ADS 468x60

30 October 2017

கிராமப்புறங்களில் துளிர்விடும் மட்டக்களப்பு மாண்மீகம்.

தமிழும் சமயமும் இரு கண்கள் என்பதை என்பதை நாவலர் சொன்னதன் பின் நேரில் அதிகம் கண்டுகொள்ளும் பாக்கியத்தினை கடந்துவந்த தடம்பிரண்ட பாதைகளில் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் வலு இழக்கச் செய்யப்பட்டோம். இருந்தும் ஸ்த்தாபிக்கப்பட்ட பெயரளவான நிறுவனங்களின் இயங்கு நிலை 'முருங்கையில் வேதாளமாய்' பெயரளவில்; மட்டும் இருந்து துரும்புக்கும் உதவாமல் இருப்பது மட்டக்களப்பின் நிலை. இவ்வாறான பாதைகளில் இந்த தேவைகளிளை நிரப்பிக்கொண்டு தமிழ், அதன் செல்வாக்கு, எமது பாரம்பரியம், நடைமுறை, வாழ்வியல் போன்றவற்றை பறைசாற்றும் பல படிநிலைகளை வெற்றிகரமாக கிழக்கிலங்கை இந்து சமய சமுக அபிவிருத்தி சபையினர் எடுத்தேத்தி வருகின்றனர்.

22 October 2017

நீ பூத்தூவும் மேகம்!!

Image may contain: 1 person, closeup and outdoorநான் வந்து முன்னே #நின்றேன்
நீ பாா்த்து சிரித்தாய் #அன்று
ஓர் உயிர் எனக்கு #என்று
உலகத்தில் படைத்தான் #இன்று
நீ பூத்தூவும் #மேகம்
பசும் புல் பூத்த #தேகம்
உன் காதல் #வேகம்
எனைத் தூண்டும் #தாகம்
இன்று நான் வாங்கும் #மூச்சி
என்றும் நீ தானே #பேச்சி
என் சோகங்கள் #போச்சி
எனக் இன்று என்ன #ஆச்சி!!!

கூத்து .

Related imageஆட்டம் மதுவிலும் வரும் 
மகிழ்சியிலும் வரும்
இரண்டும் கூத்துத்தான்!

மகிழ்சியில் வரும் கூத்து
மருவிப்போனதும்

மதுவில் வரும் கூத்து
பெருகிப்போனது.

மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது

கிட்டத்தட்ட 58000 ஏக்கர் வயல் நிலங்களை தன்னகத்தே கொண்டு அன்னமளிக்கும் எமது தமிழ் மண்ணின் மட்டு நிலம் நெல்லை மட்டும் விளைவிக்கவில்லை கூடவே அங்கு ஈடுபடும் குழந்தைகள் இருந்து முதியோர் வரைக்கும் சந்தோசத்தினையும் விளைவித்து இருந்தது. ஆட்டம் பாட்டு, கொண்டாட்டம் எல்லாம் உழவில் ஆரைம்பித்து நெல்லை அறுவடை செய்து வீடுவரை கொண்டு சேர்க்குமட்டும் மகிழ்சியாகவே இருந்தது. அன்று மனித மயமாக்கப்பட்ட தொழில், இன்று இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவன் அனுபவித்துவந்த அகத்தூண்டும் இன்பம் அழிந்தே விட்டது.

21 October 2017

முகிலே முகிலே!

முகிலே முகிலே- மழை
மூட்டம் எங்கே
வெயிலே வெயிலே- பெரும்
வாட்டம் இங்கே
கடல் மூழ்கி நீயும்
நீரை அள்ளித் தரலாமே!
மழை கொண்டு வரலாமே!

20 October 2017

ஊழலில்லாத அரசியலா!


ஊழலில்லாத அரசியலா
உணர்வில்லாத உறவுகளா
ஆசையில்லாத தலைவர்களா
வேஷமில்லாத மேடைகளா

18 October 2017

தீபாவளியில் ஒரு பொய்யான கருத்தை நாம் வைத்திருக்கிறோம்.

இந்து மதத்தில் கூறப்படுகின்ற ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களிடையே பண்பாடுகளை நெறிப்படுத்துகின்றன. நாம் வாழ்வாங்கு வாழ்வதனை வெளிப்படுத்துவதோடு ஓர் இனத்தின், மதத்தின், சமுகத்தின் கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கு செம்மைப்படுத்தி அதன் உட்கருத்துக்களும் பாரம்பரியங்களும் வரலாறுகளும் கடத்தப்பட வேண்டிய பொறுப்பு இப்பண்டிகைகளுக்கு உண்டு.

16 October 2017

சிருஷ்டிக்கும் பெண்!

Image may contain: one or more people, people sitting, people eating and foodஅம்மா
நீ காசிகள் சேர்க்க
கருவாடுகள் விற்கும் பணம்
தேசிய வருமானத்தில்
வருகிறதா தெரியாது!
நானும் உன்ட உழைப்பில்தான்
சம்பளம் எடுக்கிறேன்!
நீ மட்டும்தான்
பெற்றதனால் மக்களையும்
விற்றதனால் மனிதர்களையும்
சிருஷ்சிக்கிறாய்...

10 October 2017

பழையன கழிதலும் புதியன புகுதலும்.


Image may contain: shoes and outdoor"பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் நியதி. இருப்பினும் பலருக்கு இதனை ஒத்துக்ெகாள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. நிகழ்காலம் தொடர்பாக கருகனை காட்டுவதிலும் பார்க்க கடந்த காலம் தொடர்பான சிந்தனைகளில் அவர்கள் நிறைந்திருப்பாா்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.

09 October 2017

பணத்தினை தகுந்த முறையில் கையாழும் திறனுள்ளவா்களா பெண்கள்!!

பெண்கள் நிதியை மாத்திரமல்ல அவா்களது மதியால் உலகத்தை ஆழுபவா்களையும் அவா்களே ஆழுகின்றனா். அவா்கள் பல விடயங்களுக்கு எமக்கு எல்லாம் எடுத்துக் காட்டாக இருக்கின்றனா். இருப்பினும், மாற்றங்கள் தினம் நடந்துகொண்டிருப்பினும், மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்ற வருத்தம் மட்டும் இன்னும் மாறவில்லை. பெரிய பதவி, சுய சம்பாத்தியம் என சமூகத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பெண்களிடமும், இந்த வார்த்தைகளை அவ்வப்போது கேட்க முடிகிறது. ‘உண்மையில், ஆண்களைவிட பெண்கள் பல விதங்களிலும் பல விஷயங்களிலும் பெஸ்ட்’ என்கிறார் வாழ்வியல் மேம்பாட்டுத் துறை நிபுணர் அசோக் தாமோதரன். 

08 October 2017

விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில்நுட்பக்   கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறிய ஒரு தொகை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழவு 09.10.2017 இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 சி.சி.ரி.வி கமறா பொருத்துதல் சம்மந்தமான தொழில்நுட்ப பாடநெறியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

07 October 2017

மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மூக்குக்கண்ணாடி ஸ்தாபனத்தினால் இலவச கண்சிகிச்சை முகாம் 07.10.2017 அன்று, மண்டூர் கோட்டமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பயனாளிகள் சிலருக்கான மூக்குக் கண்ணாடிகள் கி.இ.ச.ச.அ.சபையினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

02 October 2017

மட்டக்களப்பில் 10,000 பனை முளைகளை விதைத்தல்: கட்டம் இரண்டு.

'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டம் மூலம் பலர் விழிப்படைந்து இது போன்ற பனை மர நடுகைகளை ஏனையவா்களும் பின் தொடர முன்வரவேண்டும்  என்கின்ற நோக்கம் வெற்றியடைந்து வருவது பெருமைக்குரியது.

முதியோர்கள் எமது சொத்துக்கள் சிறுவர்கள் நாளைய வித்துக்கள்

ஒரு முழுமையான தேகாரோக்கியமான மனிதசமூகத்துக்கே வாழ்க்கை ஒரு சவாலாக இருக்கும் போது; யுத்தம், இயற்கை போன்ற இன்னோரன்ன அனர்த்தங்கள் காரணமாக விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களின் நிலையினை சற்று சிந்திக்கவேண்டும்!. எமது மாவட்டத்தின் 2015ம் ஆண்டின் ஆண்டறிக்கை படி எல்லாவகையிலும் விசேட தேவையுடையவர்களென சுமார் 6879 பேர்வரை அடையாளங்காணப்பட்டுள்ளனர். பலர் பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள், சிலர் வயோதிப நிலையை அடைந்தவர்கள். இந்த இரு வகுதியினரும் சமூகத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். இவர்களில் சிலர் வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தாங்களும் சமூகத்தில் வாழவேண்டும் என ஆசை கொண்டவர்கள்.