
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறிய ஒரு தொகை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழவு 09.10.2017 இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சி.சி.ரி.வி கமறா பொருத்துதல் சம்மந்தமான தொழில்நுட்ப பாடநெறியை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அதிதிகளாக என்னுடன் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ச.சசிதரன், கல்லூாியின் பணிப்பாளா் பிரதீஸ் ஆகியோருடன் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

“இன்று தொழில் நுட்பத்துறையில் பணிபுரிவோர் ஏனைய துறைகளான வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடைத் தொழில்சாலை மற்றும் தோட்டப்புற ஊழியர்களின் வருமானத்துக்கு சமமான தொகையினை ஒப்பீட்டளவில் சிறிய ஊழியப்படையாக இருப்பினும் அவர்களின் திறன் அபிவிருத்தி மூலம் இந்தப் பங்களிப்பினை நல்கி வருகின்றனர். இந்த வகையில் எமது மாவட்டத்தில் அவ்வாறான திறன் மிகு இளைஞர்களை உருவாக்குவதில் பெருங்பங்காற்றும் இந்த கல்லூரியின் செயற்பாடு பாராட்டத்தக்கது”
விரிவுரையாளர் ச.சசிதரன் குறிப்பிடுகையில் “மாணவர்கள் தங்களது காலத்தினை வீணடிக்காமல் இருக்கின்ற காலத்தில் ஊழியச்சந்தைக்கு தேவையான திறனை தேடி வளர்த்துக்கொள்வதன் மூலம் எதிர்கால தொழில் சவாலுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்கவேண்டும்” எனக் கூறினார்.


0 comments:
Post a Comment