ADS 468x60

18 April 2016

இன்னும் எழுச்சியடைவேன்!


என் எழுத்து
சில சமயம் விழும்
பல சமயம் எழும் - அது
ஒரு கிழக்குச் சூரியன்!
நான் கீதை சொல்லும் கண்ணன் இல்லை- தழிழ்
போதை உண்ணும் மன்னன்!
நான்
நரசிம்மன் கிழித்த இரணியனல்ல!
அந்தியில் பட்டுப் போக,
நரம்பையும் மீட்டும் இராவணன்!
நான்
மாடுகள் மேய்க்கும் மாதவனல்ல- உங்கள்
வீடுகளில் உதிக்கும் ஆதவன்!
காடுகளும் மலைகளும்
களனிகளும் குளனிகளும்
வீடுகளும் விருந்தோம்பலும்
பாடு படும் மக்களும்
என் பாட்டின் பொருள்- அவை
எனது ஏட்டின் அருள்!
இனியும் எழுச்சியடைவேன்
சென்மதி நிலுவையில்
சேரிப்புற மக்களின்
உழைப்பைச் சேர்க்க,
எழுத்தறிந்தோர்
எட்டுத்திசையும் முளைக்க,
சுரண்டலைக் காட்டிக்கொடுக்க,
சுதந்தரத்தை கூட்டிக்கொடுக்க,
செந்தமிழ் வழக்கிலிருக்க
செங்கோல் கிழக்கிலிருக்க
இன்னும் எழுச்சியடைவேன்!

0 comments:

Post a Comment