மட்டக்களப்பில் முன்னிலை வகிக்கும் அடையாளங் காணப்பட்ட பாரிய இடர்களில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்கள் ஒரு அச்சத்துக்குரிய சவாலாகும். ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புற்றுநோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாம் காணப்பட்டுள்ளனர், அதில் அவர்களின் புற்று நோயை அடையாளங் காண்பதற்கு முடியாமல் வருடாவருடம் அதிகளவான நோயாளர்கள் கல்முனைக்குடி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையம், கண்டி போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் காலி போதனா வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு அவர்கள் புற்றுநோயினை கண்டறிவதற்க்காகவும், மேலதிக சிகிச்சைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர்.
இதன் மூலம் மொழி, போக்குவலரத்து, பொருளாதார வசதியீனம் போன்ற இன்னோரன்ன காரணங்களால் அவர்கள் அந்த சிகிச்சையை எடுப்பதனைக்கூட புறக்கணித்து வந்தனர். இதனால் தீர்க்க முடியாத புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இவற்றை நன்கறிந்த எமது நாட்டிலும் மக்களிலும் அக்கறை கொண்ட கனடா வாழ் கிழக்கிலங்கை மக்கள் ஒன்றியத்தின் தொண்டுள்ளங்களின் அயராத உழைப்பில் கிடைத்த நிதியுதவியில், மட்டக்களப்பில் காணப்படும் பாரிய இடைவெளிகளை நிரப்பி அதன் மூலம் நல்ல சுகாதார சேவையினை வழங்குவதற்க்காக புற்றுநோயினைக் கண்டறியும் ஒரு பெறுமதி மதிக்கத்தக்க என்டஸ்கொபி கருவியொன்று எமது குழுமத்தின் ஒருங்கிணைப்பில் 21.06.2013 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவிற்கு அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment