பச்சை பச்சையாய் வயல், பால் சொரியும் பசுக்கூட்டம், கொச்சை கொச்சையாய் கனிகள் கொஞ்சி விளையாடும் மயில்கள், அச்சம் இல்லாத மக்கள் அண்ணாந்து நிற்கும் மலைகள், இவைகளை கண்டு இரசித்து கடந்து போய்க்கொண்டிருந்தோம் பல மயில்களைக் கடந்து. எமது எல்லை தெய்வங்கள் அங்குதான் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடாமல் இம்முறையும் அவர்களை பலப்படுத்தும், ஊக்கப்படுத்தும் தொடர்புபடுத்தும் ஒரு பயணமாக அமைத்துக்கொண்டேன்.இந்தக் கிராமத்தினைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தினை முன்னிறுத்தி இங்கு இருந்த மக்களுடன் இன்னும் சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தனா். அதனால் தற்போது இக்தகிராமம் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமாக இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் பலர் விவசாயத்தினை மேற்கொண்டு வருவதுடன், யுத்தகாலத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 550 குடும்பங்கள் இங்கு குடியிருந்ததாகவும் அவர்களில் வெறும் 150 குடும்பங்கள்தான் இந்த இடத்தில் தற்போது இருப்பதாகவும், அதிலும் யானைகளின் அட்காசம் காரணமாக இன்னும் பலா் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்த ஊர் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.







பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.
