ADS 468x60

16 November 2016

கொம்புச்சந்தியானின் இசைக்கப்படாத எழுத்துகள்!!

கொம்புச்சந்தி அப்பன் மீது பாடிய எனது இசைக்கப்படாத எழுத்துகள்!!

இலங்காபரி உயர்ந்த இறைவா

காவல் நீயே கலியுக வரதா
காலடி நிதம் வந்து தொழுதேன்- உன்
காலடி நிதம் வந்து தொழுதேன் -நின்
அருள் மழையில் தினம் நனைவேன்

நித்தமுன் தரிசனம் நீங்காத பாக்கியம்
நான் என்றும் பாடனும் நாம சங்கீர்த்தனம்
நாயகனே நானுன் பாதம் அர்ப்பணம்
இலங்காபரி உயர்ந்த இறைவா  நின் சந்நிதானம்
(கவல் நீயே கலியுக வரதா)

11 November 2016

இன்னும் எத்தனை நாள்

இன்னும் எத்தனை நாள் இப்படியே வெறுமனே வரிசெலுத்தும் பரம்பரையாய் மட்டும் வாழ்ந்து போவது, மூலப்பொருட்களை மட்டும் விளைவித்து அறாவிலைக்கு தொலைக்கும் ஆதரவற்ற, கொடுப்பனவில்லாத சனங்களாய் மற்றவருக்காய் மாடாய் உழைத்த இந்த சமுகம் எப்போதுதான் அரசியல் விமோசனம் பெறப்போகின்றனவோ! தெரியவில்லை. சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிப்பறிக்கும் இவர்கள் அரசியல் சாணக்கியர்களாம், அது அரசியல் சாணக்கியமல்ல அடக்கி ஒடுக்கும் சாணக்கியம் என்பதை புரியாதவர்கள் விரைவில் புரிவார்கள். இந்த சந்தர்ப்பம் இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் என்று ஒருவர் சொன்னதாக கொட்டை எழத்தில் பொறித்து கோசம் இட்டனர் அது இப்போது சரியாக மாறிவந்து நிற்க்கிறது, ஏனெனில் இப்போது மக்கள் அதனை உணரும் ஒரு சந்தர்ப்பத்தினை மக்களுக்கு காட்டிக்கொடுத்துள்ளார்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை, இல்லாமல் மாறும் பொருள் தேடி, அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ, இந்நாட்டில் மலரும் சமநீதி. நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம், இருந்திடும் என்னும் கதை மாறும். இந்தக் கனவோடு மட்டும் வாழாமல் சமநீதி பெற்று மற்றவரையும் சமநீதியுடன் வாழவைக்க எண்ண வேண்டும். போடுங்க போடுங்க பார்க்கலாம் என்று சொல்ல இது என்ன கிடுகு மட்டை வியாபாரமா? பட்டினிச் சாவை தொலைக்க மானத்தையும் மாற்றானிடம் அடகு வைக்கும் பரம்பரையாய் மாற்றாமல் விட மாட்டோம் என்பது போல் அல்லவா நம்ம அரசியல் ஆசான்கள் இருக்கிறார்கள். பள்ளிப்படிப்பைத் தொலைத்து கொள்ளி விற்க்கப் போகும் சிறுவர்கள்இ வயலையும் வளவையும் அயலவர்க்கு விற்க்கும் எம்மவர்இ ஆசுபத்திரி கூலிவேலைக்கும் தேடிவைத்த சொத்தையெல்லாம் அடுத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் அனாதைகளாக இந்த வந்தோரை வாழவைத்த மக்களை மாற்றிவிட்டீர்களே!. யாரிடம்போய்ச் சொல்லட்டும். ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க, இயற்கை தந்த பரிசாகும், இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க, நினைத்தால் எவர்க்கும் அழிவாகும். நல்லதை வளர்ப்பது அறிவாற்றல், அல்லதை நினைப்பது அழிவாற்றல்... நல்லதை நினைக்க எல்லோரும் தலைப்படுங்கள்

கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும்இ நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம்.

எமது மகளிர் தின கௌரவிப்பில்

எமது குழுமத்தினர் 10.03.2013 அன்று திருப்பழுகாமம் கிராமத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தினை கொண்டாடினர். பழுகாமம் கிராமத்தின் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களது கணவன்மாரை இழந்தஇ வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரவளைத்து அவர்களுக்கு ளால் திருவாளர் சிவர் அண்ணா அவர்ககனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சேலைகள் வழங்கி வைக்கப்பட்டது. 

விறகு ராட்டி அடுப்புகள் 50 குடியிருப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

கல்வியில் வறுமை மட்டக்களப்புக்கு சொந்தமானதா?

வறுமை என்பத,, உணவு, உடை, உறைவிடம் பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். 

எமது மாவட்டத்துக்குள்ளும் இந்த வறுமை காரணமாக பல ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதில் குறிப்பாக கல்வி பெறும் வாய்ப்பு பல குடும்பத்தில் மிக கஸ்ட்டமானதொன்றாகவே காணப்படுகிறது. இதனால்தான் எம் குழுமத்தினர் அந்தக் கல்வியில் அதிக அக்கறை கொள்ளுகின்றமை தெரிந்த விடயம்.

என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!


மீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறேன். நாங்கள் பல காரணங்களால்; கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம். 

தொழில் வாய்ப்பற்ற குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம்

தொழில் வாய்ப்பற்ற, தொழில் பாதுகாப்பற்ற ஒரு குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம். அறிவாளிகளாக உருவாக்கப்படுபவர்களும் இம்மக்களுக்கு பிரயோசனமற்றவர்களாக வெளியேறிச் சென்றுவிட்டனர்...கொச்சிக்காய் இருந்து கொள்ளிக் கட்டுவரைக்கும் இன்னொருவனிடம் கொடுக்கும் தரகு வர்த்தகத்துக்கு அப்பால் வியாபார தந்துரோபாயம் அற்று பெறுமதியான வளங்களை பெறுமதியற்று கொடுக்கும் எமது கூட்டத்தை நாங்கள்தான் வழிப்படுத்தனும். இன்றைக்கு இறைத்ததுபோதும் என நாம் ஓய்ந்துவிடலாகாது என்றைக்கும் இறைக்கவேண்டும் அப்போதுதான் எம் இனம் பசுமைபெறும்.

05 November 2016

காதல் வயப்பட்டதும் வயப்படுத்தியதும்

தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
கண்ணில் கதையில்
பேச்சில் பெயரில்
சிரிப்பில்  செல்லத்தில்
கோபத்தில் பாவத்தில்
கவனிப்பில் கையணைப்பில்
செயலில்  சேவையில்
வயப்பட்டதும்.......

எழுத்தால் இதயத்தால்
சிரிப்பால் சினேகிதத்தால்
குரலால் கொள்கையால்
பாடால் பரிந்துரையால்
கொஞ்சலால் கெஞ்சலால்
கொடுமையால் கடுமையால்
கண்களால் கவிதையால்
வயப்படுத்தியதுமுண்டு.............