ADS 468x60

13 February 2020

கிழக்கு மாகாணமே இணையத் திறனறிவில் கடைசியாக உள்ளமை வேலையற்ற இளைஞர்களுக்கு பஞ்சமில்லாதாக்கியுள்ளது.

நம் நாடு பல பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்து வருகின்றது.  2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை அல்லது துண்டுவிழும் தொகை 7 வீதம் என மதிப்பிடப்பட்ட ஒரு சவாலான பொது நிதி நிலைமையில் அது ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாயில் அதிகூடிய குறைப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான பல ஊக்கத்தொகைகளை தயார்பண்ணவேண்டிய ஒரு சங்கடத்தில் இருந்து வருகின்றது எமது நாடு. இத்தனை பிரச்சினைகளுக்கும் அப்பால் புதிதாக வந்துள்ள அரசு 150,000 பேரினை அரச துறையில் இணைத்துக்கொள்ளவும் எத்தணித்து வருவது  எமது திறைசேரி அல்லது கஜானாவில் உள்ள பணத்தொகையுடன் ஒப்பிடும்போது பாரிய சவாலாகவும் தலையிடியாகவும் அரசுக்கு மாறி இருக்கின்றது இன்று. 


வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அரசாங்கம் எப்பாடுபட்டாயினும் வாக்குகளைப் பெற்று வெற்றிபெறவே விரும்புகிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் ஏலவே மேலதிக அரச பணியாளர்களால் நிரம்பி வளியும் ஒரு துறைக்கு புதிதாக உருவாக்க இருக்கும் வேலைகள் ஓய்வூதியம் எனும் ஒரு பதிய குண்டை உருவாக்கியுள்ளது.

எனவே இலங்கை இளைஞர்களுக்கு வேறு துறையில் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெற ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியுமா, இதை ஊக்குவிக்க என்ன செய்ய முடியும் என கல்வியியலாளர்களும், பொருளியல் அறிஞர்களும் தலையை முட்டிக்கொண்டிருக்கின்றனர்.

சனத்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் அறிக்கைப்படி, 2018 இல் 29 விகித கணணி அறிவு வளர்சியுடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் கல்வியறிவானது 42.4 விகிதமாக உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும், கணினி கல்வியறிவு ஓரளவு வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது, 2017 ஆம் ஆண்டின்  28.6 விகிதம் கணணி கல்வி அறிவுடன் ஒப்பிடும் பொழுது வெறும் 0.6 விகிதம் அதிகரிப்பு மாத்திரமே 2018 இல் பதிவாகியுள்ளமை கோடிட்டுக்காட்டவேண்டியதொன்றாகும். இவை இரண்டு துறை அறிவும் இலங்கையின் மேல்மாகாணத்திலே அதிகமாகக் காணப்படுகின்றது. அடுத்து தென் மாகாணம் 30 விகிதமாகவும் கிழக்கு மாகாணமே அதிகுறைந்த அளவான 14.8 விகித கணனி மற்றும் டிஜிடல் திறனறிவு கொண்ட மக்களைக்கொண்ட பகுதியாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

இன்ரநெற்றினை பிரயோகிக்கும் திறனறிவு அந்த மக்களிடையே எதையும் எதிர்நோக்கும் சக்திவாய்ந்த ஒரு சொத்தாகNவு இந்த நவீன உலகில் அளவிடப்படுகின்றது. அது கல்வி கற்கும் உரிமையுள்ள அனைவருக்கும் உரித்தானது. அதுவே ஒரு மனிதனுக்கு சமுகத்தில் முன்னிற்கவும், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதனிலை அடையவும் சக்தி தருகின்றது. இருப்பினும் உலகின் அரைவாசி மக்கள் தொகை இன்னும் ஓவ்லைனிலே இருக்கின்றனர் என அறிக்கை சொல்லுகின்றது. அதில் 3.9 பில்லியன் மக்கள் பெண்களாவார்கள் அதுபோன்று இந்த தொகையில் அதிகமானோர் எம்போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பிடத்தக்க பலர் இன்னும் நகர்புறங்களில் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் எப்படி ஒரு இன்ரெநெற்றை பயன்படுத்துவது என்று தெரியாமல் தொடரும் அவலம் ஒன்றுபட்ட வளர்சிக்கு தடையாக உள்ளது, குறிப்பாக இதில் அதிகம் பெண்கள் இருக்கின்றனர். பின்தங்கிய நகர்புறங்களில் கூட அங்குள்ள பெண்கள் 1.6 தடவை அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்ரநெற்றை பயன்படுத்த முடியாதவர்களில் ஐ.சி.ரி என்பது கல்வியறிவு திறன்களை வளர்ப்பதற்கும் கல்வியை அணுகுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்தாலும், பொதுப் பாடசாலைகளில் இணையப் பாவனை மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சி அளிப்பதில் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சியை பாடசாலைகள் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக அனைத்து கல்வி மட்டங்களிலும், வாசிப்பு மற்றும் எழுதுதலுடன் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க அரசு அவசரமாக செயல்பட வேண்டும். 

டிஜிட்டல் திறன்கள் மற்றும் கல்வியை (குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு) முன் மற்றும் கொள்கை நிகழ்ச்சி நிரல்களின் மையமாக வைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். சிறுமிகளின் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உயர்த்துவதற்காக திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும், மேலும் தொழில்நுட்ப திறன்களை மட்டுமல்லாமல், அதிகாரம் மற்றும் உரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். 

அனைத்து பொதுப் பாடசாலைகளுக்கும் இணைய இணைப்பை வழங்குதல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஐ.சி.ரி பயிற்சி மற்றும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் பொருட்களை திறந்த கல்வி வளங்களுடன் மாற்றுவது, டிஜிட்டல் கல்வியறிவை டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தகவல் கல்வியறிவுடன் இணைத்தல் மற்றும் ஆன்லைனில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்களை சித்தப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் போன்றவை கருத்தில் எடுக்கவேண்டும்.

கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடவிதானங்களில் இருந்து அதிக பெண்கள் வெளியேறுவதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும்; இரண்டாம் நிலை கல்வியில் இவர்களுக்கு வாய்ப்புகளை மேம்படுத்துதல், குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மற்றொரு முக்கியமான தேவையாக உள்ளது. மூன்றாம் நிலை கல்வி வாய்ப்புகளுக்கு பெண்களுக்கு சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் உயர் மற்றும் மூன்றாம் நிலை கல்விக்கான பாலின இடைவெளியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் மற்றும் இலங்கையில் ஆங்கில அறிவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகவும் இருக்கின்றது. இலங்கை கல்வியறிவானது படிப்பதிலும் எழுதுவதிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, மேலும் இந்த வெற்றியை டிஜிட்டல் கல்வியறிவுக்கு வளமான எதிர்காலத்திற்காக விரிவுபடுத்த வேண்டிய நேரம் இது.

0 comments:

Post a Comment