
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள நோயாளர்களின் தொகையானது கடந்த வருடம் முழுவதிலும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் தொகையை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 2,809 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 22,186 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 17,228 பேரும், களுத்துறையில் 5616 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருகோணமலையில் 4415 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4135 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3255 பேரும், குருணாகலில் 5943 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6081 பேரும் மாவட்டளவில் பதிவாகியுள்ளனர்.
தற்பொழுது இருந்துவரும் டெங்கு அபாயத்தினை எதிர்காலத்தில் வருமுன் தடுக்கும் வலிமையான பரிந்துரைகளை கண்டறிவதற்கான மேற்படி ஆய்வானது ஜோஜியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த வண்ணம் அங்கு இருந்து வருகைதந்த பேராசிரியர் விக்ரம அவர்களின் பரிந்துரையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்தப் பிரதேசத்தில் எடுத்துச் செல்வதற்கான பூர்வாங்க கலந்துரையாடலும் அதற்கான பயிற்சியும் வழங்கும் நிகழ்வு 22.07.2017 அன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகர் சுகுணன் அவர்களின் உதவியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பேராசிரியர் விக்ரம, பேராசிரியர் துளித்த, விரிவுரையாளர், தாதியர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏதிர்காலத்தில் இந்த அனர்த்தம் இல்லாமல் செய்யும் காரணிகளை அடையாளம் காண்பதற்காக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தினை அண்டியுள்ள கிராமங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment