கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பாண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள், தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
ஆரம்பகாலத்தில் குரு மாணவ உறவு வலுப்பெற்ற ஒன்றாக இருந்தது, குருவுடன் இருக்கும்போதும் இல்லாத போதும் அவர் மாணவர்களால் தெய்வமாகவே மதிக்கப்பட்டனர். ஆனால் அந்த நிலை இன்று குறிப்பாக எமது தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் இருக்கின்றதா! மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கக்கூடிய அத்தனை ஆற்றலையும் திறனையும் அந்த குருமார்கள் கொண்டிருக்கின்றார்களா? பாடசாலைக்கல்வி செறிவு போதாதா? அதனாலா மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு போகின்றார்கள்? சட்டம் ஒழுங்குகள் பற்றி மாணவர்களின் பாடவிதானங்களில் புகட்டப்படுகின்றதா? அவை குரு மாணவர்களால் பேணப்படுகின்றதா? என்கின்ற பல கேள்விகள் இன்று எம்;மத்தியில் உலாவருகின்றது.
எல்லாவற்றுக்கும்; மேலாக தற்போது உள்ள கல்வி அதிக மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிரியர்கள் நடத்தக்கூடிய பாடங்கள் புரிகின்றதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பிள்ளைகளை பெற்றோரும் பெற்றோரை சொந்தக்காரர் மற்றும் ஊரார் ஆகியோர் குழந்தைகளின் மதிப்பெண்ணை வைத்து இடைபோடுகின்ற ஒரு மனோநிலையில் பல பிள்ளைகள் நிம்மதியற்று, மன உழசை;சலுக்குள்ளாகி பல உபாதைகளை அனுபவித்து வருவது தற்பொழுது அதிகரித்து வருகின்றது. அதனால்தான் பரீட்சை காலத்தில் அதிக பாடசாலைக் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றமை அதிகரித்து வருவது கவலைக்குரியதே!
எது எவ்வாறோ! இலங்கையில் கொடுக்கப்படும் கல்வி தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் திறனுடையோரை தருவதற்கும், இளைஞர்களை சரியாக வழிநடாத்துவதற்கும், ஒரு மாணவணை சமுதாயத்துக்கு நல்ல முறையில் பங்களிப்பு செய்யவைப்பதற்கும் உதவுகின்றதா? என்கின்ற கேள்விகள் கற்றோர் மற்றும் தொழில் வழங்குணர்கள் மத்தியில் அதிகம் வியாபித்துள்ளதனைக் காணலாம்.
1. இன்று பாடசாலைகளில் அரங்கேறிக்கொண்டு இருக்கும் வன்முறைகட்கு, சீர்கேடுகளுக்கு பாடசாலை, சமுகம் ஆகியவற்றை வழி நடாத்துபவர்கள், பெற்றோர் ஆகியோர்கள்தான் முக்கிய பொறுப்புக் கூறவேண்டியவர்கள். சமுகத்தில் இன்று அரைகுறையாகப் படித்தவர்களிடையே தாழ்வு மனப்பான்மை அதிகரித்துக் காணப்படுவதனைக் காணலாம். இவர்கள் தங்களை சமுகத்தில் தங்களது உள்ளார்ந்த திறமைகள் மூலம் நிருபித்துக்காட்ட முடியாதவர்களாக உள்ளமையாலும். இவர்களது அகம் தங்களை பிரச்சினைகள், விதண்டாவாதம் ஆகியன உள்ள இடத்தில் சென்று தாங்கள் அக்கறையுள்ளவர்கள், தலைவர்கள் என காட்ட ஊக்குவிப்பதனாலும் அவர்கள் அதை பயன்படுத்த தவறுவதில்லை. இவற்றையெல்லாம் ஊர் அரசியலாக்கி லாபமுறப் பார்கின்றனர்.
இதை பல இடத்தில் அவதானிக்கலாம். இவர்கள் இவ்வாறான இடத்துக்கு பகுத்தறியாமல், நிதானமற்ற முறையில் சென்று முடிவெடுத்து, சட்டதிட்டங்களை மதியாமல் அந்த ஒட்டுமொத்த சமுகத்துக்கே அவமானத்தினைத் தேடித்தந்து அவர்களும் அகப்பட்டு விடுகின்றனர்.. இவர்கள் கல்வியோடு, ஆழுமைப்பண்போடு அல்லது தகுதியோடு கூடிய தலைமைத்துவத்தினைப் புறக்கணிக்கும் மனநிலையினையும், தமக்கு சாதகமாவர்களை கீழ்நிலைப் பதவிகளில் அமர்த்தி தனது வேலைகளை முடிப்பதனையுமே வழக்கமாகக் கொண்டிருப்பர். இவ்வாறான இடை நிலை குழுக்களினாலேயே அதிக பிரச்சினைகள் தோற்றம் பெறுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
2. இன்னொரு சவால் பாடசாலைக் கல்வி மூலம் சமுகத்துக்கு பயனுள்ளவர்கள் உருவாக்கப்படுவதற்கு பதிலாக விரோதமானவர்கள், வன்முறையாளர்கள் விதைக்கப்படுவதற்கு காரணம் பாடசாலை மூலமான கல்வியில் நம்பிக்கை இழந்து அதற்கு முக்கியம் அளிக்கப்படாமையே எனக் கூறலாம். பாடசாலைக்கு செல்லும் அதிக மாணவர்கள் தங்கள் நேரத்தை கடத்துவதற்காக செல்லும் மனநிலை, பிரத்தியேக வகுப்புக்களில் வைத்துள்ள அதீத நம்பிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. அதனால் பாடசாலையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான நல்ல உறவினை முறித்து, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை கொடுக்காத, அந்த ஆசானுக்கு மாணவர்கள் கட்டுப்படாத நிலையில் எடுத்ததுக்கெல்லாம் பாடசாலையில் ஆசிரிய மாணவ வன்முறை பிறந்துவிடுகின்றது.
3. அடுத்த பெரிய சவாலாக எம்முன் இருப்பது, ஆசிரியர்கள் மத்தியில் சட்டம் பற்றிய தெழிவு குறைவாகக் காணப்படுகின்றமையாகும். இதனால் அவர்கள் இலகுவில் துஷ்பிரயோகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ள வழிவகுக்கின்றமை ஒட்டு மொத்த ஆசிரிய சமுகத்துக்கும் அவமானத்தினை ஏற்படுத்துகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் ஆரம்ப கால ஆசிரியர்களிடையே ஒழுக்கக் கல்வி பலமாக விதைக்கப்பட்டிருந்ததனால் அந்த அறத்தின் மீதான நம்பிக்கையில் அந்தத்தொழில்லை கண்ணியமாகக் கருதியே செய்து வந்திருக்கின்றனர்.
4. எமது நாடு இறைமையுள்ள சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு நாடாகும். இங்கு சண்டித்தனத்துக்கு இடமில்லை அவை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனால் அந்தச் சட்டத்தில் உள்ள ஓட்டையை சில அதிகாரிகள் பயன்படுத்தி குற்றச் செயல்களை மூடி மறைக்கும் வேளையில்தான் மக்கள் அதை எதிர்த்து ஆர்பாட்டங்கள், குழப்படிகளில் இறங்கிவிடுவதனைக் காணலாம். அதற்காக ஒன்றுமே முன்பின் தெரியாதவர்கள் கூட இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தங்களை சண்டியர்களாக காட்டி பேனை பெருமாள் ஆக்கி உண்மைத்தன்மை அறியாமல் செய்யும் றகளைகளால் அந்த சூழலுக்கே பாதிப்பினை ஏற்படுத்துபவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆகவே பாடசாலை என்பது ஒரு ஆலயத்தினை விட பன்மடங்கு மேலாகவே என்னால் பார்க்கப்படுகின்றது. ஏனெனில் ஒரு குடும்பத்தின், சமுகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கான மூல காரணமாக இவை இருந்து வருகின்றது. இவை சரியான முறையில் இயங்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர்பு இன்றியமையாததாகும். இந்த வட்டத்துக்குள் காலம் காலமாக பிரச்சினைகள் எழுவதும் பின்பு அவை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுவதும் தான் இயல்பு. இந்த வட்டத்துக்குள் அடங்காதவற்றை சட்ட அதிகாரிகள் மூலம் அல்லது மேலதிகாரிகளின் உதவியுடன் தீர்த்துவைப்பதுதான் வழமை.
இந்த செயற்பாட்டை வலுப்படுத்த மேலுள்ள மூன்று வகுப்பினருக்கிடையிலுமான தொடர்பினை வலுப்படுத்தவேண்டும். ஆசிரியர்களுக்கு புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற சட்ட திட்டங்கள் மற்றும் அவற்றுக்காக தண்டனைகள் பற்றி தெழிவினை ஏற்படுத்த வேண்டும். இந்த அமைப்புக்குள் அல்லாத எந்த ஒருவருக்கும் பாடசாலையில் தலையிடுவதற்கான அனுமதி தேவையில்லாமல் வழங்கப்படுவதை நிறுத்துவதற்கான பலமான விதிமுறைகளை பெற்றோரின் ஆதரவுடன் நிறுவுதல் வேண்டும்.
மாணவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றை அணுகுவதற்கான சரியான பாதையினை வகுத்து அவை அவர்கள் மதத்தியில் விழிப்பூட்டப்பட்டு பிரச்சினைகள் வருமுன் காக்கும் செயற்திட்டங்களை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும். இதனால் எமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தினை கீறல் விழாமல் பாதுகாத்துக்கொள்வதோடு, எமது பாடசாலைகளுக்கும் கிராமங்களுக்கும் ஏற்படும் அபகீர்த்தி, பாதிப்புக்களில் இருந்து தவிர்த்துக்கொள்ளலாம்.
வெளிப்படைத்தன்மையினை பொறுப்புக்கூறலை மேற்கூறிய முக்கோண அமைப்புக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் கிராம நலன் விரும்பிகளின் பாடசாலை மீதான நம்பிக்கையினையும் விரும்புதலையும் கட்டியெழுபலாம் அத்துடன் அவர்களின் ஆதரவினையும் பாடசாலை முன்னேற்றத்துக்கென ஏற்படுத்திவிடலாம். ஆக வன்முறையான ஒரு சூழலை தவிர்து ஆக்க பூர்வமான முடிவுகளை எடுப்பதன் மூலமே இளம் குழந்தைகளிடையே அவற்றை தெரியப்படுத்தாமல் எதிர்கால வன்முறையற்ற தலைவர்களை பிரசுரிக்க முடியும் எனடபதே எனது அபிப்பிராயமர்கும்.
0 comments:
Post a Comment