ADS 468x60

23 March 2019

நிலை மாறுமா?

வெறும் தண்ணீரை மாத்திரம் நம்பி இருக்கின்ற குவைத் முன்னேறிவிட்டது, வெறும் காடுகளை மாத்திரம் நம்பி இருக்கின்ற பிலிபைன்ஸ் முன்னேறிவிட்டது, வெறும் மாடுகளை மாத்திரம் மாத்திரம் நம்பி இருக்கின்ற டென்மார்க்; முன்னேறிவழட்டது, வெறும் மணிக்கூடுகளையே உற்பத்திப பண்ணுகின்ற சுவிட்சலாந்து முன்னேறிவிட்டது, வெறும் நிலப்பரப்பினை மாத்திரம் வைத்திருக்கின்ற அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது, வெறும் அறிவியலை மாத்திரம் நம்பி இருக்கின்ற அமெரிக்கா முன்னேறிவிட்டது, வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் வைத்திருக்கின்ற சோவியத்ரஸ்யா முன்னேறிவிட்டது. நம்மள கொஞ்சம் திரும்பிப்பார்க்கணும், இன்றைக்கு நம்ம பிரதேசத்தில் குறிப்பாக தமிழர்கள் வாழுகின்ற பிரதேசங்களில் என்ன வளம் இல்லை? ஆழுமையுள்ள மனிதம் இருக்கு, மலை இருக்கு, மாடிருக்கு, காடிருக்கு களணியிருக்கு, மேடிருக்கு குடிக்க நீரிருக்கு இருந்தும்;, 


நாம் தான் வறுமைக்கோட்டிற்குள் வாழுகின்ற அதிகமான இனம்
நாம் தான் அதிகுறைந்த வருமானம் பெறும் குடிமக்கள்
நாம்தான் அதிகுறைந்த கல்வித்தரத்தில் உள்ள குடியினம் 
நாம்தான் அடிமைகளாக கூலிவேலை செய்யும் ஒரு படை
நாம்தான் வாழ்வெட்டு கலவரத்தில் பேர் போன ஒரு குலம்
நாம் தான் அதிக சாராயம் குடித்து பேரெடுக்கும் ஒரு துர்பாக்கியசாலிகள்!

ஆக எல்லா மோசமான நிலைகளிலும் முன்னேறிவிட்டோம்!

எப்போது நாம் வீதிகளில் இறங்கி வேலைகேட்காத, நம்பிக்கையுடன், எப்போது நாம் சுயதொழில் சார்ந்த நம்பிக்கையுடன், எப்போது நாங்கள் எமது அறிவார்ந்த அனுபவமுள்ள டயஸ்போராக்களின் பகிர்தலுடன், எப்போது நாம் பிறருக்கும் உதவவேண்டும் என்ற கற்றவர்களின் உயிர்ப்புடன் போட்டித்தன்மை கொண்டவர்களாக எமது குடும்ப, சமுக, பிரதேச மற்றும் நாட்டு முன்னேற்றத்தினை மனதில் பதிக்கின்றோமோ அந்தக் கணமே நாம் வெறும் மனித வளத்துடன் முன்னணியில் திகழலாம்.

0 comments:

Post a Comment