ADS 468x60

01 July 2016

இளைஞர்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

நம்ம நாட்டில வருடா வருடம் உ/த படிக்கிறவங்களில் பல்கலைக்கழகத்துக்கு தகுதியானவர்கள் என சுமார் 1,50,000 தெரிவாகுவர். பின் கிட்டத்தட்ட 25,000 பேர் அதில் தெரிவாகி அரச ப.க.கழகங்களில் கல்வியினை தொடா்வாா்கள். மிகுதியானவர்களில் 70,000 பேர் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் திறந்த ப.க.கழகங்கள், தனியாா் ப.க.கழகங்கள் போன்றவற்றில் வெளிவாரி பட்டம் என சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட ஒரு 5,000 பேர் வெளிநாடுகளில் திறனற்ற தொழிலாளிகளாக இணைந்து கொள்ளுவர். ,இப்படியாகபோக மிகுதி 50,000 போ் (43%) வருடாவரும் வருகின்ற படித்த இளம் இரத்தம் கொண்ட, கல்வியினை தொடர முடியாத, கிராமப்புற இளையோரின் நிலையை யோசித்து பார்த்தால் கிா்என தலை சுற்றுகிறது.
கிட்டத்தட்ட இவா்களுடன் சோ்த்து ஏனைய படித்த வேலையில்லாதவா்களையும் சோ்த்து 4.3 மில்லியன் இளைஞா்கள் யுவதிகள் இலங்கையில் இருக்கின்றனர் என தகவல் சொல்லுது, அதே நேரம் கட்டிட நிர்மானத்துறை, சுற்றுலாத்துறை, ஆடைத் தொழில் துறை போன்ற துறைகளில் உள்நாட்டில் ஊழியர்களுக்கான கேள்வி அதிகரித்த வண்ணம் இருக்க, இவற்றை நிரப்ப வெளிநாடுகளில் இருந்தா தொழிலாளிகளை இறக்குவது எனவும் கேட்கின்றனா்!!
சற்று சிந்திப்போம் எமது பல்கலைக்கழகங்களில் தொழிலை கல்வியாக வழங்க முடியாத பீடங்களால் குறிப்பாக கலைப்பீடங்களால் என்ன பயன் என அனைவரும் வினவுகின்றனர்? ஆட்ஸ் பிரச்சினை இல்லை அதற்குள் இருக்கும் பாடவிதானங்கள் தொழில் கல்வியை புகட்டும் வண்ணம் செலபஸ் தயாரிக்கப்படனும். அப்போதுதான் வெளியேறும் மாணவர்கள் பெறுமதி சேர்க்கப்பட்ட வளங்களாக இருப்பார்கள் என வாதிடுகின்றனர். உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் இத்துறையிலே 60 விகிதத்துக்கு மேல் கற்று அரச தொழிலை அன்றி வேறு எங்கும் செல்ல முடியாத, கேள்வியற்ற "ஏட்டுச் சுரக்காய்களாய்" இருப்பதனால் எமது பொருளாதாரத்துக்கு என்ன பயன்? என கேட்கின்றனா்.
இது மாணவர்களின் பிழையில்லை கொள்கை வகுப்பாளர்களின், அரசியல்வாதிகளின் பிழை என எடுத்துக்கொள்ளலாமா? புரியவில்லை. பிலிப்பைன்ஸ், இந்தியா, சைனா போன்ற நாடுகள் ஐரோப்பிய, அவுஸ்த்திரேலிய போன்ற செல்வந்த நாடுகளின் தேவையை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் கொள்கை வகுத்து திட்டமிட்டு தொழிலாளா்களை உருவாக்குகின்றது, அதனால் கைநிறய அன்நிய செலாவணியை உழைக்க, நாம் எந்தவித திறனும் அற்ற பெண் தொழிலாளா்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வெறும் தினார்களுக்கு பல கஸ்ட்டத்தின் மத்தியில் குறைந்த அளவினையே உழைக்கிறோம். மேற்க்கத்தைய நாட்டில் ஒரு தாதிய உத்தியோகத்தர் உழைக்கும் பணத்தினை எமது 40 பெண் திறனற்ற பெண் பணியாளார்கள் உழைக்கும் அவலம். இது பல்கலைக்கழகங்கள் இருந்து பணியாளர்கள் வரை சிந்திக்க வேண்டிய விடயம்.
IT படிப்பவர்களுக்கு 97% விகிதமும், Medicine முடித்தவர்களுக்கு 93% விகிதமும் மற்றும் Engineering முடித்தவர்களுக்கு 95% விகிதமும் தொழில்வாய்ப்புகள் காத்திருக்க கலைப்பிரிவில் உள்ளவர்களுக்கு வெறும் 30%-35% விகிதமே அவர்களுக்கான வாய்பு இருக்கிறது.
இங்கு உற்பத்தி செய்கின்ற மேலுள்ள துறைசார் ஊழியத்தினை கட்டுப்படுத்துவதனால் எமது மாணவர்கள் அயல்நாடு சென்று கற்று எமது பணத்தையெல்லாம் அங்கு செலவிடுகின்றனர், பதிலாக நல்ல தனியார் பல்கலைக்கழகங்களை ஏன் இங்கு அனுமதித்து அங்கு செல்லும் மாணவர்களை இங்கு உற்பத்தி செய்யக்கூடாது என்பதும் வாதமாக இருக்கிறது.
வேலையின்மை அதிகரிக் அதிகரிக்க போதைவஸ்த்து, வெட்டுக்குத்து, கற்பழிப்பு, கடத்தல் என தீய சக்திகளின் ஆதிக்கம் நிறைந்த ஒரு பயங்கரத் தோற்றத்தினை எம்மக்களிடையே ஏற்படுத்தி இருப்பது எதிா்காலத்தினை கேள்வியாக வளைத்துள்ளது. முதலில் நல்ல திறன் அறிவு கொண்ட ஆசிரியர்களை உருவாக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் திறணை வளர்கும் கல்வியினை ஏற்ப்படுத்த வேண்டும், இதற்கு பெற்றோர், சமுக ஆர்வலர்கள் அத்துடன் கற்றுத் தேர்ந்த அரசியல் வாதிகள் மக்களிடையே விழிப்பினை ஏற்ப்படுத்தி ஒரு பயனுள்ள சமுகத்தினை உருவாக்க சங்கற்ப்பம் பூணுவோம்.

0 comments:

Post a Comment