ADS 468x60

10 May 2018

கிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை!

இன்று ஒரு கலந்துரையாடல், அது கிழக்கில் உள்ள தமிழ் இளம் பெடிகள் தனியார்கள் வேலை தருகின்றோம் என அழைத்தாலும் போகின்றார்கள் இல்லையாம். காரணம் தாம் வேலை செய்வதென்றால் ஒன்றில் சுயதொழில் அல்லது அரச தொழில் செய்யவேண்டும் அல்லது நமக்கென்ன வயதா அம்மா அப்பா அல்லது வீட்டில் உள்ள யாராவது உழைத்து தருகின்றனர் தானே என்ற மனோ நிலையில் வாழுகின்றனராம்.

தற்காலத்தில் வூஸ்ற் ஆகி வரும் சுற்றுலாத்துறை சார்ந்த ஸ்ரார் கொட்டல்களில் நிறைய வேலையாட்கள் தேவையாம், ஆனால் நம்ம பிள்ளைகளுக்கு அதெல்லாம் சரிவரலயாம் அதால வெளிமாவட்ட பிள்ளைகளை இறக்குமதி செய்யிறாங்களாம். பிறகு இந்த பேஸ் புக் தம்பிமாரு இதெல்லாம் பாராபட்சம், மோசடி, கொடுமை என்று பந்தி பந்தியா எழுதுவாங்க, பாத்தா அவங்களும் வேலை செய்யாதவங்களாத்தான் இருப்பாங்க!

கொள்கை வகுக்கும் இடத்தில் இருந்து எதிர்கால ஊழியர் சந்தையைக் கணித்து சொல்லுறன், 2020 இல் கிட்டத்தட்ட 4 மில்லியன் சுற்றுலாத்துறைப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது, அத்துடன் உட்கட்டுமானங்கள் பாரிய அளவில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே உடனே இத்துறையில் திறனை வளர்த்துக்கொண்டு கெதிகெதியா இணையிற சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள் அப்பன்.

280 கி.மீ புதிய எக்ஸ்பிரஸ் பாதைகள் 2020 வரைக்கும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், இந்தத்துறை சர்வதேச ரீதியில நல்ல தொடர்புகளை கட்டியெழுப்பி இருக்கிறதாம். அதால நெறய வருமானம் வளர்ச்சிய இதோட தொடர்பான பல சேவைகள் துறை எட்டிப்பிடிக்கும் எனவும் கதைச்சுக் கொள்ளுராங்க.

அதுபோக இலங்கை, கிழக்கில் இத்துறையை விருத்தி செய்யவென 1.6 மில்லியன் ரூபாய்கள் அவுஸ்த்திரேலியா அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவிகளுக்காகவும், இத்துறையில் தொழில் பயிற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், சிறு வியாபார முயற்சியாளர்களை முன்னேற்றவும் என இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாம் கேட்டுக்குங்க தம்பிமாரே!

சிலர் நினைக்கிறது விளங்குது, கொட்டேல் வேலன்னா அடுப்பங்கரையில கிடக்கிற என்னு. இல்லங்கப்பா உலகம் பல மடங்கு வளர்ந்து விட்டதுங்க. சமையல் ஒரு கலை அது ஆயிரத்தில் ஒரு அங்கம், தவிரவும், முகாமையாளர், புரண்ட் ஓபிசர், கணக்காளர், ஓடிட், எஞ்சினியர் என பல ஆயிரம் வகை வேலைகள் உண்டு. அதில் நிறய புரமோஷன் கிடைச்சிக் கிடைச்சி உயர்ந்துகொண்டு போகலாம் பாருங்க! வேலையில் சிலவற்றை கீழே இணைத்துள்ளேன்!

வந்தோரை வாழவைத்த பூமி என்று உபசரிப்பில் இயற்கையாகவே எகஸ்பேட் நாமெல்லாம். சோ சிரிக்க தெரிந்தாலே போதும் அதுதான் தாரக மந்திரம். கிட்டத்தட்ட 4 லெட்சம் ஊழியர்கள் எல்லா மட்டத்திலும் தேவைப்படுகின்றது. இந்த எதிர்கால ஊழிய நெருக்கடிய வைத்து அவுஸ்திரேலிய நிறுவகம் ஒன்று மட்டக்களப்பில் தரித்து இத்துறைசார்ந்த திறன்களை இளைஞர்களை மையமாகக் கொண்டு பயிற்சி வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது தம்பிமாரே! முந்துங்கள் சின்னவயதிலேயே வேலைக்கு சேருங்கள். நமது சமுகம் மிகப் பின்தங்கிவிட்டது தயவு செய்து ரோட்டில் அரட்டையடிப்பதையோ அல்லது ஒரு ஆட்டோ எடுத்து ஓடலாம் என்ற கனவு காண்பதையே, சவுதி கட்டாருக்கு திறனற்ற அடிமாடுகளாய் போய் அவதிப்படுவதையோ எண்ணிப்பார்க்கவும் வேண்டாம் தம்பி தங்கைகளா!

படிச்சிப்போட்டு ரோட்ல வேகுவது எவ்வளவு கஸ்ட்டமான விடயம் பாருங்க, நம்மட படிப்புக்கு என்னங்க வீடுகட்டலாமா, ரோடு போடலாமா, காரு திருத்தலாமா ஒன்னும் பண்ண முடியாது அது நம்மட மற்றும் அரசாங்கத்திட பிழைதான். வேலைக்கு ஏற்ப தொழில் கல்வி நமக்கு எப்பங்க இவங்க கற்றுத்தாராங்க! நாமதான் ஓஎல் அல்லது ஏஎல் முடிய உஷாராகனும் வேறேதாவது படிப்பம் என்றுசொல்லி.

பகிடி பகிடியா நம்மட அயல் நாட்டு மொழிகளையும் சும்மா கிடக்கிற நேரத்தில் கற்றுக்கொள்ளப் பாருங்க, ஓரிரண்டு மொழிகள் தெரிந்தால் ஓரிரண்டு லெட்சங்களைப் பிரட்டலாம். இத்துறைக்கு ஆங்கில மொழி கொஞ்சமாவது தெரிந்திருக்கனும். அது ஒண்டும் ஒண்ணாத காரியம் இல்லத்தானே தம்பிமாரே!

<உங்களுக்கு ஏதும் இவை சார்ந்த உதவி தேவையென்றால் என்னை உள்பெட்டியில் தொடர்புகொள்ளுங்கள்!

Most Common Hospitality Job Titles

Below is a list of some of the most common job titles from the hospitality industry, as well as a description of each. For more information about each job title, check out the Bureau of Labor Statistics’ Occupational Outlook Handbook.
Concierge
Casino Host
Event Planner
  • Events Manager
  • Executive Conference Manager
  • Executive Meeting Manager
  • Meeting and Convention Planner
  • Meeting Coordinator
  • Meeting Manager
  • Meeting Planner
  • Meeting Specialist
  • Special Events Manager
  • Wedding Coordinator
Executive Chef
  • Cafe Manager
  • Catering Manager
  • Chef
  • Cook
  • Dishwasher
  • Food and Beverage Manager
  • Kitchen Manager
  • Pastry Chef
  • Restaurant Manager
  • Room Service Manager
  • Sous Chef
Hotel General Manager
  • Back Office Assistant
  • Catering Sales Manager
  • Director of Hotel Sales
  • Director of Marketing and Sales
  • Group Sales Manager
  • Guest Room Sales Manager
  • Hotel Deposit Clerk
  • Hotel Manager
  • Lodging Manager
  • Marketing Coordinator
  • Public Relations Coordinator
  • Sales and Marketing Coordinator
  • Shift Leader
  • Shift Manager
  • Spa Manager
  • Wedding Sales Manager
Housekeeper
  • Director of Housekeeping
  • Director of Maintenance
  • Director of Operations
  • Executive Housekeeper
  • Gardener
  • Groundskeeper
  • Housekeeper
  • Housekeeping Aide
  • Housekeeping Supervisor
  • Lead Housekeeper
  • Maid
  • Maintenance Supervisor
  • Maintenance Worker
Porter
  • Baggage Porter
  • Bell Attendant
  • Bellhop
  • Bellman
  • Bellperson
  • Driver
  • Parking Lot Attendant
  • Valet
  • Valet Attendant
  • Valet Parker
  • Valet Parking Attendant
Waiter/Waitress
Other job titles related to the food industry and customer service include: 
  • Back Waiter
  • Banquet Server
  • Barback
  • Barista
  • Bartender
  • Busser
  • Cafe Manager
  • Catering Assistant
  • Food Runner
  • Food Server
  • Head Waiter
  • Host
  • Hostess
  • Maître d’
  • Server
  • https://www.thebalancecareers.com/hospitality-job-titles-2061496

0 comments:

Post a Comment