ADS 468x60

11 November 2016

கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும்இ நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம்.
கடவுளை தேடி ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை நீ, ஏழைகளுக்கு உதவும் போது அவர்களது முகத்தில் கடவுளைக் காண்பாய்' என விவேகாநந்தர் கூறியதற்க்கிணங்க நான் கடவுளை இவர்களது முகத்தில் கண்டேன்.

மூன்று சக்கர உந்துருளி ஒன்றை அம்பிலாந்துறையில் இருந்து வருகை தந்திருந்த திரு தம்பிராசா மனோகரன் அவர்களுக்கு எங்கள் குழுமத்தின் சார்பில் வழங்கி வைத்தேன். இன்றய உதவி உன்மையில் காலத்தின் தேவை அறிந்த பொருத்தமான உதவி.

இதற்கு நிதியுதவி அளித்த திரு அன்ரன் ஜெசன்வி அவர்களுக்கு எங்கள் குழுசார்பில் மனமார்ந்த நன்றிகளை நவில்கின்றோம்.மட்டக்களப்பில் மனிதர்களைப் போலவே இந்த மண்ணும் கொடிய யுத்தத்தினால் ஊனமுற்றுக் கிடக்கிறது. இருந்தும் அவற்றை முண்டுகொடுத்து உதவ வரும் அன்பு உள்ளங்கள் இன்னும் எம்மத்தியில் இருப்பதனை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

0 comments:

Post a Comment