற்று வருகின்றனர். எதிர்காலத்தில் இந்த பசுக்களோடு வாழ்ந்து சீவிச்சிவந்த மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக வளைந்து போயுள்ளது.
எமது தமிழர்களின் இந்த வழிவழி வந்த நாகரிகம் அழிய யார் பொறுப்பு?? எம்மை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் பற்றற்ற அரசியல்வாதிகளும், எம்மினத்தை திட்டம் போட்டு விற்கும் குள்ள நரிக் கூட்டங்களும் தான். இதனைத் தடுப்பதற்கு மேச்சல் நிலங்களை வரையறுத்து அவற்றை பராமரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அவற்றை நன்கு கவனிக்கும் வைத்திய நடைமுறைகளையும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க அவற்றை காப்புறுதி பண்ணும் நடைமுறைப் படுத்த வேண்டும். இன்னும் அம்மக்களிடையே எமது நாகரிகத்தின் அடையாளங்களை அழிய விடாது பாதுகாக்கும் விழிப்பினை தூண்ட வேண்டும்.
எனவே எம்மக்களை கொடுத்துண்ண பழக்கியது அவர்களுக்கு கிடைத்த இயற்க்கை வளமும் நல்ல மனமும் தான் அவைதான் இன்றும் பொன் எழுத்துக்காள் பொறிக்கப்பட்டிருக்கும் அவர்களில் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு. அவை சிந்து வெளி நாகரிகத்தினை விஞ்சி மாற்று இனத்தவரையும் கவர்ந்து அவர்கள் திருமணம் முடித்து வாழவும் குடி கொள்ளவும் விரும்பும் நாகரிக வேலியை இன்னும் இன்னும் உணர்ந்து சிதைவடையாமல் வலுப் பெறச் செய்வது நம் எல்லோரதும் கடமை அல்லவா?
0 comments:
Post a Comment