
இந்தக் கிராமத்தினைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தினை முன்னிறுத்தி இங்கு இருந்த மக்களுடன் இன்னும் சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தனா். அதனால் தற்போது இக்தகிராமம் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமாக இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் பலர் விவசாயத்தினை மேற்கொண்டு வருவதுடன், யுத்தகாலத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 550 குடும்பங்கள் இங்கு குடியிருந்ததாகவும் அவர்களில் வெறும் 150 குடும்பங்கள்தான் இந்த இடத்தில் தற்போது இருப்பதாகவும், அதிலும் யானைகளின் அட்காசம் காரணமாக இன்னும் பலா் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்த ஊர் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

சிலவேளைகளில் கஸ்ட்டப்பட்டு குடியேற்றிய இந்த மக்களை நிலையாக வைக்க முடியாத முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளினால் அருமையான இந்த தமிழ்க்கிராமம் விரைவில் அத்திப்பட்டியாகப்போனாலும் ஆச்சரியமில்லை. அது எவ்வாறு போனாலும் இவர்களுக்கு ஒன்றுமில்லை. இந்த எல்லைக்கிராமத்து மக்கள்தான் எமது வேர்கள், எல்லைத்தெய்வங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் இல்லையென்றால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானதுபோல் மட்டக்களப்பு தேய்ந்து களுவாஞ்சிகுடியில்தான் வந்து நிற்கும்.
இவா்களுக்கு இருக்கின்ற பாரிய பிரச்சினை கல்வி, மற்றும் வேலையின்மை அத்துடன் யானைகளின் ஊடுருவல் குடிநீா் பிரச்சினை, போக்குவரத்து, போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளைக் குறிப்பிடலாம். 'பேராசிரியர் விக்ரம உரையாற்றும் போது சில விடயங்களைக் குறிப்பிட்டாா், தான் சாதாரண தரம் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில்கூட வழங்கப்படாத இலவசக் கல்வியை எமது நாட்டில் கற்றுக்ெகாண்டு அமெரிக்காவிலே சென்று அவர்களுக்கு கற்பிக்கும் அளவுக்கு எமது கல்வி தரம்வாய்தது என்பதை நாங்கள் புரியவேண்டும் எனவும், இவ்வாறான கல்வியை பெற்றுக்கொடுப்பதில் கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் பொறுப்பாக இருக்கவேண்டும் எனவும், இதுதான் எமது கிராமப்பகுதிகளில் இருக்கின்ற இருளை நீக்கி வெளிச்சத்தினைக் கொடுக்கும் எனவும் எடுத்துரைத்தார். அவர் ஒரு வேற்றுமொழிபேசுகின்ற, வேறுநாட்டவராக இருந்தாலும் நான் அழைத்ததின்பேரில் இந்த மக்களுக்கு பல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அன்போடு கூறினார். இந்நிகழ்வுடன் சோ்த்து சபையினால் இந்த மாணவர்களுக்கு ஒரு தொகை இசைக்கருவியும் வழங்கி வைக்கும் நிகழ்விலும் இவா்கள் கலந்து சிறப்பித்தமை வரலாற்றுப்பதிவாக இருக்கின்றது.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு வேற்று இன பேராசிரியருக்கு இந்த ஊரை அந்த மக்களைத் தெரியுமளவுக்கு நம்மிடையே படித்தவர்கள், பதவி வகிப்பவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள கல்விச் சமுகம் என அழைக்கப்படுபவர்களுக்கு தெரிந்து கொள்ளும் அக்கறை இருப்பதில்லை என்பதை புரிந்துகொண்டேன். இம்மக்கள் அருகில் சென்று அணுக முடியாத ஜெந்துக்கள் அல்ல, அவர்களை அணுகி சேவை செய்யுங்கள், ஆற்றுப்படுத்துங்கள், விழிப்படையச் செய்யுங்கள், அணிதிரட்டுங்கள் அப்போதுதான் இருப்பவர்களையாவது காப்பாற்ற முடியும். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் துளித்த அவர்கள் டெங்கு வராமல் தடுப்பதற்கான பல வழிமுறைகளையும் இங்கு கலந்து கொண்டவர்களிடையே எடுத்தியம்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடென்ன செய்தது நமக்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
0 comments:
Post a Comment