ADS 468x60

15 March 2019

ஆராய்ச்சி மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவோம்

சுகாதார துறையில் ஆராய்ச்சி மூலம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்வது பெருமை அளிக்கிறது! இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவலில் சமூக மற்றும் குடும்ப காரணிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களை ஐயா பேராசிரியர் ஹிரான் டயஸ், பேராசிரியர் விக்கிரம் மற்றும் பேராசிரியர் துலித விக்ரம போன்ற மதிப்பிற்குரிய பேராசிரியர்களடங்கலாக ஒரு துறைசார் நிபுணர் குழுவுடன் இணைந்து வழங்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தது.

இவ்வாய்வினை நடாத்த எல்லா ஒழுங்குகளையும் எமது துறைசார் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தோழோடு தோழ்நின்றுதவிய அந்த நாட்களை இன்று நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இந்த ஆராய்ச்சி மூலம் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைககும் வாய்ப்பை அதிகரித்தோம். அதற்காக டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளோம்.
எனவே செயல்படுத்தக்கூடிய தீர்வுகளாக மாற்றப்படும் ஆராய்ச்சி தான் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
எங்கள் ஆராய்ச்சிக் குழுவின் ஒத்துழைப்பு மனப்பான்மையும், இந்த ஆராய்ச்சியின் பிரதிபலிப்பினையும் கண்டு நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். எனவே பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்து செயல்படுத்துவோம்!
குறிப்பு: கருத்தரங்கு முடிந்தபின்னர் எடுக்கப்பட்ட குழு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் பங்கு: இது போன்ற தரமான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அரசு ஊக்குவிப்பது
இந்த ஆய்வின் இணைப்புக்கள்: Link of full study:

0 comments:

Post a Comment